‘உனக்கு என்ன வேண்டும்’
என
கொஞ்சலாய்
நீ கேட்பதே
போதுமானதாய் இருக்கிறது
என் பிறந்த நாளுக்கு.
உன்
புன்னகைப் பட்டாம்பூச்சிகளில்
இரண்டை
என் விரல்களில் வளர்க்க
ஆசிக்கிறேன்,
என்
சலிப்பான நாட்களை
வானவில் கோடிட்டு முடித்துக் கொள்ள.
நடமாட்டம்
இடமாற்றம் பெற்று
தனிமை வந்து சூழ்ந்த பின்னும்,
வெளிச்சம்
வெளியேறிப் போய்
இருட்டு வந்து அமர்ந்த பின்னும்
நம் விரல்கள்
தடுமாறாமல் இருந்திருந்தால்
அதை நட்பென உரைத்திருப்பேன்.
நீ
என்னுடன் பேசிமுடித்து
புறப்பட்ட பின்
அருகில் வந்து
அமர்ந்து கொள்கின்றன
நீ
பேசிய வார்த்தைகளும்
நான்
பேச நினைத்த வார்த்தைகளும்
புலன்களின் உரையாடல்
புலப்படுத்துகிறது
நட்புக்குள் ஒளிந்திருக்கும்
காதலை
வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம்
பேசுகிறது நட்பு
வாய்ப்புக் கிடைக்காத போதும்
பேசுகிறது காதல்.
நட்பு
உலகைப் பற்றி
உதடுகளால் பேசுகிறது
காதல்
உதடுகளைப் “பற்றி”
உணர்வுகளால் பேசுகிறது
நமக்குள் இருப்பது
நட்போ என நான்
சந்தேகிக்கும் வேளைகளிலெல்லாம்
மறுத்திட வருகின்றன
உன்
சிறு சிறு ஸ்பரிசங்கள்
கரம் கோர்த்து
நடக்கும் பொழுதுகள்
கவித்துவமானவை,
அவை
ஆயுள் ரேகையின்
ஒப்பந்தத்தை நீட்டிக்கும்
பத்து விரல் முத்திரைகள்.
உன்
அழகைப் புறக்கணித்து
என்னிடமிருந்து
கவிதைகள் எதுவும்
புறப்படுவதில்லை.
உனக்கான
பொங்கல் வாழ்த்து உட்பட
//alagai erukkirai//
நகைச்சுவைக்கு நன்றி 🙂
LikeLike
alagai erukkirai
LikeLike
தெரியவில்லையே புகாரி .. வேர்ட் பிரஸ் ல் அப்படி ஒரு வசதி இருக்கிறதா ?
LikeLike
அன்பு சேவியர்,
எனக்கு இங்கே நீங்கள் இட்ட மறுமொழி, என் மின்னஞ்சல் பெட்டியில் வந்து விழாதா?
அன்புடன் புகாரி
LikeLike
வாருங்கள் புகாரி. வருகைக்கு மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து வருகை தாருங்கள்.
கவிதை குறித்த கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
LikeLike
நன்றி கலையரசன்.
LikeLike
============
நீ
என்னுடன் பேசிமுடித்து
புறப்பட்ட பின்
அருகில் வந்து
அமர்ந்து கொள்கின்றன
நீ
பேசிய வார்த்தைகளும்
நான்
பேச நினைத்த வார்த்தைகளும்
=========
ஒவ்வொன்றும் தனித்தனியே நன்றாக இருக்கின்றன சேவியர். என்னை முதலில் தொட்டது இதுதான். அடுத்து
=======
கரம் கோர்த்து
நடக்கும் பொழுதுகள்
கவித்துவமானவை,
அவை
ஆயுள் ரேகையின்
ஒப்பந்தத்தை நீட்டிக்கும்
பத்து விரல் முத்திரைகள்.
========
அருமை
அன்புடன் புகாரி
LikeLike
அத்தனையும் தேன் துளிகள்.
