கவிதை : ஒரு நாள் = 48 மணி நேரம்

இருபத்து நான்கு மணி நேரம்
போதவில்லை.
நாற்பத்தெட்டு இருந்திருக்கலாம்
ஒரு நாளைக்கு.

இந்த அவசர
ஓட்டங்கள்
சிறு
நிதான நடைகளாய்
நிறம் மாறி இருக்கும்.

என்
சிந்தனைகள்
இன்னும் கொஞ்சம்
இளைப்பாறிச் சென்றிருக்கும்.

என்
வாரப்பத்திரிகை வாசிப்புகள்,
தினசரித் தூக்கங்கள்,
எல்லாம்
மூச்சிரைக்காமல் முடிந்திருக்கும்.

இன்றைய மிச்சங்களை
நாளைக்காய்
பொறுக்கி வைப்பதும்,
நாளைய கனவுகளை
இன்னோரிடத்தில்
நறுக்கி வைப்பதும்
இல்லாமல் இருந்திருக்கும்.

அந்த
மெல்லியக் காலைப்
போர்வைத் தூக்கம்,
கட்டில் மீது தொடர்ந்திருக்கும்.

பிந்தைய மாலைப்
பொழுதின் ஏக்கம்
இரவைத் தொட்டு முடிந்திருக்கும்.

என்
தோட்டத்து ரோஜா
இதழ்கள் இளமை
இன்னும்
கொஞ்சம் நீண்டிருக்கும்.

என்னை விடவும்
ஏராளமாய்,
அந்த
ஈசல்ப் பூச்சி மகிழ்ந்திருக்கும்.

10 comments on “கவிதை : ஒரு நாள் = 48 மணி நேரம்

  1. //சிறு உயிரினமான ஈசல் பூச்சியின் மகிழ்ச்சியில் தானும் மகிழ்ந்து போவது படைப்பாளிகளுக்கு மட்டுமே உரிய மிகப் பெரிய நிலை . அந்த மன நிலைக்கு கவிதை வாசித்த என்னையும் அங்கு இட்டுச் சென்றது மிகச் சிறப்பு .

    //

    நன்றி குகன். கவிதையின் இயல்போடு கலந்து ரசித்தமைக்கு.

    //ஆனால் அலுவலக நேரம் கூடி விடுமே சேவியர் ” ஒரு நாளைக்கு 48 மணி நேரம் ஆனால் ” .
    அதற்கு என்ன செய்வது ?

    //

    இப்போ தான் தோணுது, சராசரி ஆயுள் மனுஷனுக்கு 30 என்று ஆகிவிடுமோ 🙂

    Like

  2. கவிஞர் சேவியருக்கு,

    சிறு உயிரினமான ஈசல் பூச்சியின் மகிழ்ச்சியில் தானும் மகிழ்ந்து போவது படைப்பாளிகளுக்கு மட்டுமே உரிய மிகப் பெரிய நிலை . அந்த மன நிலைக்கு கவிதை வாசித்த என்னையும் அங்கு இட்டுச் சென்றது மிகச் சிறப்பு .

    ஆனால் அலுவலக நேரம் கூடி விடுமே சேவியர் ” ஒரு நாளைக்கு 48 மணி நேரம் ஆனால் ” . 😉
    அதற்கு என்ன செய்வது ?

    அன்புடன்
    குகன்

    Like

  3. //நாற்பத்தெட்டு மணி நேரம்
    போதவில்லை.
    தொண்ணூற்றி ஆறு இருந்திருக்கலாம்
    ஒரு நாளைக்கு.

    என்று கவிதையை ஆரம்பித்திருப்பீர்கள்,
    நாற்பத்தெட்டு மணி நேரம் இருந்தால்.

    //

    🙂 இருக்கலாம் !!!

    Like

  4. //\\என்னை விடவும்
    ஏராளமாய்,
    அந்த
    ஈசல்ப் பூச்சி மகிழ்ந்திருக்கும்.\

    இது டாப்பு:))
    //

    நன்றி திவ்யா 🙂

    Like

  5. //மிகவும் சரி. காலையில் அந்த போர்வையை எழுத்து போர்த்தி கொண்டு தூங்குவது மிகவும் சுகமானது//

    ம்ம்… சுகம் சுகமே 🙂

    Like

  6. நாற்பத்தெட்டு மணி நேரம்
    போதவில்லை.
    தொண்ணூற்றி ஆறு இருந்திருக்கலாம்
    ஒரு நாளைக்கு.

    என்று கவிதையை ஆரம்பித்திருப்பீர்கள்,
    நாற்பத்தெட்டு மணி நேரம் இருந்தால்.

    Like

  7. காலை தூக்கத்தின் சுகமே தனி தான்!!

    \\என்னை விடவும்
    ஏராளமாய்,
    அந்த
    ஈசல்ப் பூச்சி மகிழ்ந்திருக்கும்.\

    இது டாப்பு:))

    Like

  8. //அந்த
    மெல்லியக் காலைப்
    போர்வைத் தூக்கம்,
    கட்டில் மீது தொடர்ந்திருக்கும்.//

    மிகவும் சரி. காலையில் அந்த போர்வையை எழுத்து போர்த்தி கொண்டு தூங்குவது மிகவும் சுகமானது.

    முகுந்தன்

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.