கைப்பேசிகளைப் பயன்படுத்துவதால் வரும் இன்னல்கள் இவை இவை என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஒரு புறம் ஆராய்ச்சிகள் பயமுறுத்திக் கொண்டே இருக்கின்றன. மறுபுறம், அது குறித்த கவலைகள் ஏதுமற்று இலட்சக்கணக்கான கைப்பேசிகள் பல்வேறு வண்ணங்களிலும், வடிவங்களிலும் தினம் தோறும் விற்பனையாகிக் கொண்டே இருக்கின்றன.
ஆடம்பரம் என கருதப்பட்ட கைப்பேசி இன்று உணவு, உடை, உறைவிடத்துக்கு அடுத்த இடத்தை எட்டிப் பிடித்துள்ளது. வீட்டுக்கு ஒன்று எனும் நிலமை ஆளுக்கு ஒன்று என்றாகி இன்று அலுவலகங்களில் பணிபுரிவோர் ஆளுக்கு இரண்டு கைப்பேசிகளைச் சுமந்து திரியும் நிலைக்கு ஆளாகியிருக்கின்றனர். நவீனம் வசதிகளைத் தரும்போது கூடவே இலவச இணைப்பாக நோய்களையும் தந்து செல்கிறது என்பதை கைப்பேசியின் வரவும் ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது.
1972 களில் சோவியத் யூனியன் மின் காந்த அலைகள் உலவும் இடத்தில் பணிபுரியும் மக்களுக்கு வினோதமான நோய்களும், அதற்குரிய அறிகுறிகளும் தெரிவதாக கவலை தெரிவித்தது. அப்போது ஆரம்பித்த இந்த மின்காந்த அலைகளின் பாதிப்பு குறித்த ஆய்வுகள் இன்னும் நீள்கிறது. இந்த கைப்பேசி யுகத்தில் அது மிகவும் வலிமையடைந்திருக்கிறது.
கைப்பேசிகளைப் பயன்படுத்துவோருக்கு மட்டுமல்ல, கைப்பேசிக் கோபுரங்களைச் சுற்றி சுமார் முன்னூறு மீட்டர் சுற்றளவில் வசிக்கும், கைப்பேசியைப் பயன்படுத்தாத மக்களுக்கும் கூட பல விதமான உடல் உபாதைகள் ஏற்படலாம் என்பதையும் பல ஆராய்ச்சிகள் எச்சரிக்கை மணியாக அடித்துள்ளன.
எல்லா நகரங்களின் மூலைகளிலும் கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கும் இந்த கைப்பேசிக் கோபுரங்கள் அமைதியாக மரணத்தின் நுழைவுச் சீட்டுகளை நகருக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது என்பது நாம் உணராத நிஜமாக இருக்கிறது.
கைப்பேசியிலிருந்தும், கைப்பேசிக் கோபுரங்களிலிருந்தும் வெளியாகும் எலக்ரோமேக்னட்டிக் அலைகளினால் (மின்காந்த அலை) உருவாகும் எலக்ரோமேக்னட்டிக் ஃபீல்ட் ( மின்காந்த தளம்) EMF தான் இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் என்கின்றன ஆராய்ச்சிகள். எனவே பல்வேறு நாடுகள் குடியிருப்புப் பகுதிகளிலோ, அதை ஒட்டிய பகுதிகளிலோ கைப்பேசிக் கோபுரங்கள் வைக்கத் தடை விதித்திருக்கின்றன. இந்தப் பட்டியலில் இஸ்ரேலும் தற்போது இணைந்துள்ளது.
மனிதர்களை மட்டுமன்றி பறவைகளையும் தாவரங்களையும் கூட இந்த மின்காந்த அலைகள் அழிவை நோக்கி நடத்துகின்றன என்பது துயரத்தைக் கூட்டும் செய்தியாக அமைந்துள்ளது.
நமது தோட்டங்களில் சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் அழையா விருந்தாளியாய் சிறகசைத்துக் கொண்டிருந்த வண்ணத்துப் பூச்சிகளும், பறவைகளும் இன்று காணாமல் போயிருக்கின்றன எனில் அதன் காரணம் கைப்பேசிகளின் கைங்கர்யம் என்கின்றது ஒரு ஆராய்ச்சி.
