கவிதை : முடிவின் துவக்கம்

இனிய காதலனே,
ஒரே ஒரு முறை பேசவேண்டும்
எனக்கு.

உனக்கும் எனக்கும்
மாங்கல்ய முடிச்சு
விழுவதற்கு முன்பே
நம் மனசுகள் இரண்டும் முடிச்சிட்டு விட்டன.

காதலிக்கும் போதெல்லாம்
எதுவுமில்லாமலேயே
வாய்வலிக்க மணிக்கணக்காய்
மணக்க மணக்கப் பேசுவாய்.
இப்போது ஏராளம் இருந்தும் ஊமையாகிறாய்.

மண்டபத்தின் எல்லா மூலையிலும்
வாழ்த்துக்கள் விழ கட்டப்பட்டவற்றை
வெறும்
வெள்ளைக் காகிதங்களின்
வலது மூலையில் கையொப்பமிட்டுக்
கலைத்துவிடப்பார்க்கிறாய்.

அடையாளங்கள் தான்
வாழ்க்கை என்கிறாயா ?

சந்தேகங்களின் முனை கொண்டு
என்னை
நீ கிழித்த போதெல்லாம்
நம் காதலில் மாமிச வாசனை அடித்தது,

என் நம்பிக்கைகளின் நகங்கள்
அழுகிவிழுந்தன.
ஏன்
எனக்கு நீ எழுதிய கவிதைகள் கூட
கவிழ்ந்தழுதன.

அலங்காரங்கள் தான்
அவசியங்கள் என்கிறாயா ?

சின்னச் சின்ன தவறுகளுக்கெல்லாம்
சிலுவையில் என்னை அறைந்தாய்.

உலகுக்கும் எனக்கும்
ஒற்றைமதில் கொண்டு
இரட்டை கிரகம் படைத்தாய்.

ஆனாலும் என்னிடமிருப்பவை எல்லாம்
நீ கொடுத்த பூக்கள் மட்டும் தான்.,
முட்களின் முனைஒடித்து
புதைத்து விடுவதே என் வழக்கம்.

இன்னொருமுறை
காதலிக்கவேண்டும் போலிருக்கிறது
உன்னை.

முதல் முதலில்
என் விரல் தீண்டிய
உன்
காதலின் முதல் அத்யாயத்தை
மீண்டும் மீண்டும்
முதலிலிருந்தே படிக்க வேண்டும் போலிருக்கிறது.

நீதி மன்றத்தில் உனக்கும் எனக்கும்
உறவு தொலைத்து உத்தரவிடலாம்.
அதற்கு முன்
ஒரே ஒரு முறை
உன்னிடம் பேசவேண்டும் போலிருக்கிறது.

முதன் முதலில்
என்னை நீ முத்தமிட்ட,
நம் சுவாசம்
உப்புச்சுவையோடு உலாவிக்கொண்டிருக்கும்
அந்த நீளக்கடலின் ஈரக் கரையோரம்
உன் குற்றப்பத்திரிகைகளோடு வா.

நம்
பழைய காதலை புதுப்பிக்க முடிந்தால்
என் கரம் கோர்த்துக் கொள்.,
இல்லையேல்
என்னை கையொப்பமிடச் சொல்.

12 comments on “கவிதை : முடிவின் துவக்கம்

  1. //ஆனாலும் என்னிடமிருப்பவை எல்லாம்
    நீ கொடுத்த பூக்கள் மட்டும் தான்.,
    முட்களின் முனைஒடித்து
    புதைத்து விடுவதே என் வழக்கம்//

    ம்ம் இப்படி இருந்துட்டா எல்லாமே நல்லாத்தான் இருக்கும்.. ஆனா அது (எனக்கு) சாத்தியமில்லையே ம்ம்

    //சந்தேகங்களின் முனை கொண்டு
    என்னை
    நீ கிழித்த போதெல்லாம்
    நம் காதலில் மாமிச வாசனை அடித்தது,//

    வித்தியாசமா இருக்கு கற்பனை. இந்த வரிகளை இரசித்தேன் ஆனால் அதன் உள்ளர்த்தம் யோசிக்கவச்சது.. சந்தேகமுங்கிறது ரொம்ப கூர்மையானதுதான் இல்ல? அதுபோலத்தானே கோவமும்.. அந்த சமயங்களில் வந்து விழும் வார்த்தைகள் சர்ர்ர்க்னு நெஞ்சில தச்சிடும்.. அப்பப்பா தாங்க முடியாத வலியா இருக்கும்… வார்த்தைகள் எவ்வளவு கூர்மையானவை… அது கேட்பவரின் மென்மனதைப் பொறுத்து தான் இருக்கு இல்ல..

    //என் நம்பிக்கைகளின் நகங்கள்
    அழுகிவிழுந்தன.//

    நல்லதொரு கவித்துவமான வரி. புதுசா இருக்கு.. நல்லா இருக்கு.. அர்த்தம் அழகா புரியுது.. இதுக்கும் மேலே ஏதோ சொல்லணும்னு தோணுது.. ஆனா மனசுல இருக்கு வார்த்தையில வரலை..

    அன்புடன்
    கீதா

  2. அன்பின் கீதா, விரிவான விமர்சனம் ஒன்றைத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள். உங்கள் பாராட்டுகளுக்கும், கருத்துகளுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றிகள்.😀

  3. nambikkai nagangal alukivittaalum iruthiyil nambikkayodu mudithirukkirirkal.

    anbudan rathi…

  4. நல்ல ஆழமான கவிதை (அதனால படகிலிருந்து தான் படித்தீர்களா என்று கேட்டுவிடாதீர்கள்)
    எனக்கு யாரிடமும் கோபம் வந்தது கிடையாது. அப்படியே தப்பித்தவறி வந்தாலும் அதை சீக்கிரம் மறந்துவிடுவேன் (நல்ல மனசெல்லாம் கிடையாது, அப்படி ஒரு வீக்கான நியாபகசக்தி)
    ஆனால் சமீபத்தில் என்னுடைய தோழி என்னை சிறிது காயப்படுத்தி நட்பையும் முறித்துகொண்டாள். இது நடந்து ஒரு வருடத்திற்க்கு மேல் ஆகியும் என்னால் மறக்கவும் முடியவில்லை, அந்த சோகத்திலிருந்து மீளவும் முடியவில்லை. இந்த கவிதை படிக்கும்போது எனக்கு அவள் நியாபகம் தான் வந்தது.
    (சில நேரம் வலி எப்படியிருக்கும் என்பதை உணர்த்த தான் கடவுள் இப்படி ஒரு தோழியை கொடுத்தாரோ என்றிருக்கும்)

  5. அன்பின் குந்தவை, உங்களுக்கு வலிகளையும் நகைச்சுவை கலந்து சொல்லும் திறமை இருக்கிறது ! கருத்துக்களுக்கு நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s