கைபேசிக் கவிதைகள்


சீவி சிங்காரித்த
செல்ல மகளை
அழைத்துச் செல்லும் அழகுடன்
அலங்கார குட்டிப் பைக்குள்
கைபேசி அடக்கி
கடந்து செல்கின்றனர் இளம் பெண்கள்.

*

நெரிசல் பயணங்களில்
ஏதோ ஓர்
செல்பேசிச் சிணுங்குகையில்
அனிச்சைச் செயலாய்
கைபேசி தொடுகின்றன
எல்லா கைகளும்

*
இரயில் பயணத்தில்
குறுஞ்செய்தி அனுப்பியும், வாசித்தும்
தனியே சிரிக்கும் பெண்கள்
அவ்வப்போது
அசடு வழிகின்றனர்.
நிலமை உணர்ந்து

*

அழைப்புகளின்றி
அமைதியாய் கிடக்கும் கைபேசியை
வேலை செய்கிறதா
என சோதித்துப் பார்க்கின்றன
சந்தேக விரல்கள்.

*
அலுவலக கணினி திரைகள்
நாட்டியமாடுகின்றன
ஓரமாய்
அதிர்ந்து சிணுங்கும்
கைபேசியில் அழைப்பில்.

*
நள்ளிரவு தாண்டிய
ஜாமத்தின் சன்னல்களிலும்
ஏதோ ஒர்
விழித்திருக்கும் காதல் கைபேசி
கிணுகிணுத்து
சேதி சொல்கிறது.

*
ஆயுத பூஜை நாளில்
நெற்றியில் மஞ்சள் பொட்டு சூடும்
விலையுயர்ந்த கைபேசியில்
ஸ்கீரின் சேவராய்
பிரிட்னி ஸ்பியர்ஸ்

*
அலுவலகத்தை
வீட்டின் சமையலறை வரையும்
வீட்டை
அலுவலகத்தின் இருக்கை வரையும்
நீட்டிக்கிறது
கைபேசி.

பிடித்திருந்தால் கிளிக்கி வாக்களியுங்கள்…

128 comments on “கைபேசிக் கவிதைகள்

  1. //your looking nice and ur message is like you//

    வஞ்சப் புகழ்ச்சி அணியெல்லாம் ரொம்ப நல்லா படிச்சிருக்கீங்க போல, நீங்க தமிழ் டீச்சரா 😀

    Like

  2. ஆண்களை மறந்து விட்டீரே தோழரே.
    ஆனாலும் நன்றாக உள்ளது.//

    ஆண்களைப் பற்றி எழுதுவதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது 😉

    Like

  3. என்ன என்ன?
    கேட்டேன்
    யாரும் சொல்லவில்லை
    பின் நானும் ஓடினேன்
    என்னிடமும் ஒருவன்
    கேட்டான்
    பிறகு அவனும் என்னுடன்
    ஓடினான்
    பின்பு தான் தெரிந்தது
    காதலியின் கரம் பிடித்தவனை கால் கொண்டு எறிய
    காதலை எதிர்பொர் சிலர் காரணமின்றி ஓடுவோர் பலர்
    -ராஜன் . ஜி டி என் கலை

    Like

  4. Pécip Péci Naalaasu, Pésum Foonil Saachcillai, Saasup Pooddu Mudichaachu, Kaaddil Kaasum Mudinthaachu, Kaaddai Maatri Pooddaachu, Nééram Pookuthu Puriyavillai, Naalum Pookuthu Puriyavillai, Padippai Maddum Paarkkavillai, Vaalum Naalum Vannthaasu, Vliyum Avarkkup Putiyavillai, Paavam Ippoo Enseivaar, Ithuvari Peciya Kaacellaam, Ivatai IInravar Kaasanroo?, Valarnthum Ivarkku Valiputiyaa, Vaadum Nilathaan EEnthaanoo?, Paavam Ivarpool Irukkaathiir. “” IVAR POOL IRUKKAATHIIR “” ++K.SIVA++(Fr)

    Like

  5. ஆண்களை மறந்து விட்டீரே தோழரே.
    ஆனாலும் நன்றாக உள்ளது.

    Like

  6. Naanum En kaipesiyum inaindhu irupathai
    Prathibalikkum Kannaadi
    Umadhu Kavithai

    Vaazhga neer Valarga umadhu kavithai

    Like

  7. ஓடியது ஒரு கூட்டம்
    என்ன என்ன?
    கேட்டேன்
    யாரும் சொல்லவில்லை
    பின் நானும் ஓடினேன்
    என்னிடமும் ஒருவன்
    கேட்டான்
    பிறகு அவனும் என்னுடன்
    ஓடினான்
    பின்பு தான் தெரிந்தது
    காதலியின் கரம் பிடித்தவனை கால் கொண்டு எறிய
    காதலை எதிர்பொர் சிலர் காரணமின்றி ஓடுவோர் பலர்
    -ராஜன் . ஜி டி என் கலை கல்லூரி

    Like

  8. //நமது அந்தரங்கத்தை தொலைத்து விட்டு தொல்லையை நெஞ்சோடு கட்டிக்கொண்டு அலைகிறோம் என சொல்லுங்கள்..!!!
    அருமையான புரிதல்களோடு “கவனித்து” சொல்லாடப்பட்ட சொற்களுடன் .. இனிமையான நினைவுகளை தந்தது உமது கவிதை.
    தொடரட்டும் உனது கவி பாணி…!