சுமார் ஐம்பது இலட்சம் பறவைகள் ஆண்டுதோறும் உயிரிழக்க இந்த மின்காந்த அலைகள் காரணமாகின்றன என்கிறது பதறவைக்கும் புள்ளிவிவரம் ஒன்று.
இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட ஆய்வு ஒன்று இந்த மின்காந்த அலைகளினால் அருகிலுள்ள நிலத்தின் நுண் உயிரிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றன என கண்டறிந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
இந்த மின்காந்த அலைகள் மனிதனுடைய மரபணுக்களையும் ( DNA ) பாதிக்கும் எனும் அதிர்ச்சியூட்டும் ஆய்வு ஒன்றும் தற்போது இரண்டாவது கட்ட ஆராய்ச்சியில் இருக்கிறது. இது நிரூபிக்கப்படுமெனில் இந்த கைப்பேசிகளும், கைப்பேசிக் கோபுரங்களும் அழிக்கப் போவது சமகால மனுக்குலத்தை மட்டுமல்ல, இனிவரும் தலைமுறையும் சேர்த்துதான் எனும் செய்தியையும் கேட்க வேண்டிய நிலை வரும்.
பலர் இவையெல்லாம் கட்டுக்கதை என பிடிவாதம் பிடித்தாலும், கைப்பேசிக் கோபுரங்களை ஒட்டிய பகுதிகளில் பல ஆண்டுகாலம் வாழும் மக்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் வருவதை பல ஆராய்ச்சிகள் அறிக்கைகளாய் சமர்ப்பித்திருக்கின்றன.
தலைவலி, தூக்கமின்மை, ஞாபக மறதி, துவங்கி விந்தணு பாதிப்பு, அல்சீமர், பார்கின்ஸன், என விரிவடைந்து தற்போது புற்றுநோய், மரபணு பாதிப்பு என உச்ச பட்ச அதிச்சியை தந்திருக்கிறது கைப்பேசித் தொழில் நுட்பம்.
குறிப்பாக கைப்பேசியைப் பயன்படுத்துவது மூளையை பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்றும், தலையின் மிருதுவான காது பகுதி வழியாக மூளையை மின்காந்த அலைகள் தாக்குவது எளிது என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கைப்பேசிகளிலிருந்து வெளியாகும் மின் காந்த அலைகளில் எழுபது விழுக்காடு மூளையைத் தாக்குகின்றனவாம்.
குறிப்பாக மண்டையோடு அதிகம் பலமடையாத குழந்தைகள் இந்த மின்காந்த அலைகளினால் பெரும் பாதிப்பு உள்ளாகும் வாய்ப்பு உண்டு. எனவே தான் குழந்தைகள் கைப்பேசியைப் பயன்படுத்தவே கூடாது என அறுதியிட்டுச் சொல்கின்றனர் மருத்துவர்கள்.
ஸ்பெயினிலுள்ள நரம்பு ஆராய்ச்சிக் கூட ஆய்வு ஒன்று இன்னோர் அச்சுறுத்தலைத் தருகிறது. அதாவது இரண்டு நிமிடம் கைப்பேசியில் பேசும் குழந்தைக்கு அடுத்த ஒரு மணி நேரத்துக்கு மூளை செயல்பாடுகள் பாதிப்படைகின்றனவாம்.
கைப்பேசியைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு நன்னடத்தை மீறல் சிக்கல்களும், உளவியல் சிக்கல்களும் ஏற்படும் வாய்ப்பு அதிகம் எனவும் அதே ஆராய்ச்சி தெரிவிக்கின்றது.
சமீபத்தில் பிரிட்டனில் வெளியான ஆய்வு ஒன்று தாய்மைக்காலத்தில் தாய் கைப்பேசியைப் பயன்படுத்தினால் கருவிலிருக்கும் குழந்தையையும் அது பாதிப்புக்கு உள்ளாக்கும் என திடுக்கிட வைத்தது இங்கே குறிப்பிடத் தக்கது.
