நானும், தாத்தாவும், வேப்பமரமும்

steps.jpg

மேற்குப் பக்க
வேப்பமர ழலில் தான்
தாத்தாவின்
மாலை நேர நாற்காலி,

எனக்கோ,
மின்விசிறிக் காற்று
தலையைக் கலைக்க,
தொலைக்காட்சி வெயிலில்.

வேப்ப மரக் குச்சி தான்
தாத்தாவின் பல்லுக்கு,
எனக்கோ
சுகாதாரத்தையும்
சோதனைக் கூடத்தில்
தயாரித்தால் தான் ஆகும்.

தாத்தாவின்
மூட்டு வலிச் சோர்வுக்கான
மூலிகை எண்ணையை
வேப்ப மரம் தான் தரும்,
எனக்கு
அயோடெக்ஸ் அனுமதி தான்
மூட்டு வலியை
விரட்டி வைக்கும்.

தாத்தாவுக்கு
சுகாதாரமில்லாத
குளத்து நீர் குளியல் தான்,
எனக்கோ
ஷவரில் கரையும்
உள்ளறைக் குளியல்.

கலோரிகளைப் பார்க்காமல்
நான்
உண்பதில்லை,
தாத்தாவுக்கு
கலோரி என்ன என்பதே
தெரிந்ததில்லை.

இருந்தாலும்,
தாத்தா
எண்பது வயதிலும் பனையேறினார்,
நான்
இப்போதே படியேறத்
தடுமாறுகிறேன்.

6 comments on “நானும், தாத்தாவும், வேப்பமரமும்

  1. //இருந்தாலும்,
    தாத்தா
    எண்பது வயதிலும் பனையேறினார்,
    நான்
    இப்போதே படியேறத்
    தடுமாறுகிறேன்.

    //

    அப்படி என்னதான் சொல்ல வர்றீங்கன்னு படிக்க ஆரம்பித்தேன்..ஆனால் இறுதி வரிகளில் பின்னிட்டீங்க…. நன்றாக இருக்கிறது சேவியர்

  2. தற்போதைய சூழலை இந்த கவிதை நன்றாக பிரதிபலிக்கிறது.
    வாழ்த்துக்கள்

  3. நன்றி ஞானியார். பொதுவாகவே அப்படி ஒரு முடிவை கொடுப்பேன். சில கவிதைகளில் நன்றாக அமையும்.🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s