சொல்ல மறக்காத கதை

friends.jpg

நேர்கின்றன,
பழைய நண்பர்களை
எதேச்சையாய்
சந்தித்துக் கொள்ளும்
பரவசப் பொழுதுகள்.
.
கண்களில் மிதக்கும்
குறும்புகளைத் தொலைத்தும்,
உரக்கப் பேசும்
இயல்புகளைத் தொலைத்தும்
புது வடிவெடுத்திருக்கிறார்கள்
பலர்

.

பலருடைய
மனைவியர் பெயரில்
கல்லூரி கால
காதலியர் பெயர் இல்லை.

.

ஒருவேளை
குழந்தைகளின் பெயரில்
இருக்கக் கூடும்.

.

ஒல்லியானவர்களை
தொப்பையுடனும்,
குண்டானவர்களை
ஒல்லிக்குச்சானாகவும் சந்திக்க
நேர்ந்திருக்கிறது.

.

சாலையோர தேனீர் கடையில்
டீ குடித்து
நினைவு கிளறிய நிம்மதியில்
விடை பெறுகையில்
தவறாமல்
சொல்லிச் செல்கிறார்கள்.

.

வலி கூட்டும்
ஏதேனும் ஒரு மரணச் செய்தியை.

Advertisements

15 comments on “சொல்ல மறக்காத கதை

 1. எழுத்துக்கள் கூடி வார்த்தைகள்; வார்த்தைகள் கூடி வாக்கியங்கள்
  வாக்கியங்கள் வீதியில் வீச, பேச்சு கிடைக்கும்; சரியான பூக்கள்
  அளவோடு கோர்த்தால் கவிதை கிடைக்கும். நண்பர் உம் கவிதை
  வாடாமலர் மாலை மீது வாசம் தெளித்து விட்டதுபோல்
  அற்புதமான கவிதை. அழகான சொல் தேர்வு.

  Like

 2. நண்பரே ,
  சத்தம் இன்றி நகரும் சின்ன பூனை போல கடந்து செல்கின்றன வரிகள் .
  ஆனால் 5.6 அளவுக்கு மேலான ரிக்டர் அளவுகோல் பூகம்பத்தை உண்டாக்கி விட்டன கவிதையின் கடைசி இரண்டு பத்திகள்.

  சாலையோர தேனீர் கடையில்
  டீ குடித்து
  நினைவு கிளறிய நிம்மதியில்
  விடை பெறுகையில்
  தவறாமல்
  சொல்லிச் செல்கிறார்கள்.

  .

  வலி கூட்டும்
  ஏதேனும் ஓர் மரணச் செய்தியை.

  வாழ்வின் வழியை சொல்லும் கவிதைகள் கவிஞனுடைய கவித்துவத்தின் வெளிப்பாடு காட்டும்படி இல்லாமல் எதார்த்தத்தின் பிம்பம் விழுமாறு இருத்தல் அவசியம் என்ற கொள்கை உடையவன் நான் .
  அதே நிலைப்பாட்டில் படைப்பு உள்ளதால் மிகவும் ரசிக்க முடிந்தது.
  வாழ்த்துக்கள் சேவியர்

  இப்படிக்கு
  குகன்

  Like

 3. வலியை என்னும் சொல்லை வழியை என்று முதல் பின்னூட்டத்தில் தவறாக அடித்து விட்டேன்.
  பின் வருமாறு திருத்தி படிக்கவும்.

  வாழ்வின் வலியை சொல்லும் கவிதைகள் கவிஞனுடைய கவித்துவத்தின் வெளிப்பாடு காட்டும்படி இல்லாமல் எதார்த்தத்தின் பிம்பம் விழுமாறு இருத்தல் அவசியம் என்ற கொள்கை உடையவன் நான் .

  இப்படிக்கு
  குகன்

  Like

 4. //சத்தம் இன்றி நகரும் சின்ன பூனை போல கடந்து செல்கின்றன வரிகள்//

  ஆஹா… பிரமாதமான வரிகள். மிகவும் ரசித்தேன். உங்கள் கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  Like

 5. வாழ்வை, உணர்வுகளை எழுத்துக்களில் படம் பிடிக்கும் கவிதைகள் காலத்தை மீறி வாழும். அப்படிப்பட்ட ஒரு கவிதை இது.

  நனி நன்று.

  [ஓர் மரணச் செய்தி என்பது சரியா?. ஓர் என்பது ஆங்கிலத்தின் “an” போல – உயிர் எழுத்துக்கு முன்னால் மட்டும் வரும். இல்லையா ?]

  Like

 6. நன்றி சதீஷ்.

  எனக்கு எப்போதுமே “ஓர்” & “ஒரு” குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது. பிழை திருத்தியமைக்கு நன்றி. மாற்றி விடுகிறேன்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s