லாடம் அடித்த கனவுகள்

பிரிய நிலவே,
எத்தனை நாளாகிறது
உன்னைப் பார்த்து.
ஓர்
பதினான்காம் பிறைபோல
நினைவிடுக்கில்
நகர்கின்றன நாட்கள்.

காதலின் கணங்களும்
காத்திருப்பின் கனங்களும்
கால்களை
பாறையோடு பதியனிட்டதாய்
இறுகிக் கிடக்கின்றன.

தேடலின் விழிகள் கூட
உறைந்து விட்டன.
ஆனாலும்
விடாமல் என் உள்ளத்தை மட்டும்
உழுது கொண்டே இருக்கிறேன்.

உன்
ஒவ்வோர் புன்னகைக்கும்
உயிரின் ஒருபாதையை
உயிலெழுதிய பழக்கத்தால்
இன்று
மிச்சமிருப்பதெல்லாம்
பட்டா இல்லாத பகுதிகளே.

என்
பொருளாதாரப் பல்பறித்து
காதலுக்கு
கால நெய்ததில்
என் முதுகெலும்பு முறித்தே
கைத்தடி செய்ய வேண்டிய
கட்டாயம் எனக்கு.

ஆனாலும்,
உன் வயல்க்காட்டுத் தூறல்
வற்றி விடவில்லை என்றே,
என் நாற்றுக்கள்
நாக்கு நீட்டிக் கிடக்கின்றன.

ஒத்திகைக் காலக்
குத்தகை முடிந்ததால்,
அரங்கேற்ற மேடை
தூண்களில்
தவறாமல் தவமிருக்கிறேன்.

நீ
வந்தபின் விரிப்பதற்காய்
தோகைகளைக் கூட
துடைத்து வைத்திருக்கிறேன்.

நீ,
வரும் வடிவத்தை மறவாமல்
கடிதத்தில் அனுப்பு.

நீ
பல்லக்கில் வருவாயானால்
நான்
கடிவாளத்தோடு
காத்திருக்கக் கூடாதில்லையா ?

Advertisements

12 comments on “லாடம் அடித்த கனவுகள்

 1. am back xavi !!
  so cute, extremely sounds, deepest words,
  Thooya Chenthamizh chorkkal, ennai magizhchiyil aalthi vita dhaiya um
  kavidhaigal. Iperum poomiyil emmozhi pesa oru thamizh kavigyan irukiran endrenni yam siram thalthi, karam kuvithu ummaiyum, umadhu kavi pulanaiyum vazhthugirom.

  Muthamizh Valartha managarilindhu,
  thamizh Theriya Koomuttai,
  chiva Iraman.(as per our language)

  Like

 2. வாங்க வாங்க சிவா… கவிதையை ரசித்தமைக்கு நன்றி. இருந்தாலும் இப்படி ரொம்பப் பெரிய வார்த்தைகளெல்லாம் சொல்லி சங்கோஜப்பட வைக்காதீங்க நண்பரே 🙂

  Like

 3. //Innum nalla nalla kavithai varigalai ungalitam ethir parkirom my friends ravi, ajay, karthikeyan, suresh//

  நட்புக் கூட்டம் வளர்வதில் மகிழ்ச்சி. உங்களைக் கவரும் விதத்தில் கவிதை எழுத முடிந்ததில் இரட்டை மகிழ்ச்சி. 🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s