யுத்தக் களத்தில்
முத்தக் குளத்தில்
கவசம் கழற்றிக் குதிப்போமா ?
பித்தக் கடலில்
மொத்த உடலில்
அச்சம் அவிழ்த்துக் குளிப்போமா ?
இப்படித் தானே செப்படிக் காதல்
பொற்படி தேடி ஓடிவரும்,
எப்படியேனும் ஒப்படை என்று
கைப்பிடிக்குள்ளே ஊறிவரும்.
0
காதல் என்னும் அற்புதம் கொண்டு
பாற்கடல் ஒன்றைக் கடைவோமா ?
காதல் கொண்டு காதல் கடைந்து
அமிர்தம் கையில் அடைவோமா
0
வள்ளுவர் கோட்டச் சக்கரம் பின்னே
சாய்ந்து கிடப்பது காதலா
அலையின் முன்னால் படகின் பின்னால்
சில்மிஷம் செய்தல் காதலா
பூக்கள் இல்லாப் பூங்காப் புதரில்
வெட்கம் பூப்பது காதலா
யாரும் இல்லாத் தனிமைச் சந்தில்
அவசர முத்தம் காதலா
காதல் என்பது தாய்மை போல
விலகிய பின்னும் நினைவிருக்கும்
காதல் என்பது செடியைப் போல
பூக்கா விடினும் வேர் வளரும்
0
மோகம் வந்து விரலில் தங்கி
தேகம் வழிதல் காதலா
நரம்புகள் வழியே நதியாய் பாயும்
சிற்றின்பம் தான் காதலா
எங்கும் பொங்கி அங்கம் தங்கி
நுரையாய்க் கரைதல் காதலா
தொடுதல் படுதல் படர்தல் விடுதல்
இதுதான் மொத்தக் காதலா ?
காதல் என்பது வாய்மை போல
சொல்லும் போதே உயிர்மலரும்,
காதல் என்பது காற்றைப் போல
தானாய் உயிரில் தினமுலவும்.
சேவியர்,
காதல் கவிதை அருமை. இது காதல் !!!
//காதல் என்பது தாய்மை போல
விலகிய பின்னும் நினைவிருக்கும்
காதல் என்பது செடியைப் போல
பூக்கா விடினும் வேர் வளரும்//
ஆழ்ந்த சிந்தனையில் தான் இது போன்று நறுக்கென்று வரிகள் வரும். வாழ்த்துக்கள் !
LikeLike
அழகான காதல்…
LikeLike
//ஆழ்ந்த சிந்தனையில் தான் இது போன்று நறுக்கென்று வரிகள் வரும். வாழ்த்துக்கள் !//
மனமார்ந்த நன்றிகள் சதங்கா.
LikeLike
//அழகான காதல்…
//
நன்றி அனி.
LikeLike
சூப்பர் ஹிட் பாடலாகி விடும் அபாயம் இருக்கிறது சேவியர் சார்
LikeLike
அபயமே கிடைக்காத பாடலுக்கு – ஏது
அபாயம் 🙂
வருகைக்கு நன்றி செல்வேந்திரன்.
LikeLike
sada sadavena santham
thoduppathilum neengal
vallavara?
LikeLike
oh!…sweet…
LikeLike
//sada sadavena santham
thoduppathilum neengal
vallavara?//
ஏதோ தோணறதை எழுதுவேன் 🙂
LikeLike
//oh!…sweet…//
மிக்க நன்றி 🙂
LikeLike