உலகம் உருவான கதை

adam.jpg 

மண்ணுலகம் உருவமில்லாமல், விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையில் இருந்தது. எங்கும் இருளும் தண்ணீரும் மட்டுமே நிறைந்திருந்தன. கடவுளின் ஆவி மட்டும் தண்ணீரின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தது. வெளிச்சம் இன்னும் மண்ணுலகுக்கு அறிமுகமாகியிருக்கவில்லை.

ஒரு நல்ல உலகைப் படைக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்தார். அவருடைய கற்பனைகளில் ஒரு உலகம் விரிந்தது. அந்த உலகை நிஜத்தில் கொண்டு வரவேண்டும் என்று கடவுள் நினைத்தார். அதற்கு முதல் தேவை வெளிச்சம். இருளுக்குள் கிடக்கும் உலகைத் தூசு தட்ட முதல் தேவை வெளிச்சம்.

ஒளி தோன்றுக !

இதுதான் படைப்பின் துவக்கத்தில் கடவுள் உச்சரித்த முதல் வார்த்தை. அதுவரை இருளுடன் மட்டுமே அறிமுகம் கொண்டிருந்த உலகத்தின் மீது முதன் முதலாக ஒரு வெளிச்சக் கீற்று வானிலிருந்து வந்து விழுந்தது. அந்த வெளிச்சம் மெல்ல மெல்ல பூமியின் மேலிருந்த இருளை வெளியேற்றியது.

கடவுள் வெளிச்சத்தைப் பார்த்தார். உருவமற்ற பூமி முதன் முறையாக தன் அழகற்ற முகத்தை வெளிச்சத்தில் காட்டியது. முதல் படைப்பான ஒளி கடவுளுக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்தது. ஆனாலும் எப்போதுமே வெளிச்சமாய் இருப்பது நல்லதல்ல, வெளிச்சமும் இருளும் மாறிமாறி வரவேண்டும் அப்போது தான் நன்றாக இருக்கும் என்று கடவுள் நினைத்தார்.

அதன்படியே கொஞ்சநேரம் வெளிச்சம், கொஞ்ச நேரம் இருள் என ஒரு நாளை இரண்டாகப் பிரித்தார். இப்போது கடவுளுக்கு முழு திருப்தி ! வெளிச்சமாய் இருக்கும் காலத்தைப் பகல் என்றும் இருளாய் இருக்கும் காலத்தை இரவு என்றும் கடவுள் பெயரிட்டார். அது தான் உலகில் நடந்த முதல் பெயர்சூட்டு விழா. அந்த நிகழ்ச்சி முடிந்தபோது முதல் நாள் முடிவுறிருந்தது.

மறு நாள் கடவுள் வெளிச்சத்தில் இருந்த பூமியைப் பார்த்தார். தண்ணீரும், தரையும் பின்னிப் பிணைந்து  ஒரு அழகற்ற, பயனற்ற நிலையில் இருந்தது பூமி. இந்தத் தண்ணீரை இரண்டாகப் பிரித்து வானத்துக்கு மேலே ஒரு பாகத்தையும் பூமியிலே இன்னொரு பாகத்தையும் வைத்தால் நன்றாக இருக்குமே என்று கடவுள் நினைத்தார்.அப்படியே செய்தார்.

பூமியிலிருந்த தண்ணீரின் ஒருபகுதி வானத்துக்கு மேலே இடம்பெயர்ந்தது. மிச்ச தண்ணீர் தாய்வீடான பூமியிலேயே தங்கிவிட்டது. வானத்தைக் கடவுள் விண்ணுலகம் என்றும், பூமியை மண்ணுலகம் என்றும் பெயரிட்டார். படைத்தலின் இரண்டாம் நாள் பணி அத்துடன் முடிவடைந்தது.

தண்ணீரும் தரையும் ஆங்காங்கே சிதறிச் சிதறிக் கிடப்பதை விட தண்ணீர் ஓரிடத்திலும், தரை ஓரிடத்திலும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று கடவுள் எண்ணினார். ‘பூமியிலே ஆங்காங்கே கிடக்கும் தண்ணீர் எல்லாம் ஒரே இடத்தில் வந்து சேரட்டும்’ என்று கட்டளையிட்டார்.

 பூமியில் கிடந்த தண்ணீரெல்லாம் உடனே ஓடி ஓரிடத்தில் வந்து சேர்ந்தது. மிகப்பெரிய தண்ணீர்ப் பரப்பு ஒன்று உருவானது. தண்ணீரெல்லாம் கைகோர்த்து நின்ற மிகப் பெரிய நீர் நிலையைக் கடவுள் பெருங்கடல் என்று பெயரிட்டார். இப்போது தண்ணீர் வடிந்து போன கட்டாந்தரை மிகப் பெரிய அளவில் அவருடைய முன்னால் கிடந்தது. கடவுள் மகிழ்ந்தார். ஆனால் தரை அழகில்லாமல் வெறுமையாக இருந்தது. அழகில்லாமல் இருக்கும் தரையை எப்படி அழகாக்குவது என்று கடவுள் யோசித்தார்.

நிலத்தில் ஏராளமான புல்வெளிகளையும், செடிகளையும், மரங்களையும் கடவுள் வளரச் செய்தார். வெறுமையாய்க் கிடந்த தரையில் திடீரென விதவிதமான செடிகளும், மரங்களும், அழகிய புல்வெளிகளும் தோன்றின. இப்போது தரை வெறுமையாக இல்லாமல் அழகானதாக மாறியது. மண்ணுலகு தன் பரப்பு முழுவதும் பச்சை போர்த்திச் சிரித்த போது காலையும் மாலையும் சேர்ந்து மூன்றாம் நாள் முடிவுற்றிருந்தது.

உலகத்துக்குப் பகலையும் இருளையும் கொண்டு வந்த கடவுள், இரண்டையும் ஆட்சி செய்ய இரண்டு ஒளிப் பிழம்புகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கணித்தார். ஒளிப்பிழம்புகள் மாறி மாறி வருவதை வைத்துக் காலங்களைக் கணிக்கவும் முடியும் என்று கடவுள் உணர்ந்தார்.

எனவே பகலை ஆள ஒரு மிகப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள இன்னொரு ஒளிப்பிழம்பையும் கடவுள் நான்காவது நாளில் படைத்தார். அந்த இரண்டு ஒளிப்பிழம்புகளையும் வானத்திலிருந்து ஆட்சி செய்யுமாறு கட்டளையிட்டார். வானம் ஒளிப்பிழம்பைச் சுமந்ததும் அழகானதாக மாறியது.

இப்போது பூமியில் வெளிச்சம் தேவையான அளவுக்குக் கிடைத்தது. வானத்தின் பரப்பில் ஒளிப்பிழம்புகளுடன் ஏராளமான விண்மீன்களையுன் கடவுள் படைத்தார். இப்போது வானம் வெளிச்ச மயமாக எழிலின் இருப்பிடமாக மாறியது. நான்காவது நாள் படைப்பில் கடவுள் மிகவும் திருப்தியடைந்தார்.

தன்னுடைய நான்கு நாள் படைப்பையும் ஐந்தாவது நாளில் பார்வையிட்டார் கடவுள். அழகிய பூமி, நீள் கடல், வெளிச்ச வானம் என எல்லாம் மிக அழகாக இருந்தன. தண்ணீரிலும் தரையிலும் இனிமேல் உயிரினங்கள் தோன்றினால் அது பூமியை மேலும் அழகுபடுத்தும் என்று கடவுள் ஏராளமான கடல்வாழ் உயிரினங்களையும், வானத்துப் பறவைகளையும் படைத்தார்.

கடல் முழுவதும் மீன்களும் கடல்வாழ் உயிரினங்களும் நீத்தத் துவங்கின, அவை தண்ணீரின் மேல் குதித்தும், நீர்த்தாவரங்களின் இடையே ஓடியும் விளையாடியதைக் கண்ட கடவுள் ஆனந்தமடைந்தார். வானத்துப் பறவைகள் அழகழகான சிறகுகளை அடித்து மரங்களிடையே ஆனந்தமாய் சுற்றித் திரிவதைக் கண்டு கடவுள் மிகவும் திருப்தியடைந்தார். நீங்கள் எல்லாம் பலுகிப் பெருகி இந்த பூமியின் மெளனத்தைக் கலையுங்கள் என்று அவற்றை வாழ்த்தினார். ஐந்தாவது நாள் படைப்பைக் கடவுள் அத்துடன் முடித்துக் கொண்டார்.

