வயதுக்கு வந்த காதல்

kiss.jpg 

உன்
முத்தத்தின் விண்ணகம்
வாய்க்காமல் போகையில்
உதடுகளில் உணர்கிறேன்
நரகத்தின் நகக் கீறல்களை

kiss1.jpg

நீ
முத்தமிட்ட கணத்தில்
முளைத்த மன நடுக்கத்தில்
சூரியன் ஒளிய
காற்று உறைய
இதயம் மட்டும்
புவியீர்ப்பு விசையைப்
புறக்கணித்துப் பறந்தது.

இன்னோர் முத்தமிடு
நான்
இறங்கி வர வேண்டும்.

love12.jpg
நிலவொளியின் நதிக்கரையில்
குளிர் காற்றின்
பொதுக்கூட்டத்தில்
உன்
விரல் தொட்ட வினாடியில்
உயிருக்குள் பறந்த பறவை சொன்னது
எனக்குள்
காதல் கூடாரமடித்திருப்பதை.

love4.jpg

உன்
காதல் நினைவுகளைச் சுமக்கையில்
எனக்குள்
காமத்தின் சாரலடிக்கும்
என்பதை
உன் வெட்கத்தின் வாசலுக்குள்
சொல்லிச் செல்கையில்
நீ
சட்டென்று வெளிப்படுத்திய
போலிக் கோபத்தில்
புதைந்துகிடந்தது
நம் காதல்.

bed.jpg

உன்
புகைப்படம் பார்த்துத்
துயில்வதை விட
உன்
புகைப்படம் பார்த்து
விழிப்பதை
விரும்பிய கணத்தில்
என் காதல் வயதுக்கு வந்திருந்தது.

35 comments on “வயதுக்கு வந்த காதல்

  1. /உண்மையில்
    முதல் முத்தத்தை
    என் காதலிக்கு விமர்சிக்க
    வார்த்தைகள் வற்றியிருந்தது என்னிடம்
    அசந்துவிட்டேன் போங்கள்
    இதை நான் சுடலாமா????

    //

    இன்னும் சுடலையா ?

    Like

  2. நீ
    முத்தமிட்ட கணத்தில்
    முளைத்த மன நடுக்கத்தில்
    சூரியன் ஒளிய
    காற்று உறைய
    இதயம் மட்டும்
    புவியீர்ப்பு விசையைப்
    புறக்கணித்துப் பறந்தது.

    இன்னோர் முத்தமிடு
    நான்
    இறங்கி வர வேண்டும்………

    உண்மையில்
    முதல் முத்தத்தை
    என் காதலிக்கு விமர்சிக்க
    வார்த்தைகள் வற்றியிருந்தது என்னிடம்
    அசந்துவிட்டேன் போங்கள்
    இதை நான் சுடலாமா????

    Like

  3. Wowwwwwwwwwww its really fantastic………. Vazhthukkal Kavithaikku mattum alla Kugan nin vimarsanathirkkum what a great critical analysis……….

    Like

  4. உன்
    புகைப்படம் பார்த்துத்
    துயில்வதை விட
    உன்
    புகைப்படம் பார்த்து
    விழிப்பதை
    விரும்பிய கணத்தில்
    என் காதல் diamond words

    Like

  5. ANPAIK KOONDU INATHTHAAL, AVNIJIL CIRAKKUM ENKAL, MEEINMAI CIRAPPU ELLAAM, VAAJI MOOLIJIL KOORAIYALAA,MENNMAI UDAIYA ONRE, VAALUM NAALIL KAATHAL, VAMSATH THOODARPOO LANROO? ” ANROO “-K.SIVA(Fr)

    Like

  6. //Sumaiyai Taankum Ithayam, Manak Kuraiyai Akaitra, – Ithayath, Tulle Pukun thu Sumaiyai Akariya Unnai , Enn Ithaya Sunthari Enpeen. -ITHAYA SUNTHARI- “K.SIVA” (Fr)//