LikeLike
மனமார்ந்த நன்றிகள் கெளதமன். இவையெல்லாம் சிறு சிறு கவிதைகள், அதற்குப் பொருத்தமான படங்கள் போட நினைத்தேன்.
உங்கள் விரிவான பதிலுக்கும், அன்புக்கும் மனமார்ந்த நன்றிகள்.
LikeLike
இந்த கவிதை நன்றாக இருக்கிறது. கவிதைகளை கூறு போட்டு விமர்ச்சிப்பதில் எனக்கு எப்போதும் சம்மதம் இருந்ததில்லை. எனினும் உங்கள் எழுத்துக்களை விரும்பு வாசிப்பதனாலோ என்னவே என் என்னங்களை பரிமாறிக்கொள்ள எண்ணினேன்.
1. கவிதையின் செறிவையும் ஓட்டத்தையும் உடைப்பதாக உள்ளன அந்த புகைப்படங்கள்
2. அதே போல சில இடங்களில் வரும் வரிகள் அதற்கு முந்தைய கவித்துவமான் வரிகளின் அடர்த்தியை குறைப்பதாக உள்ளதாக எனக்கு தேன்றுகிறது….(தேன்றுகிறது…அவ்வளவே)
எடுத்துகாட்டாக…..
//நீ
//என்னுடன் பேசிமுடித்து
//புறப்பட்ட பின்
//அருகில் வந்து
//அமர்ந்து கொள்கின்றன
//நீ
//பேசிய வார்த்தைகளும்
//நான்
//பேச நினைத்த வார்த்தைகளும்
இந்த கவித்துவமான, செறிவுமிக்க உணர்வுகளை அடுத்து வரும் வரிகள் சற்று சலசலக்க செய்வதாய் தோண்றுகிறது……
//புலன்களின் உரையாடல்
//புலப்படுத்துகிறது
//நட்புக்குள் ஒளிந்திருக்கும்
//காதலை
மீன்டும் பின்வரும் வரிகளில் சூடுபிடிக்கும் வரை மெதுவாக நகர்கிறது கவிதை…
//நமக்குள் இருப்பது
//நட்போ என நான்
//சந்தேகிக்கும் வேளைகளிலெல்லாம்
//மறுத்திட வருகின்றன
//உன்
//சிறு சிறு ஸ்பரிசங்கள்
எனக்கு கவிதைகளில் அதிக பரிச்சியம் கிடையாது…..எனவே இது எனக்கு தோண்றியது அவ்வளவே. நான் எந்த உலக அளவுகோள்களையும் கொண்டு இதை அளக்கவில்லை….அப்படி செய்வதில் சிறிதளவு நம்பிக்கையும் இல்லை……
நட்புடன் கௌதமன்.
LikeLike
மிக்க நன்றி திருஞான சம்பந்தம்.
LikeLike
very very super
LikeLike
Thanks Anand
LikeLike
Simply Superb…Very Romantic lines…
LikeLike
நன்றி shauon !
LikeLike
நன்றி பிரஷான்.
LikeLike
அருமை…..
LikeLike
excellent and fantastic
LikeLike
நன்றி குந்தவை
LikeLike
//நீ
என்னுடன் பேசிமுடித்து
புறப்பட்ட பின்
அருகில் வந்து
அமர்ந்து கொள்கின்றன
நீ
பேசிய வார்த்தைகளும்
நான்
பேச நினைத்த வார்த்தைகளும்//
அழகான வரிகள்,
அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.
LikeLike
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙂
LikeLike
அழகான வரிகள் உணர்வுகளை அள்ளி எடுத்து வருகின்றன. 🙂
LikeLike
“‘உனக்கு என்ன வேண்டும்’
என
கொஞ்சலாய்
நீ கேட்பதே
போதுமானதாய் இருக்கிறது
என் பிறந்த நாளுக்கு”
The above words shows the meaning of true love “Love expects Love only”…
LikeLike
அருமை அருமை!!!!!
அழகான வரிகள்!!!!
LikeLike
Nice poem.
LikeLike