காத்திருப்பு நேரம் வீணல்ல

wait.jpg

(இந்த வார தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை ) 

இன்றைய அவசர வாழ்க்கை முறை பொறுமைக்கு விடை கொடுத்து விட்டது. கிராமத்து வரப்புகளில் காலார இயற்கையோடு கதைபேசிக் கடந்து போகும் வாழ்க்கையல்ல நகரத்து அவசர வாழ்க்கை. விடியலில் எழுந்து, இரவில் வீடு வந்து சேரும் நீளமான, அழுத்தம் நிறைந்த வாழ்க்கை.

 புழுதிக்காற்றைச் சுவாசித்து அயர்ச்சியுடன் துயின்று, வெப்பத் தூக்கத்தை முடித்து சோர்வுடனே துவங்குகிறது பெரும்பாலான காலைகள்.

 சாலைகளிலும், அலுவலகங்களிலும் காத்திருக்கும் நேரமே பெரும்பாலான நேரத்தைக் குடித்து விடுகிறது.

 மூடப்பட்டிருக்கும் ரயில்வே கேட்டை இருசக்கர வாகனத்துடன் குனிந்து கடப்பதும், காத்திருப்பு வரிசைகளில் எப்படியாவது குறுக்கு வழியில் முன்னே சென்று விட வேண்டுமென்று நினைப்பதும், மக்களுடைய பொறுமையை அவசரம் விழுங்கி விட்டதன் உதாரணங்கள் எனக் கொள்ளலாம்.

 எதுவும் செய்ய முடியாத காத்திருப்பே அதிக எரிச்சலை உருவாக்கும் என்கின்றனர் உளவியலார்கள். அதனால் தான் சில உணவகங்களில் இருக்கை இல்லாவிட்டாலும் கூட ‘உணவுப் பட்டியலை’ கொடுத்து வாசிக்கச் சொல்கிறார்கள். மருத்துவமனை போன்ற இடங்களில் வார இதழ்களை வாசிப்புக்கென வாங்கி வைக்கிறார்கள்.

 வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும் போது எரிச்சலடையாமல் அதைப் பயனுள்ள வகையில் செயல்படுத்த கீழ்க்கண்டவற்றைப் பயன்படுத்தலாம்.

1. திட்டமிடுதல். இன்றைய தினத்தில் என்ன செய்யப் போகிறோம் என்பதைக் குறித்து திட்டமிடுவதற்கு இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அமைதியாக பொறுமையாக யோசித்து திட்டமிடுவதற்கு இந்த நேரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எப்போதும் ஒரு புத்தகமும் பேனாவும் பையில் வைத்திருப்பது இத்தகைய தருணங்களில் அதிக பயன் தரும். 
 

2. முக்கியமாய் செய்ய வேண்டிய செயல்கள் ஏதேனும் விடுபட்டிருக்கிறதா என்பதை சிந்தியுங்கள். பழைய திட்டங்களை சற்று மாற்றி எழுதவும், புதிதாய் திட்டங்கள் தீட்டவும் இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

3. யாருக்காவது தொலைபேச வேண்டிய தேவை இருந்தால் இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வரிசையில் இருப்பவர்களை எரிச்சலடையச் செய்யாத அளவுக்கு உங்கள் குரலும், உரையாடல் நீளமும் இருக்க வேண்டியது அவசியம்.

4. ஏதேனும் ஒரு புத்தகத்தையோ, வார இதழையோ, செய்தித் தாளையோ கையில் எப்போதும் வைத்திருங்கள். இத்தகைய காத்திருப்பு நேரங்களில் அது மிகவும் பயனளிக்கும்.

5. சிறு சிறு கணக்கு வழக்குகள், தயாரிப்புகள் போன்றவற்றுக்காய் இந்தக் காத்திருப்பு நேரத்தைப் பயன்படுத்தலாம்.

6. காத்திருப்பு நேரத்தில் பயனுள்ள உடற்பயிற்சி செய்யலாம் என்கின்றனர் மருத்துவர்கள். ஒருகாலில் சிறிது நேரம் நிற்பது பின் மறுகாலில் சிறிது நேரம் நிற்பது என்பது போன்ற சின்னஞ்சிறு உடற்பயிற்சிகள் 
சுவாசப் பயிற்சி செய்யலாம். நன்றாக மூச்சை இழுத்து வெளி விடுவது நேரத்தை ஆரோக்கியமாய் செலவிடும் ஒரு மிக எளிய வழி.

7. ஏராளமான விளையாட்டுகள் விளையாடலாம். குறிப்பாக குறுக்கெழுத்துப் போட்டிகள். அல்லது நீங்கள் இருக்கும் அறையில் என்னென்ன இருக்கின்றன என்பதை நினைவில் வைப்பது. அவற்றின் பெயர்களை நினைவு படுத்துவது, அந்த பொருட்களின் தமிழ் பெயர்களை யோசிப்பது என ஏராளம்.

8. நல்ல ஆனந்தமான நிகழ்வுகளை அசை போட இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேற்றைய நிகழ்வுகள், கடந்த வாரத்தில் நடந்த நிகழ்வுகள், முதன் முதலாய் வேலை கிடைத்தபோது இருந்த நினைவுகள் என ஒவ்வொன்றாய் அசை போடலாம். கிராமங்களிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் மானசீகமாக கிராமத்தின் தெருக்களில் நடை போடலாம் ஒவ்வொன்றாய் ரசித்தபடியே.

9. அருகில் இருப்பவர்களிடம் அளவளாவலாம். சுவையான சில நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். அல்லது நேர்முகத் தேர்வு, பேச்சு, கலந்துரையாடல் என ஏதேனும் செய்ய வேண்டியிருந்தால் அதைக் குறித்து மனதில் ஒத்திகை நடத்திப் பார்க்கலாம்.

10. ஏதும் செய்ய முடியவில்லையெனில் மனதை இலகுவாக்கி தியான முயற்சி செய்யலாம். ஆன்மீக நாட்டமுடையவர்கள் கடவுளின் பெயரை மனதுக்குள் உச்சரிக்கலாம். அல்லது நல்ல இசை கேட்க வாய்ப்பு இருந்தால் நமக்கு மட்டும் கேட்கும் விதமாக அதை ரசிக்கலாம்.

காத்திருப்பு நேரம் தவிர்க்க முடியாதது. ஆனால் காத்திருப்பு நேரம் தரும் எரிச்சலும், கோபமும், பதட்டமும் தவிர்க்க முடிபவையே.

காத்திருப்பு நேரம் நம்முடைய நேரத்தை மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும், நமது நிம்மதியையும், உடல் நலத்தையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. அதற்காக காத்திருப்பு நேரத்தின் எரிச்சலை விலக்கி, வாழ்க்கையை இனிமையாய் எதிர் கொள்ளப் பழக வேண்டும்.

2 comments on “காத்திருப்பு நேரம் வீணல்ல

  1. Elloruckum Eraivan Dhinamum Oru Panamudippai Valanguhiran 24 hours
    Payanpaduthuvathilthan Matrangal Nigalhirathu

    (My blog) http;//mind-valgavalamudan.blogspot.com

    SBA

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s