சில்மிஷக் காதல்

love9.jpg

‘உனக்கு என்ன வேண்டும்’
என
கொஞ்சலாய்
நீ கேட்பதே
போதுமானதாய் இருக்கிறது
என் பிறந்த நாளுக்கு.

love7.jpg
உன்
புன்னகைப் பட்டாம்பூச்சிகளில்
இரண்டை
என் விரல்களில் வளர்க்க
ஆசிக்கிறேன்,
என்
சலிப்பான நாட்களை
வானவில் கோடிட்டு முடித்துக் கொள்ள.

love2.jpg
நடமாட்டம்
இடமாற்றம் பெற்று
தனிமை வந்து சூழ்ந்த பின்னும்,
வெளிச்சம்
வெளியேறிப் போய்
இருட்டு வந்து அமர்ந்த பின்னும்
நம் விரல்கள்
தடுமாறாமல் இருந்திருந்தால்
அதை நட்பென உரைத்திருப்பேன்.

love1.jpg
நீ
என்னுடன் பேசிமுடித்து
புறப்பட்ட பின்
அருகில் வந்து
அமர்ந்து கொள்கின்றன
நீ
பேசிய வார்த்தைகளும்
நான்
பேச நினைத்த வார்த்தைகளும்

love3.jpg
புலன்களின் உரையாடல்
புலப்படுத்துகிறது
நட்புக்குள் ஒளிந்திருக்கும்
காதலை

love6.jpg
வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம்
பேசுகிறது நட்பு
வாய்ப்புக் கிடைக்காத போதும்
பேசுகிறது காதல்.

love4.jpg
நட்பு
உலகைப் பற்றி
உதடுகளால் பேசுகிறது
காதல்
உதடுகளைப் “பற்றி”
உணர்வுகளால் பேசுகிறது

love8.jpg
நமக்குள் இருப்பது
நட்போ என நான்
சந்தேகிக்கும் வேளைகளிலெல்லாம்
மறுத்திட வருகின்றன
உன்
சிறு சிறு ஸ்பரிசங்கள்

love5.jpg

கரம் கோர்த்து
நடக்கும் பொழுதுகள்
கவித்துவமானவை,
அவை
ஆயுள் ரேகையின்
ஒப்பந்தத்தை நீட்டிக்கும்
பத்து விரல் முத்திரைகள்.

lov10.jpg
உன்
அழகைப் புறக்கணித்து
என்னிடமிருந்து
கவிதைகள் எதுவும்
புறப்படுவதில்லை.
உனக்கான
பொங்கல் வாழ்த்து உட்பட
 

25 comments on “சில்மிஷக் காதல்

  1. அன்பு சேவியர்,

    எனக்கு இங்கே நீங்கள் இட்ட மறுமொழி, என் மின்னஞ்சல் பெட்டியில் வந்து விழாதா?

    அன்புடன் புகாரி

    Like

  2. வாருங்கள் புகாரி. வருகைக்கு மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து வருகை தாருங்கள்.

    கவிதை குறித்த கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    Like

  3. ============
    நீ
    என்னுடன் பேசிமுடித்து
    புறப்பட்ட பின்
    அருகில் வந்து
    அமர்ந்து கொள்கின்றன
    நீ
    பேசிய வார்த்தைகளும்
    நான்
    பேச நினைத்த வார்த்தைகளும்
    =========

    ஒவ்வொன்றும் தனித்தனியே நன்றாக இருக்கின்றன சேவியர். என்னை முதலில் தொட்டது இதுதான். அடுத்து

    =======
    கரம் கோர்த்து
    நடக்கும் பொழுதுகள்
    கவித்துவமானவை,
    அவை
    ஆயுள் ரேகையின்
    ஒப்பந்தத்தை நீட்டிக்கும்
    பத்து விரல் முத்திரைகள்.
    ========

    அருமை

    அன்புடன் புகாரி

    Like

  4. மனமார்ந்த நன்றிகள் கெளதமன். இவையெல்லாம் சிறு சிறு கவிதைகள், அதற்குப் பொருத்தமான படங்கள் போட நினைத்தேன்.

    உங்கள் விரிவான பதிலுக்கும், அன்புக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    Like

  5. இந்த கவிதை நன்றாக இருக்கிறது. கவிதைகளை கூறு போட்டு விமர்ச்சிப்பதில் எனக்கு எப்போதும் சம்மதம் இருந்ததில்லை. எனினும் உங்கள் எழுத்துக்களை விரும்பு வாசிப்பதனாலோ என்னவே என் என்னங்களை பரிமாறிக்கொள்ள எண்ணினேன்.

    1. கவிதையின் செறிவையும் ஓட்டத்தையும் உடைப்பதாக உள்ளன அந்த புகைப்படங்கள்
    2. அதே போல சில இடங்களில் வரும் வரிகள் அதற்கு முந்தைய கவித்துவமான் வரிகளின் அடர்த்தியை குறைப்பதாக உள்ளதாக எனக்கு தேன்றுகிறது….(தேன்றுகிறது…அவ்வளவே)

    எடுத்துகாட்டாக…..

    //நீ
    //என்னுடன் பேசிமுடித்து
    //புறப்பட்ட பின்
    //அருகில் வந்து
    //அமர்ந்து கொள்கின்றன
    //நீ
    //பேசிய வார்த்தைகளும்
    //நான்
    //பேச நினைத்த வார்த்தைகளும்

    இந்த கவித்துவமான, செறிவுமிக்க உணர்வுகளை அடுத்து வரும் வரிகள் சற்று சலசலக்க செய்வதாய் தோண்றுகிறது……

    //புலன்களின் உரையாடல்
    //புலப்படுத்துகிறது
    //நட்புக்குள் ஒளிந்திருக்கும்
    //காதலை

    மீன்டும் பின்வரும் வரிகளில் சூடுபிடிக்கும் வரை மெதுவாக நகர்கிறது கவிதை…

    //நமக்குள் இருப்பது
    //நட்போ என நான்
    //சந்தேகிக்கும் வேளைகளிலெல்லாம்
    //மறுத்திட வருகின்றன
    //உன்
    //சிறு சிறு ஸ்பரிசங்கள்

    எனக்கு கவிதைகளில் அதிக பரிச்சியம் கிடையாது…..எனவே இது எனக்கு தோண்றியது அவ்வளவே. நான் எந்த உலக அளவுகோள்களையும் கொண்டு இதை அளக்கவில்லை….அப்படி செய்வதில் சிறிதளவு நம்பிக்கையும் இல்லை……

    நட்புடன் கௌதமன்.

    Like

  6. //நீ
    என்னுடன் பேசிமுடித்து
    புறப்பட்ட பின்
    அருகில் வந்து
    அமர்ந்து கொள்கின்றன
    நீ
    பேசிய வார்த்தைகளும்
    நான்
    பேச நினைத்த வார்த்தைகளும்//

    அழகான வரிகள்,
    அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    Like

  7. “‘உனக்கு என்ன வேண்டும்’
    என
    கொஞ்சலாய்
    நீ கேட்பதே
    போதுமானதாய் இருக்கிறது
    என் பிறந்த நாளுக்கு”
    The above words shows the meaning of true love “Love expects Love only”…

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.