ஆறாவது நாளில் ஆண்டவர், நிலத்தில் ஊர்வன, காட்டு விலங்குகள், கால்நடைகள் எல்லாம் வேறு வேறு இனங்களில் தோன்றட்டும் என ஆணையிட்டார். பறவைகள் வானத்தில் பறந்து திரிய, விலங்குகள் பூமியில் அலைந்து திரிந்தன. அவை வெவ்வேறு இனங்களில், வெவ்வேறு வடிவங்களில் பூமியை நிறைத்தன. கடவுள் தான் படைத்த விலங்குகளோடு பேசினார். நீங்களும் பலுகிப் பெருகி பூமியை நிறையுங்கள் என்று வாழ்த்தினார்.

தன்னுடைய் ஆறு நாள் படைப்பையும் கடவுள் பார்த்து ரசித்தார். ஆனாலும் ஒரு குறை அவர் கண்களுக்குத் தெரிந்தது. பூமியில் பறவைகள், விலங்குகள், அழகிய தாவரங்கள் எல்லாம் இருக்கின்றன, கடலில் நீர்வாழ் உயிரினங்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் பூமியிலிருந்து ஆட்சி செய்ய ஒரு உயிரினத்தைப் படைத்தால் நன்றாக இருக்குமே என்று கடவுள் யோசித்தார்.

விலங்குகளில் ஒன்றையோ, பறவைகளில் ஒன்றையோ, நீர்வாழ் உயிரினங்களில் ஒன்றையோ பூமியை ஆள்வதற்காகத் தேர்ந்தெடுத்தால் சிறப்பானதாக இருக்காது என்று அவருக்குத் தோன்றியது. எனவே ‘என்னைப் போன்ற வடிவில் ஒரு உயிரினத்தைப் படைப்பேன். அவனை மனிதன் என்று அழைப்பேன், அவனிடம் இந்தப் பூமியை ஆளும் பொறுப்பை ஒப்படைப்பேன்’ என்று கடவுள் தனக்குள்ளே சொல்லிக் கொண்டார்.

இதுவரை படைத்த அனைத்தையும் கட்டளையிட்டு உருவாக்கிய கடவுள் மனிதனை மட்டும் வித்தியாசமாகச் சிறப்பாகப் படைக்க வேண்டும் என்று விரும்பினார். ‘மனிதன் தோன்றட்டும்’ என்னும் ஒற்றைவாக்கில் மனிதனைப் படைத்தால், அவனுக்கும் இதுவரை தான் படைத்த உயிரினங்களுக்கும் இடையே வேறுபாடு இல்லாமல் போய்விடும் என்று எண்ணிய கடவுள், மனிதனை தன்னுடைய உழைப்பினாலும், உயிரினாலும் உருவாக்கவேண்டும் என்று தீர்மானித்தார்.

தரையில் அமர்ந்து கொஞ்சம் மண்ணைச் சேகரித்தார். அந்த மண்ணை வைத்துக் கடவுள் தன்னைப் போன்ற ஒரு உருவத்தை உருவாக்கினார். உலகில் உருவாக்கப் பட்ட முதல் சிற்பம் அது தான். உலகின் முதல் சிலை அந்த மனித சிலை தான். கடவுள் மனிதனின் உருவத்தைச் செய்து முடித்ததும் குனிந்து அவனுடைய நாசிகளில் தன்னுடைய உயிர் மூச்சை ஊதினார்.

மனிதன் உயிர்பெற்றான் கடவுளின் உயிர்மூச்சால் உயிர்பெற்றதால் அவனுக்குள் தெய்வத் தன்மை நிறைந்திருந்தது. தன்னுடைய கண்ணைத் திறந்து அவன் கடவுளைப் பார்த்தான். கடவுள் புன்னகைத்தார்.  தன்னுடைய உடல் உழைப்பும், உயிர் மூச்சும் உருவாக்கிய மனிதனை அவர் நேசத்துடன் அணைத்துக் கொண்டார்.

மனிதனைப் படைத்த கடவுள் பூமியைப் பார்த்தார். எந்த இடமும் மனிதனைத் தங்கவைக்கத் தகுதியானதாய்த் தோன்றவில்லை. எனவே கடவுள் ஒரு தோட்டத்தை அமைத்தார். அதுதான் கடவுளின் ஏதேன் தோட்டம். ஏதேன் வானக சுவர்க்கத்தின் மண்ணக வடிவமாய் இருந்தது.

அழகிய மரங்கள் தோட்டம் முழுவதும் நிறைந்திருந்தன. மரங்கள் மனிதனின் பசியைப் போக்க சுவையான பழங்களை கிளைகளெங்கும் தொங்கவிட்டிருந்தன. அழகிய பறவைகள் மரங்களில் அமர்ந்து சிறகடித்தும், குரலெழுப்பியும் ஏதேனை இசையின் இருப்பிடமாக மாற்றின. மலர்களை தங்கள் முதுகில் ஏந்தியபடி ஓடும் பீசோன், கீகோன், திக்ரீசு, யூப்பிரத்தீசு என்னும் நான்கு அற்புத ஜீவ நதிகள் ஏதேனுக்குள் ஓடின.

அந்தத் தோட்டத்தின் நடுவே இரண்டு முக்கியமான மரங்கள் இருந்தன. ஒன்று ஜீவ விருட்சம், இன்னொன்று ‘நன்மை தீமை அறியும் மரம்’. ஏதேன் தோட்டம் கடவுளின் கற்பனைகளை நிஜத்தில் எடுத்து வைத்தது. ஏதேன் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தக் கடவுள், இதுதான் மனிதனுக்குத் தகுதியான இடம் என்று சொல்லி தான் படைத்த மனிதனை அங்கே தங்கச் செய்தார்.

ஆறு நாட்களாகத் தான் படைத்த பூமியையும், உயிரினங்களையும் கடவுள் பார்வையிட்டார். அனைத்துமே மிகவும் திருப்திகரமாக இருந்தன. ஆறு நாட்களுக்கு முன் உருவமற்றிருந்த பூமி இப்போது அழகும். இன்னிசையும் நிறைந்த அழகிய இடமாக மாறியிருந்தது. தன்னுடைய படைப்பில் மகிழ்ந்த கடவுள் ஏழாவது நாளில் ஓய்வெடுத்தார்.

பின் கடவுள் ஏதேன் தோட்டத்திற்குச் சென்று மனிதனைப் பார்த்தார். அவன் நதிகளில் குதித்து, மரங்களில் கனிகளைப் பறித்துத் தின்று ஆனந்தமாக இருந்தான். கடவுள் அவனை ஏதேன் தோட்டத்தின் நடுவே இருந்த மரத்தின் அருகே கூட்டிச் சென்று ‘ இதோ.. இந்தத் தோட்டத்திலும், இந்த உலகத்திலும் உள்ள எல்லாமே உனக்குச் சொந்தமானவை தான். ஆனால் இந்த ஒரு மரத்தின் கனியை மட்டும் நீ உண்னக் கூடாது. இதன் பெயர் நன்மை தீமை அறியும் மரம்.’ என்று கடவுள் மனிதனுக்கு தன்னுடைய முதல் கட்டளையைக் கொடுத்தார். அதுதான் கடவுளிடமிருந்து மனிதன் பெற்றுக் கொண்ட முதல் கட்டளை. மனிதன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். கடவுள் அவனையும் அழைத்துக் கொண்டு ஏதேனை விட்டு வெளியே வந்தார்.

‘இதோ இந்த பூமி முழுவதும் உனக்கே சொந்தம். உனக்கு விருப்பமானவற்றை உண்டு, விருப்பமானதைச் செய்து மகிழ்ச்சியாக இரு. இந்த விலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் நான் உனக்காகத் தான் உருவாக்கியிருக்கிறேன். நீ எனக்கு மட்டும் பணிந்திரு, மற்றவை அனைத்தையும் ஆட்சி செய். இப்போது நான் படைத்த இந்த உயிரினங்களுக்கு நீ பெயரிடவேண்டும்’. கடவுள் சொன்னார்.