ஸ்வீடன் நாட்டு ஆராய்ச்சி ஒன்று பத்து வருடங்கள் கைப்பேசியை உபயோகிக்கும் நபருக்கு காதுக்கும் மூளைக்கும் இடையே புற்று நோய் (acoustic neuroma ) வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகரிக்கிறது என நிரூபித்திருக்கிறது.
ஒருமணி நேரம் இந்த மின் அலைகளின் வட்டத்துக்குள் இருக்கும் மனித அணு, சுருக்கம் அடைவதாகவும் ஒரு ஆய்வு தெரிவித்தது.
புகை பிடித்தலினால் வருவதை விட அதிகமான பாதிப்பை இந்த மின்காந்த அலைகள் உருவாக்கும் என்று எச்சரிக்கிறார் புற்றுநோய் ஆய்வில் பல விருதுகள் வாங்கிய மருத்துவர் வினி குரானா. இன்னும் பத்து ஆண்டுகளில் மனுக்குலம் புற்று நோய் மனிதர்களின் புகலிடமாகாமல் தடுக்க வேண்டுமெனில் அதன் முயற்சிகள் இப்போதே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்கிறார் அவர்.
இதை மெய்ப்பிப்பது போல ஸ்வீடன் நாட்டு ஆய்வு ஒன்று மூளை புற்று நோய்க்கும் அதிக நேரம் கைபேசி பயன்படுத்துதலுக்கு தொடர்பு இருப்பதாகவும், குழந்தைகளுக்கு லுகேமியா நோய் வருதலுக்கும் இந்த மின்காந்த அலைகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது.
கூடவே அதிக மின் காந்த அலைகள் உலவும் இடங்களில் பணி செய்யும் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் வரும் ஆபத்து இருப்பதாகவும் இரண்டு ஆய்வுகள் தெரிவித்தன.
ஐரோப்பாவில் நிகழ்த்தப்பட்ட மூன்று முக்கிய ஆய்வுகள் புற்று நோய்க்கும், கைப்பேசிப் பயன்பாட்டுக்கும் இடையேயான தொடர்பை முன்வைத்து நடத்தப்பட்டன. அதில் இரண்டு ஆய்வுகள் சுமார் பத்து ஆண்டுகள் தொடர்ச்சியாக கைபேசி பயன்படுத்தினால் கைபேசியைப் வைக்கும் காதுக்கும் மூளைக்கும் இடையே புற்று நோய் உருவாகும் ஆபத்து இருப்பதை ஊர்ஜிதப்படுத்தியது. இன்னோர் ஆய்வு இருபது வயதுக்கு உட்பட்டவர்கள் கைப்பேசியைப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என எச்சரித்தது. இந்த மூன்று ஆய்வுகளுமே உலக நலவாழ்வு நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது உலகின் கவனத்தை ஈர்த்தது.
இப்படி உலகெங்கும் கைப்பேசிப் பயன்பாடு குறித்த ஆய்வுகள் வெளியாகிக் கொண்டிருப்பதனால், இந்த கைப்பேசிக் கோபுரங்கள் குறித்த விழிப்புணர்வும் மெதுவாக தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. பள்ளிக்கூடங்கள், குடியிருப்புப் பகுதிகள், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்கள், வணிக இடங்கள் ஆகியவற்றில் கைப்பேசிக் கோபுரங்கள் வைக்கக் கூடாது என மக்கள் பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
உலகெங்கும் சுமார் முன்னூற்றைம்பது கோடி கைப்பேசிகள் பயன்பாட்டில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. நவீன யுகத்தின் கண்டுபிடிப்புகள் பல மின்காந்த அலைகளை வெளியிடுகின்றன என்றாலும் உடலுக்கு மிக நெருக்கமாய், ஒரு ஆறாவது விரல் போல கூடவே இருந்து சிக்கலை உண்டாக்குவது கைப்பேசி மட்டுமே.
