இப்படியும் சில காதல் கவிதைகள்

girl3.jpg

உனக்குப் பிடித்த ஆடையின்
வண்ணம்
கருப்பு என்று
தோழி சொன்னாள்.
எனக்கிப்போது
முகம் பார்க்கும் கண்ணாடி
முக்கியமில்லாமல் போய்விட்டது

girl3.jpg

கடற்கரையில் ஒரு நாள்
யாருடனோ பார்த்தேன் உன்னை.
கடலில் விழுந்த
சூரியன் என் மனதில் விழுந்ததாய்
வேரறுகிறது எனக்கு,
அவன் உன்
அண்ணனாய் இருக்கட்டுமே
எனும்
வேண்டுதல் தான் அன்றிலிருந்து.
girl3.jpg

உனக்குக்
டிக்கட் வாங்கித்தர
நான்
அவசர அவசரமாய் ஏறுகிறேன்.
நீயோ
பஸ் பாஸ் வைத்திருக்கிறாய்.
girl3.jpg

வங்கியில் வந்தபோது
ஒரு முறை தான்
நீ பேனா கொடுத்தாய் எனக்கு.
இப்போது
யார் பேனா கொடுத்தாலும்
அருகில் உன் வாசனை.
girl3.jpg

காலை புலர்ந்ததும்
என் ராசி பலனை நீயும்,
உன் ராசி பலனை நானும்
தவறாமல் படிக்கிறோம்.
நல்ல வேளை
உனக்கும் எனக்கும் ஒரே ராசி.

6 comments on “இப்படியும் சில காதல் கவிதைகள்

  1. //காலை புலர்ந்ததும்
    என் ராசி பலனை நீயும்,
    உன் ராசி பலனை நானும்
    தவறாமல் படிக்கிறோம்.
    நல்ல வேளை
    உனக்கும் எனக்கும் ஒரே ராசி.//

    மிக அழகான, எளிமையான வரிகள்

  2. அழகான வரிகள்…

    என் கவிதைகள் பற்றிய உங்கள் கருத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன். வாருங்களேன் என் தளத்திற்கும்…

  3. நன்றான பபடிப்பு சகோதரர்.

    மென்மேலும் வளர்ச்சியடை என் வாழ்துக்கள்

    தமிழகத்தில் தமிழை தடை தெய்தான் ஆங்கிலேலன். தமிழகத்தில் ஆங்கிலத்தை தடைசெய்ய தடுகிறான் தமிழன்.
    http://www.tamil.2.ag

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s