கடவுள் ஒவ்வொரு விலங்கினருகிலும் மனிதனை அழைத்துச் சென்றார். அவன் தன்னுடைய மனதில் தோன்றிய ஒரு பெயரைச் சொல்ல அதுவே அந்த இனத்தின் பெயரானது. அவ்வாறே அவன் பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் அனைத்திற்கும் பெயரிட்டான். மனிதனின் முதல் பணி அத்துடன் முடிவடைந்தது.

மனிதன் அனைத்திற்கும் பெயரிட்டு முடித்தபின் ஏதேன் தோட்டத்திற்குத் திரும்பினான். கடவுள் பார்த்தார். எல்லா உயிரினங்களும் ஜோடி ஜோடியாக அலைய மனிதன் மட்டும் தனியாக இருக்கிறானே என்று நினைத்து வருந்தினார். அவர் எல்லா காட்டு விலங்குகளையும் கவனித்துப் பார்த்தார், எல்லா பறவையினங்களையும் பார்வையிட்டார் ஆனால் எதுவுமே மனிதனுக்குத் தக்க துணையாகத் தோன்றவில்லை. மனிதனைப் போன்ற தோற்றத்தில், மனிதனோடு நல்ல அன்புடன் உறவாடக் கூடிய ஒரு உயிரைத் தான் மனிதனுக்குத் துணையாக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்தார்.

அன்று இரவில் மனிதன் தூங்கிக் கொண்டிருக்கையில் அவனருகில் கடவுள் வந்து நின்றார். மண்ணினால் இன்னொரு உருவத்தைச் செய்தால் அது இன்னொரு இனமாகி விடும். எனவே மனிதனிலுருந்தே ஒரு உயிரைப் படைக்கவேண்டும். அப்போது தான் அது மனிதனின் உயிரின் பாகமாகவும், உடலின் பாகமாகவும் இருக்கும் என்று கடவுள் நினைத்தார்.

அவனுடைய உடம்பில் எந்த பகுதியிலிருந்து மனிதனை உருவாக்குவது என்னும் குழப்பம் கடவுளுக்கே ஏற்பட்டது. காலிலிருந்து இன்னொரு உயிரைப் படைத்தால் அவள் மனிதனை விடக் கீழானவளாகக் கருதப் படலாம், தலையிலிருந்து படைத்தால் மனிதனை அடக்கி ஆள முயலலாம், எனவே விலா எலும்பிலிருந்து ஒரு உயிரைப் படைக்க வேண்டும் என்று கடவுள் திட்டமிட்டார்.

அப்போது தான் மனிதனும், மனிதனின் துணையும் ஒரே நிலையில் இருப்பார்கள். அவர்கள் இருவருமே சமமானவர்களாகக் கருதப் படுவார்கள். யாரும் யாரையும் விட உயர்ந்தவர் என்றோ, தாழ்ந்தவர் என்றோ எண்ணிக் கொள்ள மாட்டார்கள் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டார். தூங்கிக் கொண்டிருந்த மனிதனுக்குக் கடவுள் ஆழ்ந்த தூக்கத்தைக் கட்டளையிட்டார். அவன் மயக்க நிலையில் விழுந்தான். அப்போது கடவுள் அவனுடைய விலா எலும்பிலிருந்து ஒன்றை எடுத்து அதை மனிதனின் துணையாக உருவாக்கினார்.

மனிதன் விழித்தெழுந்ததும் கடவுள் அவனிடம்,’ இதோ… இந்த உயிரை நான் உன் துணைவியாகத் தருகிறேன். உன்னுடைய விலா எலும்பிலிருந்து இவளை நான் உருவாக்கி இருக்கிறேன். எனவே இவளும் நீயும் ஒரே உடலாகவும், ஒரே உயிராகவும் வாழுங்கள்’ என்றார். மனிதன் மகிழ்ந்தான்.
‘இவள் என் எலும்பின் எலும்பும், சதையின் சதையும் ஆனவள். எனவே இவளுக்கு நான் பெண் என்று பெயரிடுகிறேன் என்றான்’. மனிதன் துணையுடன் வாழத்துவங்கினான். இருவருமே நிர்வாணத்தை அணிந்திருந்தார்கள், ஆனாலும் வெட்கத்தை அறிந்திருக்கவில்லை. மனிதனின் ஆனந்தத்தைக் கண்ட கடவுள் தன்னுடைய படைப்பு முழுமையடைந்து விட்டதை அறிந்து மகிழ்ந்தார்.

எனது கி.மு – விவிலியக் கதைகள் நூலிலிருந்து. 

0

234 comments on “உலகம் உருவான கதை

 1. இந்த 21 ம் நூற்றாண்டுளையும் இப்படியே இருக்கீங்களே கேனப்பசங்களா?

  Like

 2. கடவுள் 5000 ஆண்டுக்கு முன் உலகை படைத்தால் எப்படி டைனசோர் எலும்பு கிடைக்கும்(20000000 ஆண்டுக்கு முன் )

  Like

 3. //கடவுள் 5000 ஆண்டுக்கு முன் உலகை படைத்தால் எப்படி டைனசோர் எலும்பு கிடைக்கும்(20000000 ஆண்டுக்கு முன் )
  //

  நான் விவிலிய அறிஞன் இல்லை ஜெய் 🙂

  Like

 4. சகோதரர் அவர்களுக்கு,

  ரொம்ப நாள் கழித்து இந்த கட்டுரையை பார்வையிட்டதற்கு மன்னிக்கவும்.
  மேலே சொன்ன சகோதரர்கள் அனைவரும் இது நல்ல கற்பனை என்றனர். தாங்கள் எடுத்த விவிலிய நூல்கள் கிறிஸ்தவர்கள் நூல் என்று கருதுகிறேன். ஆனால் கிறிஸ்தவத்தோடு தொடர்புடைய இஸ்லாத்தின் பார்வையில் உலகம் எப்படி உருவானது என்பதும், மேலும் பல வகையான உறுதிபடுத்தப்பட்ட விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் எப்படி முரணாகாமல் உள்ளது என்பதை தாங்கள் தெரிந்துக்கொள்ள டாக்டர்.ஜாகிர் நாயக் அவர்கள் எழுதிய ‘குர்ஆனும் விஞ்ஞானமும்” என்ற நூலை தாஙகள் வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் வெளிநாட்டில் இருப்பதால் தங்களுக்கு உதவ முடியவில்லை. மன்னிக்கவும். இதில் விஷேசம் என்னவென்றால் முஹம்மது ஒரு இறைதூதர் இல்லையென்றால் அவருக்கு எப்படி இவ்வளவு விஷயங்கள் தெரியும் என்னபதுதான். தாங்கள் வாசியுங்கள்.

  Like

 5. //தாங்கள் எடுத்த விவிலிய நூல்கள் கிறிஸ்தவர்கள் நூல் என்று கருதுகிறேன். ஆனால் கிறிஸ்தவத்தோடு தொடர்புடைய இஸ்லாத்தின் பார்வையில் உலகம் எப்படி உருவானது என்பதும், மேலும் பல வகையான உறுதிபடுத்தப்பட்ட விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் எப்படி முரணாகாமல் உள்ளது என்பதை தாங்கள் தெரிந்துக்கொள்ள டாக்டர்.ஜாகிர் நாயக் அவர்கள் எழுதிய ‘குர்ஆனும் விஞ்ஞானமும்” என்ற நூலை தாஙகள் வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். //

  உண்மை. பைபிளில் இருந்து எடுக்கப்பட்டது தான் இந்தக் கதை. நீங்கள் சொன்ன புத்தகம் சென்னையில் கிடைக்குமா ? எனில் கண்டிப்பாக வாங்கிப் படிக்கிறேன்.

  வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே. சகோதரர் என அழைத்துப் பின்னூட்டமிட்ட உங்கள் மனதுக்கு நன்றிகள் பல.

  Like

 6. உண்மைக்குப்புறம்பான விஷயங்கள் எத்தனையோ போதிக்கப்படுகின்றன. எப்போருள் யார்யார் வாய் கேட்பினும் – மெய்ப்போருள் காண்பது அறிவு.

  Like

 7. திருக்குறளில் சொன்னது போல் அவரவர் நினைத்து கொள்வது அவரவர்க்கு சரி. ஆனால் விவிலியத்தில் சொல்வது படிப்பதற்கு நன்றாக உள்ளது. ஆனா சில விஷயங்களின் சந்தேகம் வருகின்றது. பூமிக்கு வெளிச்சம் கடவுள் தன் கொடுத்தாரா?. அப்படியானால் சூரியன் அதற்க்கு பிறகு தன் வந்ததா? விஞ்ஞானம், சூரியனிலிருந்து தெறித்து வந்தது தான் பூமி என்கிறது. சரி என்று தான் படுகிறது. அதற்க்கு பதில் என்ன?