    மீண்டும் நன்றிகள் சிவா 🙂

    Like

  7. Sumaiyai Taankum Ithayam, Manak Kuraiyai Akaitra, – Ithayath, Tulle Pukun thu Sumaiyai Akariya Unnai , Enn Ithaya Sunthari Enpeen. -ITHAYA SUNTHARI- “K.SIVA” (Fr)

    Like

  8. /Iravil Uthadin Mithu, Menmaik Kaarin Vekam, Unviralaal Uthaddai Thadavuthal poola, Uthadukal Menru Vilunkum- Nirkal, Unthan uthaddaal Ennai, Koolira Umilvathaaji Kandenn Kannee!… ” KANDEN ” -K.Siva-(Fr)//

    சூப்பர் போங்க….

    Like

  9. Iravil Uthadin Mithu, Menmaik Kaarin Vekam, Unviralaal Uthaddai Thadavuthal poola, Uthadukal Menru Vilunkum- Nirkal, Unthan uthaddaal Ennai, Koolira Umilvathaaji Kandenn Kannee!… ” KANDEN ” -K.Siva-(Fr)

    Like

  10. //ithayam kolirum velai , iravin madi jil saajn thu , vaanai mele nookka, vassantham unnai thodave , kaalai meilla asaikka , kaathali unnaik kaan pein. “KAA TALI UNNAI” -K.Siva-( Fr)//

    பின்னிட்டீங்க போங்க…

    Like

  11. ithayam kolirum velai , iravin madi jil saajn thu , vaanai mele nookka, vassantham unnai thodave , kaalai meilla asaikka , kaathali unnaik kaan pein. “KAA TALI UNNAI” -K.Siva-( Fr)

    Like

  12. pidichirukku yellame pidichirukku kavithaium pidichiukku ungalaium pidichirukku pidichirukku yeluthunga niraiya yeluthunga ungalin pathivugalai yenka gangalukku unavaha anuppungal pasi theravillai ennum kekkirathu vizhi erandum mudamal

    Like

  13. பப்ளிக் ல் இருந்து எல்லோர்க்கும் தெரியும்படி வைக்கும் முத்தத்தைவிட மெல்லிய வெளிச்சத்தில் இச் என்ற சத்தம் கேட்பகும்படி கிடைக்கும் முத்தம் ஆயிரம் அர்த்தங்களை சொல்லும் இல்லையா…..

    Like

  14. சிலிர்க்க வைத்து விட்டீர்கள் குகன். ஒரு படைப்பாளிக்கு இத்தகைய விரிவான விமர்சனத்தைத் தவிர வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும் !

    மனமார்ந்த நன்றிகள்

    Like

  15. கவிஞர் சேவியருக்கு,

    உன்
    முத்தத்தின் விண்ணகம்
    வாய்க்காமல் போகையில்
    உதடுகளில் உணர்கிறேன்
    நரகத்தின் நகக் கீறல்களை

    கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுடைய கவிதை ஒன்று எப்பொழுதோ படிக்க நேர்ந்தது.

    “எல்லோரும் விளக்கில் படித்தார்கள்
    நான் விளக்கையே படித்தேன்
    அதனால் தான்
    நெருப்பு நாவால்
    பேசுகிறேன் ”

    அதில் , “நெருப்பு நாவு” என்ற சொற்றொடர் எந்த அளவுக்கு ஒரு தாக்கத்தையும் ரசிப்புத்தன்மையையும் ஏற்படுத்தியதோ , அதே அளவு இன்னும் சொல்லப் போனால் , அதை விடவும் ஒரு தாக்கத்தையும் ரசிப்புத்தன்மையையும் உண்டு பண்ணி விட்டது உங்கள் நரகத்தின் நகக் கீறல்கள் என்னும் சொல்லாடல்.

    நீ
    முத்தமிட்ட கணத்தில்
    முளைத்த மன நடுக்கத்தில்
    சூரியன் ஒளிய
    காற்று உறைய
    இதயம் மட்டும்
    புவியீர்ப்பு விசையைப்
    புறக்கணித்துப் பறந்தது.

