கலியுகப் பொங்கல்

pongal.jpg

கணினி நிறுவனங்களின்
வாசல்களில்
மின் விளக்கு அடுப்பில்
தெர்மாகோல் பொங்கல்
‘Happy Pongal” வாசகங்களுடன்.

பொங்கலின் பொருள் தெரியா
கழுத்துப் பட்டை
மென் பொறியாளர்களுக்கு
மின்னஞ்சல் உதடுகள்
காதலியரிடமிருந்து.

நாளை விடுமுறை
ஏதோ some பொங்கலாம்
ஈ.சி.ஆர் போலாமா
கொஞ்சலுடன் பேசிக்கொண்டன
சாட் அறைகள்.

நாளைக்கு பொங்கலா ?
அப்போ
சன் டிவியிலே என்ன படம் ?
சாய்வாய் அமர்ந்து
ரிமோட் திருகும்
குடியிருப்பு வாசிகள்.

பேட்டிகளின் திணிப்பால்
‘கோலங்கள்’ பார்க்க முடியாத
பதட்டத்தில்
வீட்டு அம்மாக்கள்.

பொங்கலுக்கு
இரண்டு நாள் லீவில்
ஊருக்கு போகும் ஆசையுடன்
தூரத்து பணியாளன்.

தமிழன்
‘எப்போது பொங்குவான்
தன் நிலைகண்டு’
பட்டிமன்றங்கள் பொதிகையில்.

ரங்கநாதன் தெருக்களிலும்
பிட்சா கார்னர்களிலும்
நகைக்கடைகளிலும்
கொடிகட்டிப் பறக்கும்
விடுமுறை வருமானம்

வலிகளின் வரவால்
எலிகளைத் தின்று
வளைகளில் வாடும்
விவசாயத் தோழன் மட்டும்
கடன் வாங்கிப் பொங்குகிறான்
பொங்கல்.

பொங்கலோ பொங்கல்.
பொங்கலோ பொங்கல்.

16 comments on “கலியுகப் பொங்கல்

 1. //கணினி நிறுவனங்களின்
  வாசல்களில்
  மின் விளக்கு அடுப்பில்
  தெர்மாகோல் பொங்கல்
  ‘Happy Pongal” வாசகங்களுடன்.

  பொங்கலின் பொருள் தெரியா
  கழுத்துப் பட்டை
  மென் பொறியாளர்களுக்கு
  மின்னஞ்சல் உதடுகள்
  காதலியரிடமிருந்து.//

  அப்போ மத்த துறையில் இருக்கும் மகான்களுக்கு எல்லாம் பொங்கலின் அர்த்தம் ரொம்பவும் தெரியுமா?

  ரொம்பத்தான் உணர்ச்சியில் பொங்குறீங்க! இக்கவிதை முதல் இரண்டு பத்திகளுக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்

  Like

 2. //வலிகளின் வரவால்
  எலிகளைத் தின்று
  வளைகளில் வாடும்
  விவசாயத் தோழன் மட்டும்
  கடன் வாங்கிப் பொங்குகிறான்
  பொங்கல்//

  மேற்கூறிய வரிகள் விவசாயிகளின் துயர வாழ்க்கையின் யதார்த்தத்தைக் கோடிட்டுக்காட்டுகின்றது. நல்ல கவிதை.

  அனைவரது வாழ்வும் சிறப்புற, இனிமையாய் அமைந்திட குதூகலம் பொங்கலோ பொங்கல் எனப் பொங்கிட என் பொங்கல் வாழ்த்துக்கள்!

  Like

 3. //
  அப்போ மத்த துறையில் இருக்கும் மகான்களுக்கு எல்லாம் பொங்கலின் அர்த்தம் ரொம்பவும் தெரியுமா?

  ரொம்பத்தான் உணர்ச்சியில் பொங்குறீங்க! இக்கவிதை முதல் இரண்டு பத்திகளுக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்
  //

  கண்டனங்களுக்கு நன்றி 🙂 நான் சார்ந்த துறை பற்றி தான் நான் பேசமுடியும் 🙂

  Like

 4. Hi Xavier,
  வலிகளின் வரவால்
  எலிகளைத் தின்று
  வளைகளில் வாடும்
  விவசாயத் தோழன் மட்டும்
  கடன் வாங்கிப் பொங்குகிறான்
  பொங்கல்.
  These lines cite the the livelihood condition of our farmer society .It bashes right in the face of society which turns deaf ears to the cries of the farmers till their death.
  Also, it is painful to realise that one who deserves to enjoy and has to celebrate is still under poverty.
  however by saying சற்றே நீங்கள் சொன்னது போல for my last feedback (to write about the entire cultivation process) , you made me not to ask why it has not come in the way i requested for.
  Nowadays,software engineers are pulled in all the arguments ranging from increase in real estate boom to the spoiling of society and you have also did not give an exception for this.
  who knows?in future, software engineers may be blamed for hike in petrol prices by the public.
  I accept that with no comments.
  Then at the same time ,pen down the turmoil that the software engineer is undergoing by working on weekends, stretching for long hours,pulse beats going lower for him with ruppe appreciation .
  Let the people know the other side of the software engineer through your lines that can reflect the hard reality.

  Like

 5. ம்ம்… எந்த அலுவலகத்தில் வேலை பார்க்கிறீர்கள் பாஷா ? சென்னை இல்ல…..பெங்களுரு இல்ல….ஹைதராபாத் இல்ல….
  புனே இல்ல…….பாம்பே இல்ல……கூர்க்கான் இல்ல.ஆனா இந்தியாலதான் இருக்கேன்……
  கண்டுபிடிங்க பார்க்கலாம்-:)

  Like

 6. //ம்ம்… எந்த அலுவலகத்தில் வேலை பார்க்கிறீர்கள் பாஷா ? சென்னை இல்ல…..பெங்களுரு இல்ல….ஹைதராபாத் இல்ல….
  புனே இல்ல…….பாம்பே இல்ல……கூர்க்கான் இல்ல.ஆனா இந்தியாலதான் இருக்கேன்……
  கண்டுபிடிங்க பார்க்கலாம்-:)//

  இவ்ளோ இடமும் இல்லேன்னா கேரளா தான் !… திருவனந்தபுரம் ? எர்ணாகுளம் ?.

  Like

 7. சேவியர்,
  அருமையான கட்டுரை கவிஞரே
  தாங்கள் எழுதவில்லை என்று நினைத்து சொல்லியதற்கு மன்னிப்பு தெரிவித்து கொள்கிறேன்.

  இப்படிக்கு
  குகன்

  Like

 8. நன்றி குகன். ‘மன்னிப்பு’ என்றெல்லாம் சொல்லி என்னை தர்மசங்கடத்துக்கு ஆளாக்காதீர்கள்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.