சுஜாதாவும், நானும்.

sujatha.jpg

சுஜாதாவின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லத் தேவையில்லை.

.

எழுத்துலகில் எழுத ஆரம்பிக்கும் பெரும்பாலானவர்களுக்கு எழுத்துப் பழக்கத்தை சுஜாதாவின் எழுத்துக்கள் வழிகாட்டியாய் அழைத்துச் செல்கின்றன என்பதை மறுக்க முடியாது.

.

அழுத்தமான புரியாத படிமங்களும், பூடகமான இறுக்கமான வாக்கியக் கட்டமைப்புகளுமே இலக்கியம் என்று நிர்ணயிக்கப்பட்ட சூழலிலும் தன்னுடைய எளிமையான எழுத்து நடையினால் சிக்கலான செய்திகளையும் பளிச்சென்று சொன்னவர் சுஜாதா.

.

எனக்கும் சுஜாதாவுக்குமான நேரில் சந்திக்காத தொடர்பு ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு அம்பலம் இதழில் சிறுகதைகளும், கவிதைகளும் எழுதத் துவங்கிய போது ஆரம்பமானது.

.

பல சிறுகதைகள், அறிவியல் புனைக் கதைகள், கவிதைகள் அம்பலம் இதழில் வெளியாகியது சுஜாதா அவர்களிடம் ஒரு இலக்கிய அறிமுகத்திற்கு வழி வகுத்தது.

.

தமிழின் சிறந்த நானூறு கவிதைகளை அவர் தேர்ந்தெடுத்துத் தொகுத்தபோது என்னுடைய கவிதை ஒன்றும் இடம்பெற்றிருந்தது ஆனந்தம் அளித்தது. அம்பலம் இணையப் படைப்புகளைத் தொகுத்தபோதும் எனது சில படைப்புகள் இடம்பெற்றிருந்தன.

.

சில வருடங்களுக்கு முன் திண்ணை – மரத்தடி இணைந்து இணையத்தில் நடத்திய அறிவியல் புனை கதைப் போட்டியில் நடுவராக அமர்ந்து “ஏலோயி ஏலோயி லாமா சபக்தானி” எனது சிறுகதைக்கு முதல் பரிசு வழங்கினார் என்பதும் என்னுடைய நினைவுகளில் பசுமையாய் இருக்கிறது.

.

இலக்கியம் என்பது சமூகத்தின் நலன்களுக்கும் பயன்படவேண்டும் எனும் நோக்கத்தில் அறிவியல் தகவல்கள் தமிழுக்குத் தந்ததும், மின்னணு இயந்திரம், கணினி மென் தமிழ், என பல தளங்களில் அவருடைய பங்களிப்பு நினைவுகளில் நிலைக்கிறது.

.

சுஜாதாவுக்கும், எழுத்துலகில் இருக்கும் அனைவருக்கும் ஏதோ ஒரு நேரில் சந்திக்காத உறவு இறுக்கமாக இருந்ததையே இந்த இழப்பு உணர்த்தியது.

.

சுஜாதாவின் மறைவு நான் எதிர்பாராதது.
மறுதலிக்க முடியாத பயணம் அனைவருக்கும் உண்டு என்பதை வாழ்க்கை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது.

.

துயரங்களைத் தூக்கிச் சுமந்து கொண்டே தொடர்ந்து நாம் நடக்க வேண்டியிருக்கிறது.

வாழும் ஜீவன்கள் வீழும். எழும் எழுத்துக்கள் வாழும்

9 comments on “சுஜாதாவும், நானும்.

 1. sujatha, enakku, ezhuthalar,rasigan,vinghani,tamizh computer,Ganesh&Vasanth en manasatchigal. Enakku ezhappudhan…………….!

  Like

 2. க‌ட‌ந்த‌ 02.03.08 அன்று சென்னையில் நிக‌ழ்ந்த‌ உல‌க‌த்த‌மிழ் எழுத்தாள‌ர் ச‌ங்க‌த்தின் நூல்க‌ள் வெளியீட்டு விழாவுக்குச் சென்ற‌போது, அம‌ர‌ர் சுஜாதாவின் இல்ல‌ம் சென்று அவ‌ர‌து துணைவி, ம‌ற்றும் ம‌க‌ன்க‌ளிட‌ம் எங்க‌ள‌து ஆழ்ந்த‌ இர‌ங்க‌லைத் தெரிவித்தோம். > கிரிஜா ம‌ணாள‌ன் / ச‌ர‌சுவ‌தி ப‌ஞ்சு, திருச்சிராப்ப‌ள்ளி.

  Like

 3. மிக்க நன்றி சந்திரசேகரன். தாமதமாய் சொல்வது சொல்லாமல் இருப்பதை விட மிக மிக மிக…… மிக நல்லது தான் 🙂
  பகிர்ந்ததில் ஆனந்தமடைகிறேன்.

  Like

 4. Pingback: Shankar’s Weblog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.