உலகெங்கும் 80 விழுக்காடு மக்கள் தங்கள் பெரும்பாலான நேரங்களில் கைப்பேசியை தங்கள் அருகிலேயே வைத்திருக்கிறார்கள் என்கிறது புள்ளி விவரம் ஒன்று. அதிலும் பெரும்பாலான நேரங்களில் கைகளிலோ, உடையிலோ கைப்பேசிகள் அமர்ந்து கொள்கின்றன. கைப்பேசி இயக்க நிலையில் இருக்கும் போது எப்போதுமே மின்காந்த அலைகளை வெளிவிட்டுக் கொண்டே இருக்கும் என்பதால் உடல் எப்போதுமே மின்காந்தத் தாக்குதலுக்கு ஆளாகிக் கொண்டே இருக்கிறது.
சிக்னல் கிடைக்காத இடங்களில் இந்த மின் காந்த அலைகள் அதிக தீவிரமுடையதாக இருக்கும். அத்தகைய இடங்களில் கைப்பேசி பயன்படுத்தும் போது மின்காந்த அலை பாதிப்பு அதிகமாக இருக்கும். எனவே கிராமப்புறங்களிலும், சரியான சிக்னல் இல்லாத புற நகர் பகுதிகளில் கைப்பேசியைப் பயன்படுத்துவது அதிக ஆபத்தானதாகிறது.
இன்றைய பதின்வயதுப் பருவத்தினர் எப்போதுமே காதில் ஒட்டவைத்த கைப்பேசிகளுடன் தான் வலம் வருகின்றனர். அவர்கள் கைப்பேசியைக் கைவிடாதிருக்க வணிக நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு, ரேடியோ, எம்.பி.3, வீடியோ என அனைத்து வசதிகளையும் கைப்பேசிகளில் அடைத்து பதின் வயதினரை கைப்பேசிகளின் கைப்பாவையாக்கியிருக்கிறது.
அமெரிக்காவில் மட்டுமே சுமார் பன்னிரண்டு கோடி கைப்பேசிகள் ஆண்டுதோறும் குப்பையாக ஒதுக்கப்படுகிறதாம். இப்படி உலகெங்கும் ஒதுக்கப்படும் கைப்பேசிகளில் விஷத்தன்மை வாய்ந்த உலோகங்கள் இருப்பதால் இது ஒரு உலகளாவிய மாசு அச்சுறுத்தலாகவும் உருவெடுத்துள்ளது.
அமெரிக்காவின் தேசிய புற்று நோய் கழகம் கைப்பேசிகள் மற்றும் கைப்பேசிக் கோபுரங்களிலிருந்து வெளியாகும் மின் காந்த அலைகள் மற்றும் ஒலி அலைகள் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து விரிவாக ஆய்வது சமூகத்தின் இன்றியமையாய தேவை என குறிப்பிட்டிருக்கிறது.
குறிப்பாக, எவ்வளவு தூரத்தில் கைப்பேசி இருக்கலாம், எவ்வளவு நேரம் பேசலாம், கைப்பேசியின் அளவு எவ்வளவு இருக்கலாம், கோபுரத்திலிருந்து எத்தனை தூரத்தில் வசிப்பிடம் இருக்கலாம் என்றெல்லாம் பல்வேறு வழிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டியது அவசியம் என அறிவுறுத்தியிருக்கிறது.
சுவர்களைக் கூட எளிதில் கடந்து செல்லும் இந்த மின் காந்த அலைகள் மனித உடலில் வெகு எளிதில் கடந்து செல்கின்றன. நம்மை அறியாமலேயே நமக்குள் நுழைந்து திரியும் இந்த மின் காந்த அலைகள் நாம் உணரும் முன்னே நம்மை நோயாளியாக்கி விடுகிறது.
அலுவலகங்களிலும் கணினி மானிட்டர், ஃபேக்ஸ், ஜெராக்ஸ் கருவிகளின் அருகே தொடர்ந்து பணி புரிபவர்கள் இத்தகைய மின்காந்த அலைகளின் அருகே இருக்கும் ஆபத்தைச் சந்திக்கின்றனர்.
