கவிதை : கண்டும் காணாமலும்…

 

பிரியமே,

நீ யாரோ
எவரோ நானறியேன்.

ஒரு வசந்தகால வளைவில்
சரேலென
என்
விழிச்சக்கரங்களைத் திருப்புகையில்
உன்னைச் சந்தித்தேன்.

பின்
திருப்பப்பட முடியா நிலையில்
சுருண்டுகிடக்கின்றன
என் நினைவுகள்.

பின்பொரு நாள்
ஓர்
குளிர்காலக் கூரையருகில்
கசிந்த மெல்லிசையிலும்,

மாலை நேர
மழைத்துளி ஒன்றின்
உணர்வுப் பாய்ச்சலிலும்,

கடத்தி வரப்பட்ட
காட்டாறு போல
புரண்டு படுத்தன
உன் நினைவுகள்

காலங்கள் தரும்
உன்னதமானவற்றில்
உன்னைக் கண்டேன்,

நீ
ஒரு முறை கூட
என்னைக் காணவில்லையே
எனும் உண்மையை மட்டும்
இலையுதிர் காலத்துக்காய்
ஒத்தி வைத்திருக்கிறேன்

 

10 comments on “கவிதை : கண்டும் காணாமலும்…

  1. //லாங் லீவ் அடிச்சிட்டு திரும்பி வந்தாலும் அண்ணன் ஃபார்ம்ல தான் இருக்காருப்பா!!!
    //

    லாங் லீவே ஃபார்ம் ஆகறதுக்கு தானே
    😉

    Like

  2. //கவித, கவித….

    இந்த மனுஷன் அழ வைக்காம போவமாட்டாரு போல இருக்கே
    //

    என்ன ஆச்சு ? உங்க வாழ்க்கைல நடந்த ஏதோ ஒரு சமாச்சாரத்தை சரியா சொல்லிட்டேனோ ??

    Like

  3. லாங் லீவ் அடிச்சிட்டு திரும்பி வந்தாலும் அண்ணன் ஃபார்ம்ல தான் இருக்காருப்பா!!!

    (அண்ணா, ரெண்டு பின்னூட்டத்தையும் ஒன்னா போட்ருங்கண்ணா)

    Like

  4. //நீ
    ஒரு முறை கூட
    என்னைக் காணவில்லையே
    எனும் உண்மையை மட்டும்
    இலையுதிர் காலத்துக்காய்
    ஒத்தி வைத்திருக்கிறேன்//

    அட இது புதுசு…நல்லாருக்கு!
    அன்புடன் அருணா

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.