மந்திரவாதியின் குட்டிச் சாத்தான்.
தொப்பிக்குள்
மானைப் போட்டு
மீன் எடுக்கிறான்
மீனைப் போட்டு
புறா பிடிக்கிறான்.
நீயோ
ஒரே ஒரு
புன்னகையைப் போட்டு
எதையும் எடுக்கலாம்
என்னிடமிருந்து
காதலித்தால்
கனவுகள் எல்லாம் நிறைவேறும்
என்கிறார்கள்
உன்னைக் காதலிக்கும்
கனவு மட்டுமே
எனக்கு !
பார்வைகள் பரவசமாய்
முத்தமிட
விரல்கள் வெட்கத்தில்
விசாரிக்க,
கனவுகள் இதழ்களில்
கூடாரமடித்துக் குடியிருக்க,
நீ
நாணத்தில் நடுங்கியே நடக்கிறாய்
பத்தடி தூர இறுக்கத்தின் இடைவெளிகளில்
முடிவிலியின் முடிவில் நின்று
துவக்கத்தின்
துவக்கம் தேடி
பயத்துடம் அலையும்
பட்டாம்பூச்சி போன்றது
என் காதல்
காதல்
பசுத்தோல் போர்த்திய
புலி.
என்கின்றன
புலித்தோல் போர்த்திய பசுக்கள்.
அதிகாலைக் கதிரவனும்,
கை நீட்டும் கடலலையும்,
மனம் நனைக்கும் மழைச்சாரலும்,
இருள் கவிதை வான் வெளியும்
எதையும் விட
அழகானவள் நீயென்று
தோன்றிய தருணத்தில்
நான்
உன்னைக் காதலிக்கத் துவங்கியிருக்கலாம்.
பிரசுரத்துக்கு அனுப்பாத
முத்தம் ஒன்று
என்னிடம் காத்திருக்கிறது.
உன்
இதழ்களில் பிரசுரிக்கும் ஆசையுடன்.
காதலிப்பது
குற்றம் என்கிறாய்.
சட்டம் தெரியாதா உனக்கு
குற்றம் செய்யத்
தூண்டுவதும் குற்றமடி !
ஒரு
பூவோடு வந்து
பூ பிடித்திருக்கிறதா
கேட்டாய்.
ஆம் என்றேன்.
பூ தானே
பூவைப் பிடித்திருக்கிறது.
நாம் இருவரும்
எதைப்பற்றித் தான் பேசவில்லை
மனதுக்குள்
பற்றிக் கொண்டிருந்த
காதலைத் தவிர..
athanai kavithaigalum arumai…Kathalike urithaana kurumbu koppalikirathu…
LikeLike
நன்றி ஆனந்த் 🙂
LikeLike
ரோம்ப ஃபீல் பண்ணிருக்கீங்க போல!!!
நானும் கொஞ்சம் ஃபீல் பண்ணிட்டு வந்து அடுத்த பதிவு எழுதுறேன்.
LikeLike
//காதலிப்பது
குற்றம் என்கிறாய்.
சட்டம் தெரியாதா உனக்கு
குற்றம் செய்யத்
தூண்டுவதும் குற்றமடி !//
முடியல சார். லைட்டா ஹாட் அட்டேக் வருது…. எப்படி இப்படியெல்லாம்… அதுவா வருதா????
LikeLike
//நானும் கொஞ்சம் ஃபீல் பண்ணிட்டு வந்து அடுத்த பதிவு எழுதுறேன்//
ஃபீல் பண்ணுவியோ.. பீலா பண்ணுவியோ .. அடிக்கடி வா… ! 🙂
LikeLike
//முடியல சார். லைட்டா ஹாட் அட்டேக் வருது….//
உன் வயசுக்கு எல்லாம் வரும் தம்பி…. கவனம் !
// எப்படி இப்படியெல்லாம்… அதுவா வருதா????//
அதெல்லாம் டாக்டரைத் தான் கேட்கணும் 🙂
LikeLike
அழகான கவிதைக்கு
ஆனவம் இருக்கும்
புரியாத கவிதைக்கும்
புத்தி இருக்கும்
உன் வார்த்தைகளுக்குள்ளே
ஒரு வட்ட நிலா
சுற்றி வருகிறதே!
அந்த ஆனவத்திற்கா
இந்த கவிதைகள் புரியும்!
பிஸ்ஸா கார்னருக்கு
ரோடு தெரியும்
வீடு தெரியுமா?
இனியாவது!
நல்ல கவிதைக்கு
நக பாலீஷும்
நரி பார்வையும் வேண்டாம்.
–
செந்தில்குமாரன் BE
சிங்கப்பூர் எழுத்தாளர்
சிராங்கூன் ரோடு.
LikeLike
///காட்டுமன்னார்கோயில் செந்தில்குமரன்///
ஏன் இந்த கொலை வெறி. ஏதோ தெரியாம எழுதிட்டாரு. மன்னிச்சு விட்ருங்க, பாவம் நல்ல மனுஷன்.
///
பிஸ்ஸா கார்னருக்கு
ரோடு தெரியும்
வீடு தெரியுமா?
///
இருந்தாலும் இந்த எடம் நல்லாருக்கு…
LikeLike
வருகைக்கு நன்றி நண்பரே.
//அழகான கவிதைக்கு
ஆனவம் இருக்கும்//
ஆனவம் ? ஆணவம் ?
LikeLike
//ஏன் இந்த கொலை வெறி. ஏதோ தெரியாம எழுதிட்டாரு. மன்னிச்சு விட்ருங்க, பாவம் நல்ல மனுஷன்.//
சிங்கப்பூர் எழுத்தாளரை சீவி வுடறீங்களா ? 🙂
LikeLike
Yappadi sir youngala mattum ippadiyallam mudiyathu konnutinga ponga
LikeLike
//Yappadi sir youngala mattum ippadiyallam mudiyathu konnutinga ponga
//
நன்றி மணி 🙂
LikeLike
Great arctile, thank you again for writing.
LikeLike