கைப்பேசி மட்டுமன்றி மேலும் பல நவீன சாதனங்களும் மின் காந்த அலைகளை வெளியிடுகின்றன. மின்சாரத்தால் தண்ணீர் சூடாக்கும் கருவி, மின் முடி உலர்த்தும் கருவி, மின் படுக்கை, மின் கடிகாரம், மைக்ரோவேவ் அவன், குளிர்சாதனப் பெட்டி, மசாஜர், ஃப்ளாரசண்ட் லைட் என நவீனம் நமது வீடுகளில் நுழைத்துச் சென்ற பொருட்கள் எல்லாமே மின்காந்த அலைகளின் பாதிப்புகளை நமக்குத் தரக் கூடியவையே.
எனவே முடிந்த அளவுக்கு வீடுகளில் மின் பொருட்களை உபயோகிப்பதைத் தவிர்ப்பது நலம். அதாவது மைக்ரோவேவ் அவன் பயன்படுத்தாமல் அடுப்பைப் பயன்படுத்தி பொருட்களைச் சூடாக்குவது, வீட்டைக் கூட்ட வேக்குவம் கிளீனருக்குப் பதில் துடைப்பம் பயன்படுத்துவது, மின் கருவியால் பழங்களைப் பிழிவதைத் தவிர்ப்பது என இயற்கை முறைக்கு மாறும் போது மின் காந்த அலைகளின் தாக்கத்தைக் குறைக்க முடியும்.
கைப்பேசி, கைப்பேசி கோபுர மின்காந்த அலைகள் உடலுக்கு ஊறுவிளைவிப்பவை என்னும் செய்திகள் பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்திருக்கும் வேளையில் அதை மறுத்தும் பல்வேறு அறிக்கைகளும், ஆய்வுகளும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. எனினும் இந்த மின்காந்த அலைகளினால் எந்த பாதிப்பும் இல்லை எனும் ஆய்வு முடிவு ஒன்றை யாராலும் நிகழ்த்த முடியவில்லை.
மின் காந்த அலைகள் எனும் மௌனக் கொலையாளியின் கைகளிலிருந்து நம்மை நாமே காத்துக் கொள்வதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன.
. கைப்பேசியை நேராக காதில் வைத்துப் பேசாமல் தவிர்க்க, வயர் இணைப்புடன் கூடிய ஹெட்போனைப் பயன்படுத்துங்கள்.
. வீட்டில் சாதாரண தொலைபேசி இருந்தால் அதிலேயே பேசுங்கள். கைப்பேசியைப் பயன்படுத்தாதீர்கள்.
. கைப்பேசியில் ஒலிபெருக்கி வசதி இருந்தால் அதைப் பயன்படுத்துங்கள்.
. கைப்பேசியில் பேசவேண்டிய கட்டாயம் வரும்போது உரையாடலை மிகச் சுருக்கமாக முடித்துக் கொள்ளுங்கள்.
. நம் உடலை விட்டு சற்றுத் தூரமாகவே கைப்பேசியை வைத்துவிட்டு பணி செய்யப் பழக வேண்டும்.
. கைப்பேசியை கைகளிலோ, பாக்கெட்டிலோ வைப்பதற்குப் பதிலாக பையில் வைக்கலாம்.
. குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு கைப்பேசியில் பேசாதீர்கள். குழந்தைக்கு அது பாதிப்பை உண்டாக்கும்.
. இரவில் கைப்பேசியை அணைத்து வைத்து விட்டு தூங்குங்கள். முடியாத சூழல் எனில் முடிந்த அளவு தூரமாக கைப்பேசியை வைத்துவிடுங்கள்.
. நல்ல சிக்னல் கிடைக்காத இடங்களில் கைப்பேசியைப் பயன்படுத்தாதீர்கள். அதை அணைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
. கைப்பேசியை சார்ஜ் செய்யும்போது அதிக மின் காந்த அலைகள் உருவாகும். எனவே அதை அதிகம் பயன்படுத்தாத அறைகளில் சார்ஜ் செய்யுங்கள்.
