நகரத்துப் பறவையும், கிராமத்துப் பறவையும்

bird.jpg

மூடியே வைக்கப்பட்டிருக்கும்
குடியிருப்புச் சன்னல்களை
சின்ன
அலகுகளால் கொத்துகின்றன குருவிகள்.

பின்னர் அவை
மொட்டை மாடி
டிஷ்களின் ஓரத்தில்
வந்தமர்கின்றன

வீட்டு பால்கனியில்
சரவணா ஸ்டோர்
கொடியில் காய்கின்றன பெர்முடாக்கள்.

பாரியின் முல்லைக்கொடிபற்றிய
பரிச்சயமில்லாத
நகரத்துப் பறவைகளுக்குத்
தெரிந்த கொடி
அரசியல் கொடியைத் தவிர்த்து
இது ஒன்று தான்.

மிச்சம் மீதி நேரங்களில்
மதில் சுவரோ
மின் கம்பியோ
பத்தடுக்குத் தூசி படர்ந்த
மூச்சு முட்டும் மரங்களோ
கிடைக்கின்றன இளைப்பாற.

கிராமத்திலிருந்து
நகரம் வரும் பறவைகள்
ஆவலுடன் கேட்கின்றன
ஏதேனும் பழ மரங்கள்
இங்கே உண்டா ?

வியப்பின் புருவம் உயர
நகரக் குருவிகள் கேட்கின்றன
பழங்கள் மரத்திலா காய்க்கின்றன ?
ரிலையன்ஸ் ப்ஃரெஷ்
வாசலில் இல்லையா ?

7 comments on “நகரத்துப் பறவையும், கிராமத்துப் பறவையும்

 1. கவிஞர் சேவியருக்கு ,

  எப்பொழுதோ படித்த சின்னக் கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது உங்களுடைய கடைசி பத்தி வரிகளை படித்த பொழுது .

  முதன் முறை
  வெளியே வந்த
  பரம்பரை
  கூண்டுக் கிளி
  அதிர்ந்து
  கேட்டது
  ” கிளிகள் பறக்கக் கூட செய்யுமா” என்று ?

  ” வியாபாரத்தில் பெரிய மீன் எப்பொழுதும் சின்ன மீனை விழுங்கி விடுகிறது ” என்ற ஆங்கில சொலவடைக்கு ஏற்ப ,ரிலையன்ஸ் ப்ஃரெஷ் ஆரம்பிக்கப்பட்டு மக்கள் அங்கு செல்ல ஆரம்பித்து விட்டதால் , மிகுந்த பாதிப்படைந்த சாலையோர சிறு காய்கறி வியாபாரிகள் , வட மாநிலங்களில் அந்தக் கடைகளில் புகுந்து கலவரங்களில் ஈடுபட்டனர் என்ற செய்தி படிக்க நேர்ந்தது . அந்த நிலை தமிழகத்தில் வராமல் இருக்க ஏதேனும் முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் சிறப்பானதாக இருக்கும் .

  மிகவும் இயல்பான வரிகளுக்கு ஒரு ஜே !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  அன்புடன்
  குகன்

  Like

 2. முன்னெச்சரிக்கை என்ற வார்த்தை தவறாக முன்னேச்சரிக்கை என்று முந்தைய பின்னூட்டத்தில் அனுப்பி விட்டேன் .
  தயவு செய்து திருத்தி வாசிக்கவும் .

  Like

 3. அன்பின் குகன். உங்கள் கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள். உண்மை ! சிறு சிறு கடை வைத்திருக்கும் உள்ளூர் வாசிகளை, இந்த வெளியூர் கடைகள் அனாதைகளாக்கி விட்டிருக்கிறது என்பது உண்மை.

  சக்கரவர்த்தி போரிட்டு நாடுகளைப் பிடித்தடக்குவது எப்போதும் நடந்து கொண்டே இருக்கிறது. ஏதேனும் ஒரு வடிவத்தில். கற்காலத்தில் மட்டுமல்ல, தற்காலத்திலும் வலியோன் மட்டுமே வெல்கிறான். எளியவன் தோற்கடிக்கப்படுகிறான்.

  Like

 4. நவீன யுகத்தின் விளையாட்டு

  //
  கிராமத்திலிருந்து
  நகரம் வரும் பறவைகள்
  ஆவலுடன் கேட்கின்றன
  ஏதேனும் பழ மரங்கள்
  இங்கே உண்டா ?

  வியப்பின் புருவம் உயர
  நகரக் குருவிகள் கேட்கின்றன
  பழங்கள் மரத்திலா காய்க்கின்றன ?
  ரிலையன்ஸ் ப்ஃரெஷ்
  வாசலில் இல்லையா ?
  //
  நவீன யுகத்தின் மக்கள் கிராமத்து உணவுக்கு மாறி வருகின்றனர்
  கேழ்வரகு கூழ் ….. கிராமத்தை நோக்கி மீண்டும் நாம் ………………………….

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s