ஓவியங்கள் ஒரு முழுமையான கலைக்குரிய அந்தஸ்தையும், முக்கியத்துவத்தையும் பெறவில்லையோ எனும் சந்தேகம் எனக்கு அவ்வப்போது எழுவதுண்டு.
இலக்கியத்தின் பிற படைப்புகளை முன்னிறுத்தும் ஒரு கருவியாகத் தான் படங்களை அல்லது ஓவியங்களை நூல்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.
ஓவிய உலகமும் இலக்கிய உலகைப் போன்றே சண்டைகளுடனும், சச்சரவுகளுடனும், கருத்து வேறுபாடுகளுடனும் தான் இயங்கி வருகிறது என்பதையும் ஓவியர்களோடான அறிமுகம் கிடைத்த பின் புரிந்து கொள்ள முடிந்தது.
ஓவியம் என்பது நடந்து செல்லும் புள்ளி – என்பது ஒரு பிரபலமான வாசகம். ஓவியங்கள் பற்றிய புரிதல் எனக்கு இல்லை என்றாலும் அதனோடு சிறு அறிமுகம் உண்டு.
அமெரிக்காவில் வாழ்ந்த வருடங்களில் உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை இயக்குனர் அவர்கள் அறிமுகம் செய்து வைத்த ஓவியர் புகழேந்தியும், அதன் பின்னர் அவரோடு நடந்த சில ஓவிய கலந்துரையாடல்களும் ஓவியங்கள் குறித்து சற்று சொல்லிக் கொடுத்தன.
அத்தகைய ஒரு சூழலில் அறிமுகமானவர் தான் சந்தானம். ஓவிய வட்டாரத்தில் கதவு சந்தானம் என்று அழைக்கப்படுகிறார். அதற்குக் காரணம் கதவுகள் குறித்து அவர் ஓவியம் வரைவது தான்.
ஓவியர் சந்தானம் தன்னுடைய வாழ்க்கையில் வைத்திருக்கும் இலட்சியமே கதவுகளைக் குறித்த ஓவியங்களை மட்டும் வரைவது என்பது தான்.
கதவுகள் என்பது கலாச்சாரத்தின் அடையாளம் என்கிறார் சந்தானம். கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் இளங்கலை பயின்ற இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் (மாஸ்டர் ஆஃப் பைன் ஆர்ட்ஸ்) பெற்றார்.
இவர் ஓவியம் வரையும் விதம் வித்தியாசமானது. கதவுகளை முதலில் சிறிதாக ஒரு மாடல் செய்கிறார். அதில் பாதி கதவு திறந்திருப்பது போல அமைத்து வீட்டின் உள்ளே இருப்பவற்றைக் கற்பனையில் வரைகிறார். இந்த சிறு மாடல் கதவுகளைச் செய்யும் போதும், உண்மையான கதவுகள் செய்யும் போது செய்கின்ற அத்தனை பூஜைகளையும் செய்கிறார் என்பது விசேஷம்.
இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும், ஸ்பெயின் , பார்சிலோனா போன்ற வெளிநாடுகளிலும் கண்காட்சிகள் நடத்தியிருக்கும் சந்தானம் சில விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
இந்தப் பதிவை நான் எழுதுவதற்குக் காரணம் அவருடைய ஓவியங்களின் கண்காட்சி ஒன்று “லலித் கலா அகாடமியில்” இப்போது நடந்து கொண்டிருப்பது தான்.
கதவு சந்தானம் அவர்களின் ஓவியம் அருமை.
புதுமையான இலட்சியம்.
எந்த ஒரு செய்தியும்
அழகு தமிழில்
அழகாக தருவதர்க்கு
நன்றி.
LikeLike
மனமார்ந்த நன்றிகள் குந்தவை.
LikeLike
//ஓவியங்கள் ஒரு முழுமையான கலைக்குரிய அந்தஸ்தையும், முக்கியத்துவத்தையும் பெறவில்லையோ எனும் சந்தேகம் எனக்கு அவ்வப்போது எழுவதுண்டு.
சந்தேகம் தீர்ந்ததா சேவியர்?????
LikeLike
🙂
LikeLike