சவால்களும், சாதனைகளும் நிறைந்ததே வாழ்க்கை. அனைத்தையும் ஆய்ந்தறிந்து ஆனந்தமாய் வாழ்வதற்கே மனுக்குலத்துக்குத் தரப்பட்டிருக்கிறது ஆறாவது அறிவு. அரசும், தனிமனிதனும் இந்த மின்காந்த அலை சிக்கல் தொடர்பாக தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்தால் ஆபத்தின் தீவிரத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை.
நல்லதொரு உபயோகமான பதிவு
LikeLike
நன்றி ஈ.வெ 🙂
LikeLike
மிக மிக அவசியமான தகவல். குழந்தைகளுக்கு அருகே எப்பொழுதும் கைபேசியை எடுத்து செல்லவே கூடாது என்பதை மிக தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். நன்றி….
LikeLike
சிறந்த பதிவு மற்றும் விழிப்புணர்வை தூண்டக்கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது… நன்றி..! இருப்பினும், எப்படி இதை கடைபிடித்து வாழ்வது என்பதை பற்றிய அறியாமை இப்பொழுது கேள்வியாகுமென நினைக்கிறேன்…!! சிறப்பான பதிவுகள் தொடர வாழ்த்துகிறேன்..!!
LikeLike
nalla
LikeLike
அறம் செய விரும்பு
அறீவூட்டியதற்கு நன்றீ
நண்பா…..
LikeLike
Quite useful info but at the same time reading it gives a kind of shock and fear. Thx my dear fren.
LikeLike
Very useful Nice Tips. Congrats, Keep it up……..
LikeLike
/மிக மிக அவசியமான தகவல். குழந்தைகளுக்கு அருகே எப்பொழுதும் கைபேசியை எடுத்து செல்லவே கூடாது என்பதை மிக தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். நன்றி….
//
நன்றி. இப்போது நடுவண் அரசும் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது இது குறித்து.
LikeLike
//சிறந்த பதிவு மற்றும் விழிப்புணர்வை தூண்டக்கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது… நன்றி..! இருப்பினும், எப்படி இதை கடைபிடித்து வாழ்வது என்பதை பற்றிய அறியாமை இப்பொழுது கேள்வியாகுமென நினைக்கிறேன்…!! சிறப்பான பதிவுகள் தொடர வாழ்த்துகிறேன்..!!
//
நன்றி 🙂
LikeLike
//அறம் செய விரும்பு
அறீவூட்டியதற்கு நன்றீ
நண்பா…..//
நன்றி…
LikeLike
//Quite useful info but at the same time reading it gives a kind of shock and fear. Thx my dear fren.//
என்ன பண்ண.. கொஞ்சம் கவனம் தேவை !
LikeLike
//Very useful Nice Tips. Congrats, Keep it up……..
//
நன்றி சுதாகர்…
LikeLike
This is the price we pay for technological advances.
Are we really advancing or going back in time?
LikeLike
நியூட்டனின் விதி நினைவுக்கு வருகிறது !
LikeLike
migavum nalla thagval…..
aanaivarum unara vendiya tharunam ithu….
LikeLike
/migavum nalla thagval…..
aanaivarum unara vendiya tharunam ithu….//
நன்றி தீ..
LikeLike
Thanks a lot…
LikeLike
நன்றி :0
LikeLike
remba very supera irunthu.
LikeLike
நன்றி கண்ணு… 🙂
LikeLike
நன்றிகள் கண்ணு…
LikeLike
Very useful to all. my heartly wishes tok future career.
karthikeyan,RJ kodai fm 100.5mhz
LikeLike
very interest boss
LikeLike
realy very very interest
LikeLike
/realy very very interest//
நன்றி கார்த்திகேயன்
LikeLike
ayyoda enne
LikeLike
//ayyoda enne//
😀
LikeLike
very very thank you sir
LikeLike
tamil
LikeLike
mikka nanri sir, very very useful in world peoples so thank you sir.
LikeLike
//mikka nanri sir, very very useful in world peoples so thank you sir.
//
நன்றி துரை
LikeLike
/very very thank you sir
//
நன்றி செல்வம்
LikeLike