  Like

 8. //விஞ்ஞானம், சூரியனிலிருந்து தெறித்து வந்தது தான் பூமி என்கிறது. சரி என்று தான் படுகிறது. அதற்க்கு பதில் என்ன?//

  என்னிடம் பதில் ஏதும் இல்லை. சில விஷயங்களைக் கேள்வி கேட்காமல் ஒத்துக் கொள்பவன் நான் 🙂

  வருகைக்கு நன்றி நண்பரே.

  Like

 9. its christian faith.christian only believe bible is right.whether u all belive or not if bible said the ” world is square ” they believe it.coz, great faith is believing the things could not seeing.World cannot find logic into divine work .we can confirm with faith only. christian believe bible is supreme.

  call me 017-4323506
  malaysia

  Like

 10. i stongly believed it.. but i am not christian.. i can explain you guys.. those deny this…
  i need to know… you are atheist OR beliverver?
  And do you like to know who is true god?
  if you know.. ask you WHO n WHY?
  REST IN NEXT..
  ple chat or mail me with feel free..

  regards,
  Subaash.(boss_shivaji@yahoo.com)

  Like

 11. இந்த கதைக்கு பெரியார் புக் ல பகுத்தறிவு என்னும் புத்தகத்தில் இருக்கு அதுல கரெக்ட் சொல்லி இருக்காங்க பெரியார்……..

  முடிந்தால் வசித்து பாருங்க

  Like

 12. Pingback: கி.மு : வெண்கலப் பாம்பு விஷம் நீக்கியது « கவிதைச் சாலை

 13. உண்மையில் கடவுள் என்பது என்ன.. அதை பற்றிய உண்மையை யாரவுது சொல்லமுடியுமா?

  Like

 14. //உண்மையில் கடவுள் என்பது என்ன.. அதை பற்றிய உண்மையை யாரவுது சொல்லமுடியுமா?
  //

  சொல்வதிலோ, சண்டையிடுவதிலோ பயனில்லை, வாழ்வதில் தான் இருக்கிறது ஆன்மீகம் !

  Like

 15. ulagam yappadi vanthathunu yaralaium kandu pudika mudiyatha.ippadi yathavathu kathi vanthu na padichukalam avolatha ana itha namba mudiyathu.poi itha arichi pandratha vittutu vera yathavathu usefula pannunga.

  Like

 16. Annan xavierkku nandrigal, Nalla kadhai, Ella madhangalum thanakkena oru puranathai kondullana, yenenil nam puranathaiyum podhuvazhkaiyum oppidakudadhu,puranam enbadhu namadhu munorgalin karpanaiya thavira verondrum illai , mattrapadi oruvar adhai namuvadhum nambadhum avararavar madha pattrai poruththadhu….

  Like

 17. //, இரவை ஆள இன்னொரு ஒளிப்பிழம்பையும் கடவுள் நான்காவது நாளில் படைத்//

  கண்ணா அது சந்திரன். அது ஒளி பிழம்பு கிடையாது

  Like

 18. Dear Saviyar
  Ithu verum kathai. Aanaal yesu, nabigal, krishnar, vatham, upanishathugal matrum Ariviyal arignargal sonnathu ellavarrin saarathaiyum eduthu Unmayil ulagam eppadi thontriyathu uyirgal evvaaru parinaamam petrathu enpathai thelivaaga Kooriyullar Mahaan Vathathiri maharishi Avargal. Unmayai Therinthugolla virummbupavargal avarudaiya noolgalai padiyungal. Melum vibarangalukku http://www.vaththiri.org web site paarungal. Nantri saviyar matrum Ulaga Tamil makkalukku. Vaalga valamudan. Ellauyirgalum Inputru Vaalga.

  Like

 19. nanbargala. ulagathil alla kelvigalukum udana vedai kedaipathu ellai, athupola than ungal kelvegalum, ungal alcheyamana vemarsangalum. kadavel yanpathum, kadavel varthai yenpathum avar avar nambikaiai poruthathu. etho utharanum. nombu (fasting) erukum pothu neingal yaruku unmaiya eruka mudium ondru ungaluku, matra ondru kadavel yannum oliku. intha sambavum vesuvasathin adipadiul than nadaka mudiuma thavera, unmaia, poia yenpathil alla. athu polathan intha sambavangalum.

  Like

 20. வீட்ல சாப்பிட சோறு இல்ல ஆனா இவருக்கு இந்த கதை ரொம்ப முக்கியம்.

  Like

 21. //வீட்ல சாப்பிட சோறு இல்ல ஆனா இவருக்கு இந்த கதை ரொம்ப முக்கியம்.//

  நன்றி பிரபு எம்.சி.எ 335 !

  Like

 22. edu ezudiyavaruku vanakam.
  neengal romba azagaga. ullgam uruvana kadai sonirgal.annal ulagam apo erunda matram epo illai adu en. ulagathil ellame marivitadu anal manithanin gunam matum enum maravillai.madam thonriadhal than matrangal mariyadu apadi erkum podu manidan matum epadi marinargal. ungal .

  Thngal bathiluku katirukiren. nanri vanakam

  Like

 23. //ulagathil ellame marivitadu anal manithanin gunam matum enum maravillai//

  இப்படிப் பொதுப்படையாகக் குறை சொல்வதை விட “மனிதர்கள் நேசம் மிக்கவர்கள்… அதற்கு உதாரணமாக நான் இருக்கிறேன்” என ஒவ்வொருவரும் சொல்ல ஆரம்பிக்கும் நாளில் வாழ்க்கை வளம் பெறும் !

  Like

 24. திரு சேவியர்,

  அவர்களுக்கு, இந்து மதத்தில் இல்லாத கருத்துக்களா பிற மதத்திதல் இருக்கின்றன. அன்பையும், அமைதியையும் சொன்ன இந்து மதத்தைவிடவா பிற மதங்கள் உயரியவை.

  உலக சிருஷ்டியை நன்கு அரிந்துகொள்ள இந்திய ஆன்மீக நூல்களை ஆராயுங்கள் நண்பரே.

  Like

 25. //திரு சேவியர்,

  அவர்களுக்கு, இந்து மதத்தில் இல்லாத கருத்துக்களா பிற மதத்திதல் இருக்கின்றன. அன்பையும், அமைதியையும் சொன்ன இந்து மதத்தைவிடவா பிற மதங்கள் உயரியவை.

  உலக சிருஷ்டியை நன்கு அரிந்துகொள்ள இந்திய ஆன்மீக நூல்களை ஆராயுங்கள் நண்பரே.
  //

  நன்றி நண்பரே.. வருகைக்கும், கருத்துக்கும்….

  Like

 26. வேதாகமத்தின் முதல் பக்கத்தில் சொல்லப்பட்டிருப்பது உலகம் உருவான வரலாறு அல்ல சகோ. அங்கே சொல்லப்பட்டிருக்கும் படைப்புக் காரியங்கள் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற வகையில் தேவன் பூமியை செம்மைப்படுத்தியதும் பின்பு மனிதனை படைத்ததுமே. பூமி அதாவது உலகம் அதற்கு முன்பே இருந்தது. அந்த முந்தைய உலக உயிரினங்களே டைனோசர் போன்ற பெரும் பிராணிகள். இதற்கு விளக்கமே பெரும் கட்டுரையாகிவிடும். இது பின்னூட்டமும் பின்னூக்கமுமே! நன்றி தங்கள் பதிவுக்கு

  Like

 27. //மனிதன் வாழ்வதற்கு ஏற்ற வகையில் தேவன் பூமியை செம்மைப்படுத்தியதும் பின்பு மனிதனை படைத்ததுமே//

  உண்மை. விஷயங்களைத் தெரிந்து பேசுகிறீர்கள். நன்றி !

  பூமியைப் படைத்தது வெகு வெகு வெகு காலம் முன்பே. அதன் பின் அதிகாரம் விரும்பிய லூசிபர் தொடங்கிய 1/3 பங்கு தேவதூதர்களின் பிழையால் பூமி பாழடைந்தது ! இது விவிலியத்தில் உண்டு. துவக்கத்தில் அல்ல, கடைசியில் ! பைபிளின் முதல் பக்கத்தில் வருவது, அப்படிப் பாழடைந்த பூமியை செம்மைப் படுத்திய நிகழ்வே !

