உனக்கும் எனக்கும்
அவசரத்தேவை ஓர் புனிதப்பயணம்.
சட்டைப்பையில்
சாக்கடை வைத்துவிட்டு
பூதக்கண்ணாடியால்
பிறர் முகம்
நோக்கி நகைக்கும்
கண்ணாமூச்சி வாழ்க்கை தான் நமது.
யாருக்கும் இங்கே
யதார்த்தங்களோடு
உணவருந்தப் பிடிப்பதில்லை
கனவுகளின் பந்திதான் நிரம்பி வழிகிறது.
விரலிடுக்குகளில்
விகாரங்களை வைத்துவிட்டு
அயலானின்
நக இடுக்குகளில்
நாகரீகம் இல்லையென்பதும்,
கலாச்சாரங்களின் மீது
கல்லெறிந்துவிட்டு
சமுதாயம் சகதி பூசுகிறதென்று
சாதிப்பதும் தானே
நமது பரம்பரைப் பழக்கம் ?
கருப்பு இருட்டுக்குள் தொலைத்த
கடுகுமணி போல,
சுயமுகம் கழுவ மறந்து
தொலைவில் கிடப்பவற்றைத்
துவைத்துப் பிழிவதே
நம் வழக்கமாகிவிட்டது.
உனக்கும் எனக்கும்
அவசரத்தேவை
ஓர் புனிதப்பயணம்.
புனிதப் பயணம் என்பது
நாம் செல்வதல்ல
நமக்குள் செல்வது.
//யாருக்கும் இங்கே
யதார்த்தங்களோடு
உணவருந்தப் பிடிப்பதில்லை
கனவுகளின் பந்திதான் நிரம்பி வழிகிறது//
azhagai ullathu.vaazhthukkal.
LikeLike
சேவியர்,
ஒவ்வொரு வரியும் சம்பட்டியால் அடித்தாற்போல் அற்புதம்.
அன்புடன்,
முகுந்தன்
LikeLike
////யாருக்கும் இங்கே
யதார்த்தங்களோடு
உணவருந்தப் பிடிப்பதில்லை
கனவுகளின் பந்திதான் நிரம்பி வழிகிறது//
azhagai ullathu.vaazhthukkal
//
மிக்க நன்றி லக்ஸ்.
LikeLike
//சேவியர்,
ஒவ்வொரு வரியும் சம்பட்டியால் அடித்தாற்போல் அற்புதம்.
அன்புடன்,
முகுந்தன்
//
மனமார்ந்த நன்றிகள் முகுந்தன்.
LikeLike
அருமை,
\விரலிடுக்குகளில்
விகாரங்களை வைத்துவிட்டு
அயலானின்
நக இடுக்குகளில்
நாகரீகம் இல்லையென்பதும்,\
நச்சென்ற வரிகள்……சூப்பர்!
LikeLike
மனமார்ந்த நன்றிகள் திவ்யா 🙂
LikeLike