பலான பலவீனங்கள்

sexmovie.jpg

அரையிருட்டில்
காலி இருக்கை தடவி,
பாதி முகத்தைப் பொத்திய
கைக்குட்டையோடு
வந்தமர்கிறேன்.

யாரேனும்
பார்த்துவிட்டார்களோ எனும்
பயத்தின் முள் குத்துகிறது
என்
மரியாதையின் பிடரியில்.

அறிமுகமான
முகங்கள்,
அந்நியமாகிப் போகும்
அவஸ்தையின் இருட்டு
திரையரங்கு முழுதும்.

இருட்டுக்குள்
வெள்ளைத் திரையின்
முகமெங்கும்
மோகத்தின் பசி
தாகம் ஊற்ற மிதக்கிறது.

மௌனத்தை விழுங்கி,
இயங்க மறுக்கும் இமைகளோடு,
ஓர்
கனமான காற்று
வாசல்களையும் கடக்காமல்
இருக்கைகளில் இருக்கின்றது.

பகல்க்காட்சி முடிந்து,
வெளிச்சம் காண கூசும்
இருட்டிப் போன
முகத்தோடு,
அவசர அவசரமாய்
வாகனம் மிதிக்கும் போது
உள்ளுக்குள்
அவமானம் ஊற்றெடுக்கும்.

இனிமேல் இது கூடாது
என
வழக்கம் போல எடுக்கும் முடிவுகள்
வெளிநடப்பு செய்யும்.

அடுத்த வார
சுவரொட்டியைச் சந்திக்கும் போது.

10 comments on “பலான பலவீனங்கள்

  1. //ஆனாலும் இப்படி எல்லாம் நீங்கள் உண்மை சொல்லக் கூடாது //

    ஹா…ஹா… பலவீனங்களைத் தெரிந்து கொள்வது ஒரு பெரிய பலம் 🙂

    Like

  2. நண்பர் சேவியருக்கு,

    நம்மூர் சோதனைச் சாவடிகள் வேண்டுமானால் ரேஷன் அரிசி கடத்திச் செல்லும் வாகனங்களை தடுக்காமல் போகலாம் .
    ஆனால் , கண் பார்வை உள்ள அனைத்து இளைஞனையும் தடுக்கவும் தடுமாறவும் வைக்கும் “அந்த” படச் சுவரொட்டிகள் என்பது காந்திய சத்தியம் .

    ஆனாலும் இப்படி எல்லாம் நீங்கள் உண்மை சொல்லக் கூடாது 🙂 !!!!!!!!!!!!!!!

    பகல்க்காட்சி முடிந்து,
    வெளிச்சம் காண கூசும்
    இருட்டிப் போன
    முகத்தோடு,
    அவசர அவசரமாய்
    வாகனம் மிதிக்கும் போது
    உள்ளுக்குள்
    அவமானம் ஊற்றெடுக்கும்.

    இதில் பகல்க்காட்சி என்று எழுதப்பட்டுள்ளது .
    பகல் என்ற சொல்லுக்கும் காட்சி என்ற சொல்லுக்கும் இடையில் “க்” வராது என்று நினைக்கிறேன் .

    இனிமேல் இது கூடாது
    என
    வழக்கம் போல எடுக்கும் முடிவுகள்
    வெளிநடப்பு செய்யும்.

    அடுத்த வார
    சுவரொட்டியைச் சந்திக்கும் போது.

    அறிவுக்கும் மனசுக்கும் சண்டை நடக்கும் போது அறிவு வென்று தான் விடுகிறது.

    வாழ்த்துக்கள் சேவியர் !!!!!!!!!!!!!!!!!

    அன்புடன்
    குகன்

    Like

  3. //தில்லைநகர் “முல்லை”யும், திண்டுக்கல் “அபிராமி”யும், பரங்கிமலை “ஜோதி”யும் நினைவுக்கு வருகின்றன…

    சிறப்பாக வந்திருக்கிறது கவிதை
    //

    நன்றி நித்திய குமாரன்.

    Like

  4. சேவியர் நீங்கள் –>
    வார்த்தைகளை கொண்டு வண்ணம் தீட்டும் ஓவியர் !

    Like

  5. தில்லைநகர் “முல்லை”யும், திண்டுக்கல் “அபிராமி”யும், பரங்கிமலை “ஜோதி”யும் நினைவுக்கு வருகின்றன…

    சிறப்பாக வந்திருக்கிறது கவிதை

    நித்யகுமாரன்

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.