  Like

 28. *****Indha padam 2000 varushama runaichu, ethuku mela odathu??????????
  *****aena enna pola buthi sali romba peru erukanga……………………………..,..

  Like

 29. Matham Matham Enpathai Vida, Mitham Maanidam EnruNaam Cinthithaal, AvlangKal Aniithikal ThaaNaaka ParnThoodum, EnRuNaam Manitham Athanai MathikKinRoomoo, AnnRuthaan UlakilCiRappudai AannMiikam EmMulPadaRum, KonRaal PooChu Athai UndaalPooKum,EénRu NinaiThavar IruThiJil EnNaKaannPaar?…, IruThiJil Eénna KaanPoom ?… Kuudap PiRanThoor Kaddiya Manavi YaaTaYungKaanoom.. !!??!!, IrukkumPooThu NanMaiYai CiYaaVidinum PiRarManaThiNai, NaamPun PaduThaa ThiRuThal, ManiTham EénRum MéénMai A(Y)daiYum, Ci(Si)vaNum Saththiyum UnnDénRaal, AaThaam Eévaal ééPadi Vanthaar?.. Avanunum Ivanum ILLai EéénRaal, ManiTham EépPadi VanThaThu SoolViir..??!!, AthaNaal SoolVéénn NaaMéé MamaThu NaaVai AdakKIK KoolVoom, AnPéé ThéiVam AthuVéé KadaVul, Inpam ééNpathu ILamaiVaRaikKum,IThanPin KaanPaThu ééThuThaan NanPaa..?? “” KAAN PATHU ééNNA ?”” ++K.SIVA (Fr)++

  Like

 30. I STRONGLY BLEAVE .EVERY MAN BORN IN THE WORLD DIED WITH OUT ANY
  FAIYH LIKE A ANIMAL ,BUT, WHO LOVE THE TRUTH AND FAITH ON GOD DIED WITH PEACE AND SUBMIT TO GOD- YOUR WARDS ARE VERY NICE

  Like

 31. 1.I STRONGLY BLEAVE .EVERY MAN BORN IN THE WORLD DIED WITH OUT ANY FAITH LIKE AN ANIMAL ,BUT, WHO LOVE THE TRUTH AND FAITH ON GOD DIED WITH PEACE AND SUBMIT TO GOD- YOUR WORDS ARE VERY NICE
  Can a Creation judge the creater. No man cannot able to creat even a small ant in his whole power .

  Like

 32. how dare you can say this is a story. BIBLE is word GOD. beware of your words. otherswise you shoul give account to God

  Like

 33. 2008-ல் எழுதிய பதிவு இன்றளவும் படிக்கப்பட்டு விமர்சனங்களும் எழுதப்பட்டு வருவது ஆச்சரியமான விஷயம்தான்.

  மற்ற மத நம்பிக்கைகளைப் பற்றி எழுதப்படும்போது வராத எதிர்ப்பு கிறிஸ்தவத்தைப் பற்றி எழுதப்படும்போது மட்டும் வருவது ஏன்?

  Like

 34. ஒரே இரத்த சம்பந்தம் உடையவர்களா முதல் ஜோடி.?
  அதால எப்படி இனம் விருத்தி அடைந்தது …
  அப்போ மிருக வாழ்க்கை தான் அண்டவன் படைத்த முதல் மனித படைப்பா .?
  இப்போ அப்படி உறவு கொண்டடுகிறவர்களா இதை நன்புகிறவர்கள் ???
  இல்லை
  மனிதன் கடவுளின் பிழைகளை சீர்திருத்தி இருக்கிறானா ?

  இந்த உலகத்தை படைக்க ஒருவருக்கு 5000 நாள் தேவைபட்டிருக்கு.

  எல்லா புத்தகங்களும் 1400, 2000, வருடத்துக்கு பின்னயத்தை சொல்கிறது
  இன்னொரு ஒரு புத்தகம் பல லட்சம் ஆண்டு பழையதை சொல்லுது .

  எல்லாம் மாயம்

  Like

 35. //ஒரே இரத்த சம்பந்தம் உடையவர்களா முதல் ஜோடி.?
  அதால எப்படி இனம் விருத்தி அடைந்தது …
  //

  இதன் பதில் பைபிளில் உள்ளது ….

  Like

 36. //2008-ல் எழுதிய பதிவு இன்றளவும் படிக்கப்பட்டு விமர்சனங்களும் எழுதப்பட்டு வருவது ஆச்சரியமான விஷயம்தான்.

  மற்ற மத நம்பிக்கைகளைப் பற்றி எழுதப்படும்போது வராத எதிர்ப்பு கிறிஸ்தவத்தைப் பற்றி எழுதப்படும்போது மட்டும் வருவது ஏன்?

  //

  எல்லா மத விஷயங்களும் எதிர்ப்புகளுக்கு உள்ளாவது தான். மதத்தை விட்டு கொஞ்சம் தள்ளியே நின்று இறைவனிடம் தஞ்சமடைபவர்கள் பாக்கியவான்கள் 🙂

  Like

 37. ulagam athu uyirinathin uraividam iyarkai athu uyirinathin iraivan vaalum varai santhosamai iruda manida irantha pin nee yaarada un aatam engeda so keep smile unnai valinadatha oru sakthi irukirathe ithu un uyir pirintha pin valinadathuvan.

  Like

 38. naam irantha pin enna aavom endru kavai padathe: unnai un thaiyin vayitril pirakka seithu aval ethayathil unavu padaitha iraivan ,nee irantha piravu nee sellum or pirakkum idathayum vaguthiruppan`

  Like

 39. கடவுள் நு சொல்லுரிங்க எந்த கடவுள் நு சொல்லல கடவுள பொய் ஆவினு ஏன் சொல்லுரிங்க….எதோ படத்துல வர ஒரே பாட்டுல பெரிய ஆள் ஆகிறது மாதிரி இவளவு இசியா உலகம் உருவானதா சொல்லிடிங்களே பாஸ்…ஒரு குழந்தை உருவாவதற்கு பத்து மாதம் ஆகும் நீங்க ஏலே நாட்களில் எல்லாத்தையும் முடிச்சிடிங்க லே பாஸ்…உங்களால எப்படி இது மாதிரி எல்லாம் யோசிக்க தோணுது…..

  Like

 40. //ஒரு குழந்தை உருவாவதற்கு பத்து மாதம் ஆகும் நீங்க ஏலே நாட்களில் எல்லாத்தையும் முடிச்சிடிங்க லே பாஸ்//

  வருகைக்கு நன்றி.

  Like

 41. AaaThaam EéVaal IL Lai EénnRaal
  Akilam IL Lai AnRoo – A ThaNaal
  Sool Véén In Naal PonNaal
  IThaNai I Nai ThThaal – Eé Thir Varum
  Poon Naal 2011 Nan Réé AaKa
  Inn Pudan Anai VaRum
  Inpudan On Raaji
  AkiLam Vaal Ka
  Nii Du Nad Pudan
  Nan Réé AaKuka.
  ++ K.Siva (France)

  Like

 42. PaaLan VaraVu
  PaaTil Pu NiTham
  Pa Kalavan Va RaVu
  Ujir Kaluk Ku UudDam
  Mani Than EénPaVan
  I DaiJil Ninrk Kum
  Asaii Yum Poo Ru Léé
  AaThalaal Inpudan
  Puthu Naal NanNaal
  NanRéé PuTika
  NanMai Jéé PaYakKUM
  01 . 01 . 2011
  AnPudan AA KU KA
  In Pudan …. K.Siva(France).

  Like

 43. Aaa Thaam éEvaal
  Ava ThaaRam -Ani Varum
  AriVaar Jaar Thaan
  Eéé Thip Paar -Nii Jéé
  Sool Vaaji éN Anpaa;
  ++ NII JAI SOLL VAAJI EnAN paa ++
  ========K.Siva Fr ====2011==

  Like

 44. lilly….
  praise the lord…….
  all these commenter will surely have to stand in an judgement day in front of jesus……. so u contiune ur work…… the lord will upraise his servant……

  Like

 45. மற்ற மத நம்பிக்கைகளைப் பற்றி எழுதப்படும்போது வராத எதிர்ப்பு கிறிஸ்தவத்தைப் பற்றி எழுதப்படும்போது மட்டும் வருவது ஏன்?

