கவிதை : புத்தகம் இல்லாப் பொழுதுகள்

புத்தகம் ஒன்று
கைகளில் இல்லாத மாலைகள்
கைகளே இல்லாதவனிடம்
கிடைத்த
வீணைகள் போல
வீணாய் கழியும்.

எழுத்துக்களை
இழுத்துத் தின்று சாயும்
பொழுதுகளில்,
வயிற்றுப் பசி
வாய்தா அனுப்புவதில்லை.

என்னைத் தொலைக்க
நானே முயலும் போதும்,
என்னைக் கண்டெடுக்க
நானே முனையும் போதும்
புத்தகங்கள் மட்டுமே
கண் முன் வருகின்றன.

வார்த்தைகளில் விழுந்து
பக்கங்களில் புதைபட்டு
கவிதைகளில் கரைந்து
பின்
வெளிவரும்போது விடிந்திருக்கும்,
வானமும், மனமும்.

புத்தகங்களில்லா அறைகள்
காற்றைக் கட்டிவைத்த
கல்லறைகள் தான்.
இல்லையேல்
சிறகுகளை வெட்டிவைத்த
சிறைகள் தான்.

புத்தகங்கள் இல்லையேல்
என்னால்
சுவாசிக்க முடியாதென்று
சிந்தித்த காலங்களும் உண்டு.

ஆனால்,
இப்போதெல்லாம் மாறிவிட்டன.

நான்
கடைசியாய் வாசித்த
பத்திரிகை,
என்
கல்யாணப் பத்திரிகையென்று
நினைவு.

19 comments on “கவிதை : புத்தகம் இல்லாப் பொழுதுகள்

 1. ரொம்ப மோசம் சேவியர். கடைசியாக வாசித்த பத்திரிக்கை கல்யாண பத்திரிக்கைனு எழுதி அதனால தான் புத்தகம் படிப்பதை நிறுத்தி விட்டதுபோல் எழுதி இருக்கிறீர்கள் 🙂

  Like

 2. உங்கள் வருத்தம் நன்றாக புரிகிறது , சேவியர் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
  இருந்தாலும் , என்ன செய்ய ? 🙂

  நட்புடன்
  குகன்

  Like

 3. how could you say this is a poem,
  absolutely this is an joke,
  “Thaangal solla vanda karuthai sollamal, Ilai maraikayaga ungal vaalkayai cholli irukireergal, Endraalum ungal munaipirku, enadhu ulamaarndha paaratukkal.”
  “3 & 4 m pathiyin eluthukkal arumai, ange thaan thaangal, ungalin aalnda arivai velipaduthi yirukireergal”

  Like

 4. //“idhu oru podhuvaana pinnottam, “Alasalukku Vaanga” ok, adenna alasalukkedharku, aabasa padam.”

  Vindhai manidaraiya neer.
  //

  ஆபாசப் படமா ?

  பாசமாய் ஒரு மலருடன் காதலனுக்குக் காத்திருக்கும் காதலியின் படமய்யா அது..

  இருந்தாலும் நீர் குசும்புக் காரன் தான் சீயான்.

  Like

 5. அருமையான கவிதை.
  ஏதோ தேடி எப்படியோ இந்தப் பக்கத்திற்கு வந்தடைந்தேன்
  கடைசியில் கிடைத்தது ஒரு நல்ல கவிதை.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.