கவிதை : ம.பி

மரணம் என்ன
அழுத்தமாய் வரைந்த
ஓர்
கருப்புக் கோடா ?

ஆரம்பத்துக்குள் இழுக்கும்
கண்ணாடிக்
கதவா ?

ஆழ்நிலை உறக்கத்தின்
பேழையா ?

மத நாடகங்களின்
ஒப்பனை கலைந்த
ஒப்பந்த மேடையா ?

அதற்குப் பின் கேட்கும்
ஒப்பாரிக்குப் பொருள்
என்ன ?

ஆண்டவனை
ஒத்துக் கொள்ளாததற்காகவா ?
இல்லை
ஒத்துக் கொண்டதற்காகவா ?

அங்கே நடக்கும்
அறுவை சிகிச்சை
அறிவியலின் மீதா ?
இல்லை ஆன்மீகத்தின் மீதா ?

அது
விழித்துக் கொண்டதாய்க்
கனவு கண்டு,
கனவு காண்பதாய்
விழித்துக் கிடக்கும்
மயக்க நிலையின் இயக்கமா ?

சொல்லத் தவறும்
விடைகளுக்காக,
யாரும்
கேட்கத் தவறாத கேள்விகள்.

தரித்துக் கொள்ள
ஆசை தான் உண்மையின் ஆடையை.
ஆனாலும்
மரித்துப் போக சம்மதமில்லை
ஆண்டவன் அழைக்கும் வரை.

Advertisements

4 comments on “கவிதை : ம.பி

 1. கவிஞர் சேவியருக்கு ,

  “ஒரு தூக்குக் கைதியின் கடைசி இரவு ” என்று தான் எழுதிய கவிதையில் கவிப்பேரரசு வைரமுத்து,
  “மரணம்
  இது
  ஊற்றப்படாமல்
  வாழ்வின் கோப்பை
  நிறைவதேது ?”

  என்று எழுதி இருப்பார் .

  அந்த மரணத்தை அங்குலம் அங்குலமாக அலசல் செய்யும் விதம் நன்று .

  “மத நாடகங்களின்
  ஒப்பனை கலைந்த
  ஒப்பந்த மேடையா ? ”

  மயக்க நிலையின் இயக்கமா ?

  “நச்” வரிகள் !!!!!!!!!!!!

  அன்புடன்
  குகன்

  Like

 2. மிக்க நன்றி குகன். 🙂 எப்படித் தான் இப்படி நிறைய கவிதைகள் ஞாபகம் வெச்சிருக்கீங்களோ !!!!!

  Like

 3. அந்த ரகசியத்த எப்படி என் கையால எழுதுவேன் ????
  அடுத்த முறை சந்திக்கையில் என் வாயால சொல்றேன் 🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s