கவிதை : பெய்யெனப் பெய்யும் பொய்கள்


அரிச்சந்திர முலாம் பூசிய
அவசர காலப் பொய்களுக்கே
அமோக விளைச்சல்
இன்று.

உண்மைகளை தேடிய
இதயத்தின் சாலைகளெங்கும்
பொய்களின்
பாதத் தடம் மட்டுமே.

வறண்ட வார்த்தைகளை
விற்றுத் தள்ளுகிறது
ஈரமாய்க் கிடக்கும் நாக்கு.

சில பொய்கள்
மௌனத்துக்குப் பின்னால்
மறைந்திருந்து சிரிக்கும்.

சில பொய்கள்
புன்னகைக்குப் பின்னால்
சிரிக்காமல் இருக்கும்.

குலுக்கிய கைகள்
விட்டுப்போன பொய்கள்
விரலிடுக்கில்
பிசுபிசுத்துக் கிடக்கும்.

சில பொய்கள்
தலைமுறைப் பழக்கத்தோடு
வெங்காய ஆடைகளாய்
உருமாறி இருக்கும்.

பொய்க்கால் குதிரைகளை
சில
நிஜக்கால்கள்
நிற்க வைப்பது போல,

பல பொய்கள்
உண்மையின் ஆடைகளை
தற்காப்புக்குப் போர்த்தியே
தலைநீட்டும்,
உள்ளுக்குள் அவை
நிர்வாணமாய் உலவும்.

பொய்மையும் வாய்மையிடத்து
என்றான் வள்ளுவன்,
தவறாய் புரிந்ததாலோ என்னவோ
பொய்மைகள் மட்டுமே
இன்று
வாய்மையின் இடத்தில்.

9 comments on “கவிதை : பெய்யெனப் பெய்யும் பொய்கள்

  1. //உண்மை எப்போதும் சுடுமாமே
    அதுக்குத்தான் பொய் சொல்கிறார்கள்//

    இதெல்லாம் பொய் சொல்றவங்க சொல்ற சால்ஜாப்பு…

    “பெப்பர் போட்டு ஒரு கல்ப் அடிச்சா தாங்க எனக்கு ஜலதோஷம் சரியாகுது.. என்பான் தண்ணியடித்தலுக்கு நியாயம் கற்பிக்கும் என் நண்பன் ஒருவன் ” 🙂

    Like

  2. //பொய்களை அழகாக அலசி உண்மையாய் பொய்யைப் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள்//

    நன்றி ஹேமா 🙂

    Like

  3. உண்மை எப்போதும் சுடுமாமே
    அதுக்குத்தான் பொய் சொல்கிறார்கள் என்று தெரியாமல் இன்னும் சின்ன பையனாயிருக்கீங்களே அண்ணாச்சி.

    Like

  4. பொய்களை அழகாக அலசி உண்மையாய் பொய்யைப் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள்.

    Like

  5. //உண்மையைச் சொன்னால் நல்லாருக்கு கவிதை, வழக்கம் போலவே!//

    உண்மையை மனம் விட்டுச் சொன்னமைக்கு மனமார்ந்த நன்றிகள் 🙂

    Like

  6. //Excellenet words, but i feel this more suitable for a person who is using this as a representative of a company(HR,Sales) than using it as an individual himself.//

    நன்றி முகுந்தன், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு.

    Like

  7. உண்மையைச் சொன்னால் நல்லாருக்கு கவிதை, வழக்கம் போலவே!

    Like

  8. //வறண்ட வார்த்தைகளை
    விற்றுத் தள்ளுகிறது
    ஈரமாய்க் கிடக்கும் நாக்கு.//

    Xavier,

    Excellenet words, but i feel this more suitable for a person who is using this as a representative of a company(HR,Sales) than using it as an individual himself.

    sorry posted in english as there is some issues with the browser.

    Mukundan

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.