  //

  எல்லா மத விஷயங்களும் எதிர்ப்புகளுக்கு உள்ளாவது தான். மதத்தை விட்டு கொஞ்சம் தள்ளியே நின்று இறைவனிடம் தஞ்சமடைபவர்கள் பாக்கியவான்கள்…

  கிறிஸ்தவம் ஒரு மதமல்ல..
  கடவுளைச்சென்றடைய ஒரு வழி…ஒரே வழி…

  “இறைவனிடம் தஞ்சமடைபவர்கள் பாக்கியவான்கள்”

  “இறைவனிடம் தஞ்சமடைபவர்கள் பாக்கியவான்கள்”

  “இறைவனிடம் தஞ்சமடைபவர்கள் பாக்கியவான்கள்”

  Like

 46. கடவுள் தான் மனிதனை படைத்தார் என்றால் , அறிவையும் அவர்தான் கொடுத்திருப்பார் . பல நூற்றாண்டுகளுக்கும் முன் தோற்றிய கடவுள் ஏன் கடந்த 30 வருடங்கள் தான் மனிதன் கம்ப்யூட்டர் உருவாக்கி இருக்கிறான். ஏன் இந்த அறிவை பல நூற்றாண்டு முன்னால் கொடுக்கவில்லை , அப்படி கொடுத்திருந்தால் , நமது இந்திய எங்கோ சென்றுகிருக்குமே !

  Like

 47. Poomiyai padaikkum mun kadavul enkirunthar? Irunthirunthal athuvarai Ean ulakathai padaikkavillai? Sooriya kudumpathil irukkum Poomi thontum mun sun thane vanthirukkavendum?

  Like

 48. சூரியன், நிலவு இருந்தால் தானே வெளிச்சமும், இருளும் தோன்றும்… ஆனால் முதல் நாளே வெளிச்சத்தை சூரியன் இல்லாமல் எப்படி உண்டாக்கினார் ? பெரிய கொடுமை நான்காம் நாள்தான் சூரியனையே உண்டாக்குகிறார், பின்னர் எப்படி முதல் நாள் வெளிச்சமும், இருளும் மாறி மாறி வரும்

  Like

 49. nann,,,,,,,, ethai padethu manam vtu serthan meka nantry ,,,,,,,, supper jock mr sevear , poi nalla valaya paruka sir earaum mudala aktheka ,,,,,,,,,,,,

  Like

 50. nanpare muthalil bible olungaka padikkavum , purinthukollamudiyavillai ental thaniyel refrence athavathu bibelin vilakkavurai vanki padiyunkal

  Like

 51. //nanpare muthalil bible olungaka padikkavum , purinthukollamudiyavillai ental thaniyel refrence athavathu bibelin vilakkavurai vanki padiyunkal

  //

  அப்படியே செய்கிறேன் ! வருகைக்கு நன்றி !!

  Like

 52. //appatina katavula patachathu yaaru ulagam uruvagathuku munnati katavul ennapannunar

  //

  எல்லா கேள்விக்கும் விடை தெரிஞ்சா, நானே கடவுளாயிடுவேன்ல !

  Like

 53. //nann,,,,,,,, ethai padethu manam vtu serthan meka nantry ,,,,,,,, supper jock mr sevear , poi nalla valaya paruka sir earaum mudala aktheka ,,,,,,,,,,,,

  //

  உங்களைச் சிரிக்க வைக்க முடிந்ததே என மகிழ்கிறேன் !

  Like

 54. //சூரியன், நிலவு இருந்தால் தானே வெளிச்சமும், இருளும் தோன்றும்… ஆனால் முதல் நாளே வெளிச்சத்தை சூரியன் இல்லாமல் எப்படி உண்டாக்கினார் ? பெரிய கொடுமை நான்காம் நாள்தான் சூரியனையே உண்டாக்குகிறார், பின்னர் எப்படி முதல் நாள் வெளிச்சமும், இருளும் மாறி மாறி வரும்
  //

  அடிப்படைக் கேள்விகளுக்கு அப்பற்பட்டவை சில நம்பிக்கைகள். !

  Like

 55. //கடவுள் தான் மனிதனை படைத்தார் என்றால் , அறிவையும் அவர்தான் கொடுத்திருப்பார் . பல நூற்றாண்டுகளுக்கும் முன் தோற்றிய கடவுள் ஏன் கடந்த 30 வருடங்கள் தான் மனிதன் கம்ப்யூட்டர் உருவாக்கி இருக்கிறான். ஏன் இந்த அறிவை பல நூற்றாண்டு முன்னால் கொடுக்கவில்லை , அப்படி கொடுத்திருந்தால் , நமது இந்திய எங்கோ சென்றுகிருக்குமே !

  //

  உட்டா ஆதாம் கையில ஏன் கைத்துப்பாக்கி இல்லைன்னு கேப்பீங்க போல 🙂

  Like

 56. //lilly….
  praise the lord…….
  all these commenter will surely have to stand in an judgement day in front of jesus……. so u contiune ur work…… the lord will upraise his servant……

  //

  நன்றி !

  Like

 57. ONE SMALL DOUBT:
  * ENNODA DOUBT AH UNGALALA CLEAR PANNA MUDIUM NU NA NINAIKKARA PLS HELP.

  * INTHA ULAGATHTHA KADAVUL PADACHAR NU PATHI PERUM. SOORIYAN LA IRUNTHU PIRINCHU VANTHATHUN NU SOLRANGA OK I AGREE.

  * BUT SOORIYAN EPPADI VANTHATHU. INTHA ULAGAM URUVAVATHARKKU MUNNALA EPPAD IRUNTHATHU.

  * ULAGAM THONRI SUMAR 5,00,000 VARUSAMACHUNNU NA KELVI PATTA, ATHUKKU MUNNAD ETHANA VARUSAMA SOORIYAN IRRUKKU.

  * ULAGAM ALIYUM NU SOLRANGA, ATHUKKU APPARAM INTHA SOORIYAK KUDUMBAM EPPAD IRRUKKUM.

  * ITHU YELLAM IYARKKAI NU SONNENGA NA,

  * IYARKKAA YAI YAR CONTROLL PANRANGA.
  ATHUKKU LIFE EVLO YEAR.ATHUKKU PIRAGU INTHA PIRABANJAM EPPAD IRRUKKUM.

  ITHU ENNODA ROMBA NALL QUESTION.

  * ITHU AVASIYAM NA PLS HELP. APPAD ILLANA
  I”M VERY SORRY UNGALA DISTURB PANNUNATHUKKU.

  Like

 58. friends …… kadavual entha ulakathula ella .. but atharku melalaga oru pereya sakthi erukku , manidhan dan kadaual enra pearula ell panra ,,,, example nenthaya nanda ,,,,

  Like

 59. unmailla manedhan kurangulendu vandhavandhan atharukku eduthukattu kattru , earatham , thanner , ella merukangallu manitham oru vedthasamanvam avalaudhan ,,,,,, ellam chinna chinna kerumegal seium velai edthu ,,, because science

  Like

 60. praise the lord…….
  all these commenter will surely have to stand in an judgement day in front of jesus……. so u contiune ur work…… the lord will upraise his servant……

  Like

 61. anbana saviour,
  vedhathil lulla yella kelvigalukkum vidai vedhathil lulladhu.rombo simple, eg: science sollugiradhu yellaa padaipugalakkum avasiyum TIME,SPACE@MATTER .
  pala aayarum andugalakku munnadhagavey edhai vedham solllivitadhu yeppadi??.
  mudhal adhigarathin mudhal vasanam sollugirathi gavaningal
  aadhiyelay(TIME) devan vaanathaiyum(SPACE) boomium padaithar(CREATION).

  physical universe.

  Time, Space and Matter

  In the very first verse of the Bible we find remarkable evidence of supernatural authorship(GOD). “In the beginning (time), God created the heavens (space) and the earth (matter).” Genesis 1:1

  Take for an example the Hindus ancient writings purporting that ‘the earth is balanced on the back of an elephant’. yes its true i feel shy to say that iam a hindu.

  who created the week as seven days and where it was found???

  any genuis answer this question lets see a
  my cell no:7871326954

  Like

 62. dai loosu pakki raja …..kadavul yengurathu oruthar than atha naanum namburen….athukaga unna pola hindula irunthu chistian ah marittu unoda thai mathathai thappa pesatha..neyellaam hindu la irunthathuku antha mathameh vetkapattirukum …moodaneh

  Like

 63. சாகப்போற நாள் தெறீஜ்சா வாழப்போற நாள் நரகம் ஆயிரும்..