    “அலுவலகத்தை
    வீட்டின் சமையலறை வரையும்
    வீட்டை
    அலுவலகத்தின் இருக்கை வரையும்
    நீட்டிக்கிறது
    கைபேசி.”
    //

    மிக்க நன்றி நண்பரே 🙂 தொடர்ந்து வருகை தாருங்கள்.

    Like

  9. “அலுவலகத்தை
    வீட்டின் சமையலறை வரையும்
    வீட்டை
    அலுவலகத்தின் இருக்கை வரையும்
    நீட்டிக்கிறது
    கைபேசி.”

    நமது அந்தரங்கத்தை தொலைத்து விட்டு தொல்லையை நெஞ்சோடு கட்டிக்கொண்டு அலைகிறோம் என சொல்லுங்கள்..!!!
    அருமையான புரிதல்களோடு “கவனித்து” சொல்லாடப்பட்ட சொற்களுடன் .. இனிமையான நினைவுகளை தந்தது உமது கவிதை.
    தொடரட்டும் உனது கவி பாணி…!

    Like

  10. உன்னுடம்
    பேசும்போதெல்லாம்
    பார்க்கவேண்டும் என்று
    தவறாமல் தோன்றும்.
    ஆனால்
    பார்க்கும் போதெல்லாம்
    பேசத் தோன்றுவதில்லை.

    Like

  11. இரயில் பயணத்தில்
    குறுஞ்செய்தி அனுப்பியும், வாசித்தும்
    தனியே சிரிக்கும் பெண்கள்
    அவ்வப்போது
    அசடு வழிகின்றனர்.
    நிலமை உணர்ந்து

    Like

  12. இரயில் பயணத்தில்
    குறுஞ்செய்தி அனுப்பியும், வாசித்தும்
    தனியே சிரிக்கும் பெண்கள்
    அவ்வப்போது
    அசடு வழிகின்றனர்.
    நிலமை உணர்ந்து

    The Real Feel…

    //

    நன்றி நண்பரே 🙂

    Like

  13. இரயில் பயணத்தில்
    குறுஞ்செய்தி அனுப்பியும், வாசித்தும்
    தனியே சிரிக்கும் பெண்கள்
    அவ்வப்போது
    அசடு வழிகின்றனர்.
    நிலமை உணர்ந்து

    The Real Feel…

    Like

  14. //தொடரட்டும் உங்கள்
    கவிதை படைப்புகள்!!
    ””””””””””””””””””””””””’
    //

    நன்றி ரமேஷ் :0

    Like

  15. அலுவலக கணினி திரைகள்
    நாட்டியமாடுகின்றன
    ஓரமாய்
    அதிர்ந்து சிணுங்கும்
    கைபேசியில் அழைப்பில்.

    தொடரட்டும் உங்கள்
    கவிதை படைப்புகள்!!
    ””””””””””””””””””””””””’
    ””””””””””””””””””””””””’

    இவன்

    nrramesh … ***

    Like

  16. சுருக்கமான..
    பளிச் கவிதைகள்..நண்பரே..
    வாழ்த்துக்கள்..

    கடைசிக் கவிதை..
    முத்தாய்ப்பு..!

    யதார்த்த நிஜம்..
    நன்றி..

    Like

  17. //நெரிசல் பயணங்களில் செல்பேசிச் சிணுங்குகையில்
    கைபேசி தொடுகின்றன எல்லா கைகளும்..”
    யாமும் பெற்றேன் இந்த அனுபவத்தை!
    குட்டி குட்டியாய் அழகான கவிதைகள்!…. வாழ்த்துகள்!!!//

    நன்றி ஷாமா 🙂

    Like

  18. “நெரிசல் பயணங்களில் செல்பேசிச் சிணுங்குகையில்
    கைபேசி தொடுகின்றன எல்லா கைகளும்..”
    யாமும் பெற்றேன் இந்த அனுபவத்தை!
    குட்டி குட்டியாய் அழகான கவிதைகள்!…. வாழ்த்துகள்!!!

    Like

  19. KOOVIL VAASALIL PECI, ARAIKUL IRUNTHU ARAIKUL, SAMAIYAL KADIL POORUKALAI THEEDA, AMMAA AVALAIK KEDKA, THOODARUM MOONRU THOOLAIPEECI. ” THOODARUM ” -K.SIVA-(FR°

    Like

  20. நண்பர் அவர்களுக்கு ஒரு சிறந்த முயற்சி .சிந்திக்கும் வரிகள் .தமிழில் கவிதை வரிகளை அமைக்க நினைத்து ,சில ஆங்கில வார்த்தைகள் தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் இங்கு தலைகாட்டினாலும் ,இதுபோன்ற கவிதைகளில் கலப்பு இல்லாமல் இருந்தால் .இன்னும் சுவை சேர்த்து இருக்கும்! அனைவருக்கும் உங்களின் படைப்பு .,வாழ்த்துக்கள் நண்பரே

    Like

  21. நள்ளிரவு தாண்டிய
    ஜாமத்தின் சன்னல்களிலும்
    ஏதோ ஒர்
    விழித்திருக்கும் காதல் கைபேசி
    கிணுகிணுத்து
    சேதி சொல்கிறது.
    super! nan kandathundu en hostalil

    Like

  22. //அழைப்புகளின்றி
    அமைதியாய் கிடக்கும் கைபேசியை
    வேலை செய்கிறதா
    என சோதித்துப் பார்க்கின்றன
    சந்தேக விரல்கள்.
    //
    ந‌ல்லாருக்கு!

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.