விரியுங்கள்.
புன்னகை புரியுங்கள்.
புன்னகை,
மொழிகளால்
நொறுக்கப்படாத
பொது மொழி.
வார்த்தைகளால்
இறுக்கப்படாத
வாய் மொழி.
உள்ளத்தின் விதைகள்
உதட்டில் விரிக்கும்
உன்னத மலர் தான்
புன்னகை.
மகிழ்வின் வாடைக் காற்று
தொட்டு
மொட்டுப் பூட்டை
உடைத்து,
பட்டென்று வரும்
பரவசப் பூ தான் புன்னகை.
ஒரு வார்த்தையில்
சொல்லும்
நட்பின் வரலாறு தானே
புன்னகை.
விலங்கிலிருந்து மனிதன்
விலகியே இருப்பது
புன்னகையின்
புண்ணியத்தினால் தானே.
உதடுகளை விரியுங்கள்
புன்னகை புரியுங்கள்
சிரிப்புக்கு அது தான்
தாய் வீடு.
மகிழ்ச்சிக்கு அது தான்
மறு வீடு.
உள்ளக் கவலைகளை
ஏன்
அறுத்தெறிய வேண்டும்,
ஒற்றைப் புன்னகை
அதைத்
துடைத்தெறியும் போது.
புன்னகை இல்லாத
சாலைகளில் நடப்பது
நரகத்தின் வாசலில்
தீக்குளிப்பது போன்றதே.
இரு கை இல்லாதவர்
ஊனமானவரல்ல
புன்ன’கை’ இல்லாதவரே
உள்ளுக்குள் ஊனமானவர்.
புன்னகை,
ஒரு வரிக் கவிதையாய்
உருவாகட்டும்,
புரட்டிப் படிக்கும்
புத்தகமாகவேண்டாம்.
புன்னகை,
ஒரு முகத்தோடு
உலா வரட்டும்,
இராவணத் தலைகளை
உள்ளே
இரகசியமாய் வைக்க வேண்டாம்.
புன்னகைக்க
மறந்தோர்க்கு
ஓர் வேண்டுகோள்.
ஆனா, ஆவன்னா
சொல்லிக் கொடுக்கும் சாக்கில்
மெல்லமாய்
கற்றுக் கொள்ளுங்கள்
ஓர்
மழலையிடம், புன்னகையை.
புன்னகையுடன்..வாழ்த்துக்கள்..சேவியர்
LikeLike
மிக்க நன்றி உமா 🙂
LikeLike
கவிஞர் சேவியருக்கு ,
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தான் எழுதிய ” பெய்யென பெய்யும் மழை ” நூலில் சிரிப்பின் சிறப்பையும் , மேன்மையையும் கூறி இருப்பார் .
அதிலிருந்து சில வரிகள் .
” சிரி
நீ ஒவ்வொரு முறை
சிரிக்கும் போதும்
இருதயம்
ஒட்டடை அடிக்கப்படுகிறது”
”
சிரிக்காத மனிதர்களும்
உண்டா ? இல்லையா?
சொல்லுங்கள்
அவர்கள் பிறப்பதற்கு
விந்து
விழ வேண்டிய இடத்தில்
கண்ணீர்
விழுந்து விட்டதா
எனக் கவலையுருவேன்”
என்று குறிப்பிட்டு இருப்பார்.
சிரிக்காதவர்களை சாடுவதோடு அவர் நிறுத்தி இருப்பார் .
அவர்கள் சிரிப்பை யாரிடம் கற்று உணர வேண்டும் என்பதை நீங்கள் குறிப்பிட்டு விட்டீர்கள் இவ்வாறு :
ஆனா, ஆவன்னா
சொல்லிக் கொடுக்கும் சாக்கில்
மெல்லமாய்
கற்றுக் கொள்ளுங்கள்
ஓர்
மழலையிடம், புன்னகையை.
வாழ்த்துக்கள் சேவியர் !!!!!!!!!!!!!!!!!
அன்புடன்
குகன்
LikeLike
வாங்க குகன். உற்சாகமாக இருக்கிறது உங்கள் வருகை வழக்கம் போலவே. வைரமுத்துவின் எல்லா கவிதைகளையும் ரசித்திருக்கிறேன், இந்தக் கவிதை உட்பட.
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி குகன்.
LikeLike
//
ஆனா, ஆவன்னா
சொல்லிக் கொடுக்கும் சாக்கில்
மெல்லமாய்
கற்றுக் கொள்ளுங்கள்
ஓர்
மழலையிடம், புன்னகையை.
//
சரியான வார்த்தைகள். மழலையிடம் மட்டுமே கான முடியம் உண்மையான புன்னகையை.இப்பொழுதெல்லாம் சிறுவர்கள் கூட புன்னகைக்க மறந்து விட்டனர் எந்நேரமும் படிக்க வேண்டி இருப்பதால் 🙂
LikeLike
நன்றி முகுந்தன் 🙂 உண்மை, சிறுவர்கள் பெரியவர்களாகி விட்டனர் 🙂
LikeLike
புன்னகை ஓர்
பூ விதை
புன்னகை ஓர்
தேன் கவிதை
LikeLike
/புன்னகை ஓர்
பூ விதை
புன்னகை ஓர்
தேன் கவிதை//
நன்றி சிவகுமார்.
LikeLike
அருமை
LikeLike
இன்றுதான் உங்கள் கவிதை புன்னகையில் மகிழ்ந்தேன் அருமையான கவிதை
LikeLike
இன்றுதான் உங்கள் கவிதை புன்னகையில் மகிழ்ந்தேன் அருமையான கவிதை
LikeLike
மிக்க நன்றி சார்
LikeLike
நன்றி
LikeLike