  SO DONT THINK ANYTHING… ENJOY YOUR LIFE..

  Like

 64. kanaum karpanaium ulagathil unmai endru vathidupavar mathiel ethuum ketkamattarkar muthalil etharkaka pranthamo athai sari vara nam parthu nadanthal pothum mudinthathai enni kondirunthal entraiya valiu ,,,apppppppppppppppppppppppoooooooothan .by fr

  Like

 65. நண்பா இதை உண்மை என்று நினைத்து படித்தேன்! தயவு செய்து உண்மை மட்டும் எழுதுங்கள்

  Like

 66. jaisankarj(சங்கர்) கவனிக்கவும் பைபிளில் ஆதி தேவன் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார் என்று எழுதிருக்கிறது மற்றும் அக்காலத்தில் தேவ குமாரர்களும்,ராட்சதர்களும் இருந்தார்கள் என்றும் எழுதிருக்குது என்பதை அறிய வேண்டும் மனிதன் படைக்கப்படும்முன் இப்பூமியில் அநேக ரகசியங்கள் இருப்பதை நாம் தெளிவாய் உணரமுடியாவிட்டாலும் தேவ குமாரர்களும்,ராட்சதர்களும் என்ற வார்த்தையை பார்க்கும் போது உலகம் உண்டானது 5000 வருஷம் அல்ல அது ஆதியில் என்பது அளவிடப்பட முடியாத்தது.

  Like

 67. 3 aam naal thavarangalum 4aam naal suuriyan padaikka pattal (suuriya oli illamal thavaram irukka mudiyuma) ithu (scientific error)

  aaduthu #nilavin velicham sontha velicham alla (suuriyanoda prathipalipu velicham ) aanal thani thani velicham endru bible kurugirathu (scientific error) (vedha noolgalil oru thavaru irunthalum athu kadavulin vaarthaiyaga irukka mudiyathu.)

  Like

 68. நல்ல கதைங்கன்னா .. நம்பத்தான் முடியலீங்க.. ஏனுங்கண்ணா பழைய கதையவே கட்டிகிட்டு அழுக்கிறீங்க… நீங்களே மூடநம்பிக்கை பத்தியும் எழுதறீங்க.. இதையும் எழுதறீங்க.. உங்கள என்னால புரிச்சிக்க முடியலீங்கன்ணா… ஏதோ ஒரு பக்கம் இருங்கண்ணா..

  எந்த மதத்தில சொன்னாலும் மூட நம்பிக்கை மூட நம்பிக்கை தானுங்கண்ணா…

  Like

 69. Kadavul Illaiyadi Papa !! Jathikal Erukuthadi Papa !!

  Kanavum Yekkamum Than Kadavul adi Papa… Athu Karpanaiye Papa ….
  Intha Ulagai Yarum Uruvakamudiyathadi Papa.. Athu Alinthu Melumadi Papa…

  Panam Onrthan Intha Ulagathuku Venumadi Papa !!
  Karupai Piranthale Pavamadi Papa…. Karupane Karupai Verrukiranadi Papa….

  Ulla Thunivu Onre Vellumadi Papa… Un Tamilai Matttum Vittuvidathadi Papa…
  Un Ottrumaiyum Enapasamum Kelikuthadi Papa….

  Un Mugavariye Tamil adi Papa.. Aathi Maranthal Nee Yaradi Papa…
  Yemattruvam Aryan adi Papa… Yemaruvan Tamilan adi Papa….

  Like

 70. KADAUL ENTRU ELLORUM SOLLURINGALEA KADAUL NA YAR ETHU VARAI ATHU KARPANAIYAI KADAUL ENTRA PER SUTTY VILAIYADUKINRAN .NAM ORU POIYAKA ERUKUM POTHU NAM SOLLUKINRA VARTHI SOLLAVA VENDUM .

  Like

 71. MANITHANEA ORU KARPANAI .MANITHAN SOLKIRA VARTHAIKALAI SOLLAVA VENDUM.ENTRU NAN SOLLUKARA VARTHAIKAL 2000 VARUSAM ANA PERAKU ENNAIYUM KAUL ENTRU SONNALUM SOLLUVARKAL

  Like

 72. Kathai thiran nandraga irundha poathilum idhil satru ariviyal kalandhu koori irundhall
  Miga nanraaga irunthirukkum its my personal opinion comrade

  Like

 73. ethu unmaitha nampunga frds asappa vara poraru manam thirumpunga pie erukarathu unmainu nampuringala athu vita unmainu nampunga frds
  amma ellamaiya nammala vanthom, patti kollupattinu thearium apa yaru ulagathula vanthu eruppanga

  Like

 74. edha nambadhavungalam solluvanga nambalam korangula erundhu vandhom nu appdi partha oru oruthanum marathuku maram thavikittu dha erukanum.

  Like

 75. yellarum sonna padi , katha alla ithu nijam .

  suriyanilurunthu vizhuntha oru kal than poomi engirathu science , amam athey bagavth keethaiyilum solli irukirathu , suriyan akrosam adainthathanal avarududayam sila paguthigal aangange sithari na , athi ontru than poomi ,

  poomi ontru ana piraguthan kadavul mudiveduthar , athai seeramaikka

  kadavul nenathaal thaan poomi uruvanathu .

  antha kadavule ,vevveru peyarkalil alaikintrom avolthann

  athanal yarum uthasina padutha vendam .

  Like

 76. kadavul vandhu sonnadhan unmai veliya varum manidhanai porutha varai kadavul irukirar alladhu illa ennbadhu ellam avaravar nambikkai annal adhu unnai agividadhu anaithum nambikkai unmai marai porul vidai kadavulidam
  any dowt cal 8148367323

  Like

 77. இந்த படைப்பில் சந்தேகம் இருந்தால் இரவு 9:00தொடர்வு கொள்ளவும்

  Like

 78. Sir enakku oru santhegam ki-mu Ki-pi irukku la athula ki-pi 2015 vanthutichi , ki-mu epo mutinjichi sir enna thappa nenaikathinga sir ethu enakku rompa nala santhegama irukku……

  Like

 79. Hai my Dr brother….
  Nanum neraya yosikren….Anna..manuthan piranthatha Vida…manithan iranthathuku aparam enna nadakumnu……jenmam…..maranam both r secrets of the earth……athu 6 arivu padacha manusanala unara mudium BT athuku athutha sakthikal venum nu nenaikra…am I right?

  Like

 80. U need some answer reed to the bible . the god how To create the world and who is this real god every answer give you the bible but one thing Jesus Christ not for religion he’s savior the world.

  Like

 81. Sagalathaium padaithhavar sathaa kaalangalilum vaalpavar ellam avarale koodum , naane valzhium sathyamum jevanumaai irukkirean. Endru sonnavar epadi solvar naan than kadavul naanthan intha ulagaththai (prapanchathhai)padaithen endru ?? aathikkalathile manithanaga padaikka pattavargal ninaithirunthaal antha aandavanidam kelvi kettiruppargal intha vulagathile naanga iruvar mattum eppadi vanthom engalai padaithavan yaar intha vulagaththai padaithavar yaar endru??aanaal avargal ketkka villai! Yeen yendraal avargalukke(a) therinthirukkum nammai padaiththavan thaan intha vulagathaium padaithiruppan endru aanaal andru avargal ketkkatha antha kelviyai indru neegal ketkurirgal avargal andru kettiruthaal ungalukku munbe vidai vidaikidaithirukkum ……..purindhthaa??

