கவிதை : முதல் பார்வையில் காதல் வருமா ?

 

ஒரு தடவை பார்த்ததும்
காதல் வருமா ?
கேட்கிறாய் மெல்ல என் காதைக் கடித்து.

இல்லையே.
காதலிக்கத் துவங்கும் முன்
உன்னை
இரண்டுதடவை பார்த்திருக்கிறேனே.

அப்பாக்கு காதல் பிடிக்காதாம் !
சோகத்துடன் சொல்கிறாய்.

இந்த வயதுக்கு மேல
அப்பாக்கு எதுக்கு காதல் ?
இயல்பாய் தான் சொன்னேன்.
விழுந்து விழுந்து சிரிக்கிறாய்.

நல்லவேளை
அப்பாவுக்கு காதல் பிடிக்கவில்லை.

இதுக்கு முன்னால
யாரையாவது காதலிச்சிருக்கியாடா ?
நெஞ்சில்
கோடு கிழித்துக் கேட்கிறாய்.

உன் தோழியர் யாரும்
அந்த பட்டியலில் இல்லாததால்
பதட்டமில்லாமல் பதில் சொல்கிறேன்.
இல்லை…என்று.

வீட்ல நம்ம காதலை
ஒத்துக்கலேன்னா என்ன பண்றது ?
கலவரக் குரலில் கேட்கிறாய்.

அந்த
நம்பிக்கைல தானே காதலிக்கிறேன்.
மனசுக்குள்
ஒலிக்கும் குரலை அடக்கி,
‘நல்லதே நடக்கும் ‘  என்கிறேன்.

 

22 comments on “கவிதை : முதல் பார்வையில் காதல் வருமா ?

 1. ரசிகர்கள்: சேவியர் சார், நீங்க நல்லவரா கெட்டவரா?
  சேவியர் : தெரியலியேப்பா !

 2. அதான் சொல்லிட்டாருல்ல வரும்னு….

  அப்புறம் என்ன பொய்யழகு, புண்ணாக்கு அழகு?

  கவித சொன்னா அனுபவிக்கனும். ஆய்ராயக்கூடாது…. புரிஞ்சுதா…

  சேவியரண்ணன் சொன்னா சரியாத்தான் இருக்கும்….

 3. //உன் தோழியர் யாரும்
  அந்த பட்டியலில் இல்லாததால்
  பதட்டமில்லாமல் பதில் சொல்கிறேன்.
  இல்லை…என்று.//

  கொஞ்சம் கூடவா நாக்கு கூசல… அவ்வ்வ்வ்வ்வ்வ்……

 4. விக்கி,

  நீ படத்த மட்டும் பார்த்து பின்னூட்டம் போடுவோர் சங்கத்து ஆளுன்னு தெரியாம போச்சே!!!

 5. அந்த
  நம்பிக்கைல தானே காதலிக்கிறேன்.
  மனசுக்குள்
  இந்த ஜம்பமெல்லாம் இனி சாயாது. கோர்ட்டு வாசலில் நாலு வருஷம் நிக்க வச்சுருவாங்க!
  ஜாக்கிரதை!
  கமலா

 6. //அந்த
  நம்பிக்கைல தானே காதலிக்கிறேன்.
  மனசுக்குள்
  ஒலிக்கும் குரலை அடக்கி,
  ‘நல்லதே நடக்கும் ‘ என்கிறேன்//

  யோவ் கோபாலு நான் இந்த வரிய மீன் பன்னுனேன்யா…

 7. ஏம்பா.. உனக்கே இந்த கவிதை எல்லாம் ஓவர் அஹ தெரியல..
  ஐயோ……முடியலடா..சாமி..

 8. செவியர்..இதே..நகைச்சுவையுடன்..காதலி..கிடைக்க…கடவது…

 9. ///
  செவியர்..இதே..நகைச்சுவையுடன்..காதலி..கிடைக்க…கடவது…
  ///

  நீங்க அவர சபிக்கிறீங்களா, வாழ்த்துறீங்களா?

  பு.த.செ.வி. (புரியல, தயவு செய்து விளக்கவும்)

 10. //இது காம காதல்
  கசமுசா காதல்//

  இது பதிலா, விமர்சனமா, கருத்தா, கவிதையா என்பது விளங்கும் வரை நான் மூச்சு விடப் போவதில்லை😀

 11. ////உன் தோழியர் யாரும்
  அந்த பட்டியலில் இல்லாததால்
  பதட்டமில்லாமல் பதில் சொல்கிறேன்.
  இல்லை…என்று.//

  கொஞ்சம் கூடவா நாக்கு கூசல… அவ்வ்வ்வ்வ்வ்வ்……

  —-

  ”இதுக்கு முன்னால
  யாரையாவது காதலிச்சிருக்கியாடா ” – ன்னு தானே கேக்கறாங்க.. இப்போ காதலிக்கிறியா கேக்கலையே…

  இதுல நாக்கு ஏன் கூசுது ?? மாங்கா சாப்பிட்டீங்களோ ???

 12. ////அந்த
  நம்பிக்கைல தானே காதலிக்கிறேன்.
  மனசுக்குள்
  ஒலிக்கும் குரலை அடக்கி,
  ‘நல்லதே நடக்கும் ‘ என்கிறேன்//

  யோவ் கோபாலு நான் இந்த வரிய மீன் பன்னுனேன்யா…
  //

  கொஞ்சம் ஜாலியா எடுத்துக்கோங்க அண்ணாத்தே🙂

  ஹி…ஹி…

 13. //ஏம்பா.. உனக்கே இந்த கவிதை எல்லாம் ஓவர் அஹ தெரியல..
  ஐயோ……முடியலடா..சாமி..//

  முடிஞ்சிடுச்சு😦

 14. //செவியர்..இதே..நகைச்சுவையுடன்..காதலி..கிடைக்க…கடவது…//

  அப்பாடா… நீங்களாவது கவிதையை சரியா புரிஞ்சுகிட்டீங்களே🙂

 15. //கோர்ட்டு வாசலில் நாலு வருஷம் நிக்க வச்சுருவாங்க!
  //

  வாசல்லயே 4 வருஷம்னா கொஞ்சம் அதிகம் தான்🙂

 16. intha kathal enakku theriyathu ana en akka pappa mel uyir avlukkukkum enakkum ulla kalathali oru kavithaiyil slungal pls.

 17. காதல் பத்தி கவிதைகள் அழுதுகொண்டு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s