    இன்னோர் முத்தமிடு
    நான்
    இறங்கி வர வேண்டும்.

    இன்று ரொக்கம் நாளை கடன் என்னும் கடை வாசகம் எப்படி உதடுகளை கடன் கேட்க விடாமல் தடுக்குமோ, அது போலவே , வழங்கிய முத்தத்தையும் நிறுத்த விடாது தடுக்கிறது உங்கள் கவிதை வாசகம்.

    நிலவொளியின் நதிக்கரையில்
    குளிர் காற்றின்
    பொதுக்கூட்டத்தில்
    உன்
    விரல் தொட்ட வினாடியில்
    உயிருக்குள் பறந்த பறவை சொன்னது
    எனக்குள்
    காதல் கூடாரமடித்திருப்பதை.

    எந்தச் சூறாவளியாலும் கலைக்க முடியாத கூடாரம் காதல் கூடாரம். அந்த கூடாரத்தில் வாழுபவர்களுக்கு மட்டுமே வசப்படும் உயிருக்குள் பறவை பறக்கும் உணர்வு!!!!!

    அற்புதம் சேவியர் !!!!!!!

    உன்
    காதல் நினைவுகளைச் சுமக்கையில்
    எனக்குள்
    காமத்தின் சாரலடிக்கும்
    என்பதை
    உன் வெட்கத்தின் வாசலுக்குள்
    சொல்லிச் செல்கையில்
    நீ
    சட்டென்று வெளிப்படுத்திய
    போலிக் கோபத்தில்
    புதைந்துகிடந்தது
    நம் காதல்.

    போலிக் கோபத்தில் புதைந்து கிடக்கும் காதல் , காதலியின் புன்னகையில் பீனிக்ஸ் பறவையாய் மறுபடியும் சிறகு விரிக்க ஆரம்பிக்கும் . சரியா ?

    உன்
    புகைப்படம் பார்த்துத்
    துயில்வதை விட
    உன்
    புகைப்படம் பார்த்து
    விழிப்பதை
    விரும்பிய கணத்தில்
    என் காதல் வயதுக்கு வந்திருந்தது.

    புகைப்படம் பார்த்து துயிலும் போது காதல் மொழியப்பட்டிருக்காது .
    புகைப்படம் பார்த்து விழிக்கும் போது காதல் மொழியப்பட்டு , அவள் தனக்கு ஆனவள் என்ற உரிமை நிலை நெஞ்சை ஆட்கொள்கையில் , காதல் வயதுக்கு வந்து விடுகிறது .

    கவிப்பேரரசு வைரமுத்து ” காதலுக்கு எப்போதும் வயசாகாது ” என்று ஜீன்ஸ் திரைப்பட பாடல் ஒன்றில் கூறி இருப்பார்.
    வயசாகாத காதல் எப்போது வயசுக்கு வருகிறது என்று நீங்கள் கூறி விட்டீர்கள் !!!!!!!!.

    வாழ்த்துக்கள் சேவியர் !!!!!!

    அன்புடன்
    குகன்

    Like

  16. நீ
    முத்தமிட்ட கணத்தில்
    முளைத்த மன நடுக்கத்தில்
    சூரியன் ஒளிய
    காற்று உறைய
    இதயம் மட்டும்
    புவியீர்ப்பு விசையைப்
    புறக்கணித்துப் பறந்தது.

    இன்னோர் முத்தமிடு
    நான்
    இறங்கி வர வேண்டும்.

    oo-! nice

    Like

  17. ———–
    உன்
    முத்தத்தின் விண்ணகம்
    வாய்க்காமல் போகையில்
    உதடுகளில் உணர்கிறேன்
    நரகத்தின் நகக் கீறல்களை
    ———-

    வெகு அருமை சேவியர்.

    எவரோ எடுத்த படங்கள்
    உங்கள் கவிதைகளை
    உங்கள் வார்த்தைச் சுவையோடு
    வாசிக்க விடவில்லை

    ஓரத்தில்
    ஒரே ஒரு படம் போதாதா!

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.