  Like

 82. வெடிச்சிதறலிலிருந்து ஒழுங்குமுறை (order) வருவதில்லை. ஒழுங்கு குறைந்துதான் வரும் (order/discipline decrease). கோள்கள் சூரியனை இன்றும் ஒழுங்குமுறையில் சுற்றிவருதல் என்பது வெடிச்சிதறலை மறுக்க ஒரு எடுத்துக்காட்டாகும்.
  சூரியன் நட்சத்திரம் கோள்கள் எல்லாம் ஒரே பொருளிலிருந்து உண்டாகின என்றால் எல்லா கோள்களிலும் அந்த பொருள் காணப்படவேண்டுமல்லவா? ஆனால் ஒவ்வொரு கோள்களும் விசேஷமானவை! சூரியன் என்பது 98% ஹைட்ரஜன்/ஹீலியம் என்றால் புதன், பூமி, செவ்வாய், வெள்ளி ஆகியகோள்களிலும் ஏறக்குறைய அதே விகிதம் இருக்கவேண்டுமல்லவா? ஆனால் இவைகளுக்குள் பொதுவாக 1% குறைவாகவே ஹீலியம் உள்ளது.

  Like

 83. சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு பொருள் வெடித்துச்சிதறும்போது அதிலிருந்து வீசப்படும் பகுதிகளும் அதே திசையில் சுற்றவேண்டும்(spin) என்கிற விஞ்ஞானத்தின் அடிப்படையே நாம் வசிக்கும் சூரியகுடும்ப கோள்களில் இல்லை. சூரியனை பூமி, செவ்வாய், வியாழன் என்பவை கடிகாரமுள் சுற்றும் திசையில் சுற்றுகின்றன. ஆனால் புளூட்டோ, வெள்ளி(Venus) ஆகியவை கடிகாரமுள் சுற்றும் திசைக்கு எதிர் திசையில் சுற்றுகின்றன. யுரேனஸ் செங்குத்தாக சக்கரம் சுற்றும் கோணத்தில் சுற்றுகின்றது. எல்லாக்கோள்களுக்கும்(planets) உள்ள துணைக்கோள்களும்(moons) அந்த கோள்கள் சுற்றும் திசையில் சுற்றவேண்டும். குறைந்தது 6 துணைக்கோள்கள் இதற்கு முரண்படுகின்றன. மேலும் நெப்டியூன், ஜூப்பிட்டர், சனி ஆகிய கோள்களின் துணைக்கோள்கள் இரு திசையிலும் சுற்றும் கோள்களை கொண்டுள்ளன.
  நான்கு கோள்களுக்குமட்டும் ஏன் வளையங்கள் என்ற கேள்வியும், வாயுக்கோள்களாகிய ஜூப்பிட்டர், சனிக்கு எப்படி துணைக்கோள்கள் இருக்கமுடியும் என்ற கேள்வியும். சந்திரன் பூமியை வட்ட சுற்றுப்பாதையிலும், பூமி சூரியனை நீள்வட்டப்பாதையிலும் சுற்றுகிறதே போன்ற கேள்வியும் சிந்திக்க வைக்கின்றன.

  Like

 84. மகா வெடிப்பிலிருந்து உயிர் வர வாய்ப்பு இல்லை. இவைகளை இப்படி உருவாக்க மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஞானம், அறிவு தேவை.
  எனவே சிருஷ்டிப்பைத்தான் இந்த உலகத்தில் காணப்படுபவைகள் நிரூபிக்கின்றன. தானாக உருவாயின என்று ஏற்றுக்கொள்ளவது, ஆழமாக ஆராய்ந்துபார்க்காமல் செய்யும் பிழையாகும்.

  Like

 85. intha ulagam undanathu 5000/6000 varudathirkul alla maraga manithan(human) padakapatu than 6000 years aakirathu, intha ulagam undaki kodi aandugaluku mel aagirathu.in bible 1st book geni aathiyagamam:-1 & 2 vasanangalukidaye ku idaiye kodi aandugal undu.

  Like

 86. dear bro; unmaya eduththu sonnathaala nanbargal kitta asinga paduringla……. karthar intha pathivai parkum badi kirubai seithaar…. mele nanbargal moolam ketka patta kelvigalukku bathil sollum kaalam vanthathu…………………… ini kaalam sellathu….. intha ulaga pragaramaana kelvigalukkukku bathilodu raja varugirar… ungal uzhiyathin meethu karthar karisanaiyaga irukkirar….. karthar ungalai paarthu solgirar… intha pathivai naan padikkum pothu kartharudaya vallamai ennai moodi kondathu.. karthar ungalukkana vaarthaiyai ennidam solgirar; ennai nokki partha mugangal vetkapattu povathillai ithu nengal palugi perugira kaalam… ungaludaiya marathinai (uzhiyaththai) ungalin uyirai koduthu valarthu varugireer .. ungal unmaiyai karthar parthar… enave nengal valartha intha maram ungalukku kani kodukkum kaalam vanthathu…. kalangaathirungal karthar ungalai aasirvathippar.. nengal visuvaasithal nengal irukkum idathil intha nerathil karthar than vallamaiinal ippothe ungalai idaikattuvar.. nengal mandiyittu kartharukkukku nandri solveergal

  Like

 87. Interesting story but can’t find any one “born of earth”/
  Every religion have separate story.
  Scientific story also different but have logically it’s believe by some bodies. I am also believe scientific proof.
  Finally my thought don’t neglect any kind of story every one have one strong moral please take only goods ,negative commands it’s easy I think.

  Liked by 1 person

 88. That’s right bible is true,ithuve ungaluku puriyalaye yesuvin irandam varukai ah eppadi purinjuka poringalo,kadavul tha ellaraiyum kaapathanum.

  Like

 89. TANAGA URUVANDU YENTAL IPPOLUTHUM MANITARGAL URUVAGI KONDETHAN IRRUPARGAL KURANGILIRUNTHU VANTALUM IPPODUM AVVAARU MAARI IRRUKANUM ANAL MAARAVILLAI ,IDILIRUNTHU TERINTHU KOLLALAM PADAIPU ONTU ULLADU YENDU…

  Like

 90. Nanbargale.. Kadavulukku address kettavargal address illamal poivittanar.. Sarithirathai paarthoomanal intha unmai vilangum.. Padaippin ragasiyam vivathikka vendiya visaiyam alla.. Athu thevanai thavira yavarukkum velippaduthappada villai.. pala million aandugal nadantha antha padaippin sambavam 1 athigarathil surukkamaaga velippaduthappadttullathu.. Ithai visuvasikkiravarkalukku athu theli thenai pool irukkum.. visuvasikkathavargalukko paithiyamai thontrum..

  Nan oru paditha pattam vaangiya pala corporate compoany galil velai seithu anubavam ulla ariviyal vinnanathithil naattam ulla manithan.. ennaiyum thevan santhithaar. Ennal panam sambathikka mudinthathu .. anaal sambathuitha panathai konndu nalla nimmathiyaana vaalkai vala mudiyavillai.. Anaal inru en vaalkaiyil uyir ullathu , nimmathi ullathu.. Magilchi , santhosam nilaithirukkirathu.. enenil naan en palaya pava vaaikkaiyil irunthu meendu kadavulin varthaiyin padi vaalkayai matrikkondathaal than..

  Bible varthaikal unmai ullavai.. athil oru sollo oru muttuppulliyo oru comma vo kooda poiyanavaikal alla.. enentral ithu manitha arival eluthappadathalla.. Thevan kirubayal eluthappattathu..

  Like

 91. intha history ok.but oru santheegam.god 2 nabarai mattum than padaiththar enpathu history irukku ok.appadi endral anaivarum oru thai billai thaanee ?

  Like

 92. Yes Bros.. All the religions are saying same thing.. But all the Gods are not lived perfect personal life according to their religious books .. You all know who lived and died and risen back without sin.

  Like

 93. Muttaiyil irunthu koli(kunju) vanthathaa illa koli la irunthu mutta vanthathaa yarukume theriyathu apram yen Thevai illama pesitu irukinga… Konjam yosichu parunga pa.. Rendula yetho onna yaro padachurukanga kandipa athu kadal than.. Antha kadavul kandipa Jesus than … Avara innum vethana paduthathinga pa.. Plz.. Neenga ellarume nalla irukanum athukaga than sollu irukom purinjukonga…

  Like

 94. Muttaiyil irunthu koli(kunju) vanthathaa illa koli la irunthu mutta vanthathaa yarukume theriyathu apram yen Thevai illama pesitu irukinga… Konjam yosichu parunga pa.. Rendula yetho onna yaro padachurukanga kandipa athu kadavul than.. Antha kadavul kandipa Jesus than … Avara innum vethana paduthathinga pa.. Plz.. Neenga ellarume nalla irukanum athukaga than sollitu irukom purinjukonga…

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s