நூல் விமர்சனம் : தலை நிமிர்ந்த தமிழச்சிகள்

thalai.jpg 

பைம்பொழில் மீரான் அவர்கள் எழுதிய “தலை நிமிர்ந்த தமிழச்சிகள்” எனும் நூலை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது.

இலக்கியம், திரைத்துறை, அரசியல் உட்பட பல துறைகளில் சிறந்து விளங்கிய தமிழச்சிகளைப் பற்றிய ஒரு அறிமுகமாக மலர்ந்துள்ளது இந்த நூல்.

ஒளவையார் (அவ்வப்போது அவ்வையார் என்கிறார்) , காரைக்காலம்மையார், ருக்மணி தேவி அருண்டேல், வீணை தனம், கே.பி. சுந்தராம்மாள், குந்தவை, மனோரமா, மணியம்மையார் நாகம்மையார் உட்பட சுமார் ஐம்பது பேரைக் குறித்த விளக்கமான குறிப்புகள் இந்த நூலில் கிடைக்கின்றன.

ஒரு அவசரமான தகவல் புரிதலுக்கு இந்த நூல் பெருமளவில் உதவி செய்கிறது. தேர்ந்தெடுத்த நபர்களைக் குறித்த தகவல்களைச் சேமித்திருப்பதிலும், சலிக்காத நடையைக் கொண்டிருப்பதிலும் நூலாசிரியரின் உழைப்பு தெரிகிறது.

ஆணாதிக்க சமுதாயத்தில் பதிவு செய்ய மறந்து போன பெண்களைக் குறித்த வரலாறுகள் என்று முன்னுரையில் சொல்லும் பைம்பொழில் மீரானின் கூற்று முழுமையாக ஒத்துக் கொள்வதற்கில்லை. நூலில் இருக்கும் ஒளவையாரோ, மனோரமாவோ, கே.பி சுந்தராம்மாளோ மற்ற பல நபர்களோ இருட்டடிப்பு செய்யப்பட்ட நபர்கள் அல்ல என்பது கண்கூடு.

எனினும், ஒரு தொகுப்பாகக் கிடைக்கும் போது பல செளகரியங்கள் உள்ளன. பாதுகாத்து வைப்பது உட்பட.

ஓர் அவசர தகவல் சரிபார்த்தலுக்கு உதவும் நூலாகவும் இதை கணக்கில் கொள்ளலாம்.

நூலில் உள்ளடக்கம் இல்லாதது ஒரு மிகப்பெரிய குறை. அதிலும் குறிப்பாக இத்தகைய தொகுப்புகளில் உள்ளடக்கம் மிக மிக தேவையானது.

தோழமை வெளியீடாக வந்துள்ள இந்த நூல் தகவல் விரும்பிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.

தோழமை வெளியீடு
பக்கங்கள் 320
விலை ரூ.150/-
தொடர்பு எண் : 944302967

2 comments on “நூல் விமர்சனம் : தலை நிமிர்ந்த தமிழச்சிகள்

  1. ஸேவியர்!
    தங்களது பரிந்துரையின் பேரில் இந்த புத்தகப் பூங்காவில் (சொல் உபயம்: கலைஞர்!) அருவி வெளியீட்டின் ‘தலைமுறை’ வாங்கிப் படித்துக் கொண்டிருக்கிறேன். தலை நிமிர்ந்த தமிழச்சிகள் தாங்கள் மரிந்துரைப்பதற்கு முன்பே வாங்கி விட்டேன் (குமுதத்தில் திருவேங்கிமலை சரவணனின் “மறக்க முடியாத மங்கைகள்” தொடரில் இந்த புத்தகம் அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டிருக்கும்.) படித்து விட்டு சொல்கிறேன்!

    நன்றி
    வெங்கட்ரமணன்

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s