கவிதை : மீண்டும் ஒரு முதல் முத்தம்

இன்னும் இனிக்கிறது,
நீ
எனக்குத் தந்த முதல் முத்தம்.

கடற்கரையின் ஈரக்காற்றோடு போரிட்ட
உன் உஷ்ணக்காற்று,
சிப்பி சேகரித்த கைகளோடு
நீ இட்ட முத்து முத்தம்.

உன்னையும் என்னையும் சுற்றி
உலகமே வேடிக்கைபார்த்ததாய்
எனக்குத் தோன்ற
நீயோ கடல் மணலில்
உலகப்படம் வரைந்து கொண்டிருந்தாய்.

பூக்காரியைப் புறக்கணித்து,
சுண்டல் காரனைத் துரத்தி,
பிச்சைக்காரனுக்கு மட்டும் காசு போட்டதன் காரணம்
இன்னும் கூட எனக்கு விளங்கவில்லை.

பின்பு ஒரு நாள் சொன்னாய்.
தானம் தரும் ஒவ்வொரு காசும்
காதலைக் காப்பாற்றும் என்று
உண்மை தானோ என்று யோசித்திருக்கிறேன்.

பள்ளிச்சிறுமி கண்டெடுத்த
பவள மாலையாய்
இதயத்தீவுக்குள் உன் முத்தத்தை
இறுக்கமாய்ப் பற்றியிருந்தேன்.

அதற்குப்பின்
உதடுகள் வலிக்கும் வரை,
உணர்வுகள் சலிக்கும் வரை
பலமுறை முத்தமிட்டிருக்கிறாய்.

ஆனாலும்
அந்த முதல் முத்தம் தந்த பள்ளம்
நிரம்பிவிடவேயில்லை.
நேற்று
நம் குழந்தை முதல் முதலாய்
உதடு குவித்து
என் கன்னதில் முத்தமிடும் வரை !!!

14 comments on “கவிதை : மீண்டும் ஒரு முதல் முத்தம்

  1. அழகான முத்தச் சிந்தனைகள்.
    முத்தம் கற்பனையா…இல்லை கன்னத்தில் உண்மையாகவா!!!

  2. //பள்ளிச்சிறுமி கண்டெடுத்த
    பவள மாலையாய்//

    இது நல்லாயிருக்கு.

    இன்னுங்கேட்டா சிறு கல், சிப்பி இதெல்லாம்தான் பொக்கிஷம். என் அக்கா மகள் இலை தழைகளையும், கூழாங்கற்களையும், சில விதைகளையும், காய்களையும் பள்ளியிலிருந்து வரும்போது சேகரிச்சிட்டு வந்து என் அக்கவிடம் திட்டு வாங்கிட்டிருப்பா(ங்க).

    அதே வேலையை இப்ப என் 11/2 வயது மகள் செய்ய ஆரம்பிச்சாச்சு. எங்க போனாலும் சிறு சிறு கூழாங்கற்கள், பேனா மூடி, பாட்டில் மூடி இப்படி ஏதாவது ஒன்னு கிடைக்குது.. அது பொக்கிஷமா பாதுகாக்கப்பட வேண்டியதா தெரியுது.. அவங்களுக்கு. நாமதான் புரிஞ்சிக்கணும்.

    அந்த அடிகள் நல்லா இருக்கு

    அன்புடன்
    கீதா

  3. //அழகான முத்தச் சிந்தனைகள்.
    முத்தம் கற்பனையா…இல்லை கன்னத்தில் உண்மையாகவா!!!

    //

    மிக்க நன்றி🙂 உண்மையா கற்பனையா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்🙂

  4. மிக்க நன்றி கீதா.. அனுபவத்தின் வெளிச்சத்தில் கவிதையை வாசித்திருக்கிறீர்கள். மனதுக்கு நிறைவாய் இருக்கிறது.

  5. ரொம்ப அழகானதொரு கவிதை. வாழ்த்துக்கள்.

    //உதடுகள் வலிக்கும் வரை,
    உணர்வுகள் சலிக்கும் வரை
    பலமுறை முத்தமிட்டிருக்கிறாய்.//

    நல்ல வரிகள். ரசித்தேன்.

  6. //ஆனாலும்
    அந்த முதல் முத்தம் தந்த பள்ளம்
    நிரம்பிவிடவேயில்லை.
    நேற்று
    நம் குழந்தை முதல் முதலாய்
    உதடு குவித்து
    என் கன்னதில் முத்தமிடும் வரை !!!
    //

    சேவியர்,
    அற்புதமான வரிகள். குழந்தை இடும் முத்தம் எப்பேர்ப்பட்ட பள்ளத்தையும் நிரப்பிவிடும் என்பது மிகவும் சரி.

  7. மிகவும் ரசித்தேன் உங்கள் முத்தக்கவிதையை……..

    \\நம் குழந்தை முதல் முதலாய்
    உதடு குவித்து
    என் கன்னதில் முத்தமிடும் வரை !!!\

    ஸிம்பிளி சூப்பர்ப்!!!

    \\பள்ளிச்சிறுமி கண்டெடுத்த
    பவள மாலையாய்
    இதயத்தீவுக்குள் உன் முத்தத்தை
    இறுக்கமாய்ப் பற்றியிருந்தேன்.\\

    அருமையான உவமை…….

    ரொம்ப நல்லாயிருக்கு உங்கள் வலைதளமும், உங்கள் கவிதைகளும்!!

  8. ///ரொம்ப நல்லாயிருக்கு உங்கள் வலைதளமும், உங்கள் கவிதைகளும்!!//

    மனமார்ந்த நன்றிகள் திவ்யா . மனம் திறந்த பாராட்டுக்கும், உங்கள் வருகைக்கும்.

  9. நீ இட்ட முத்து முத்தம் === நம் குழந்தை முதல் முதலாய்
    உதடு குவித்து
    என் கன்னதில் முத்தமிடும் வரை !!!

    மிக சிறந்த ஒப்பீடு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s