கவிதை : எனைக் காணவில்லையே நேற்றோடு

நெருப்புக்கு ஏனடி
விருப்புக் கொண்டாய் என்
பிரியமே ?

மாங்கல்யக் கயிற்றின்
மஞ்சள் கூட இன்னும்
உன்
வியர்வைக் கறையால்
கருப்பாகவில்லையே !

சின்னச் சின்ன
சண்டைகளால் நீ
உரசிச் சென்ற உஷ்ணம் கூட
எனக்குள் இன்னும்
நெருப்பாகவில்லையே !

அதற்குள் ஏனடி
அவசரப் பட்டாய் ?

என் உள் வருடிய
உன் சுவாசத்தை
ஏனடி திருடிச் சென்றாய் ?
என் ஜீவப் பறவையின்
மெல்லிய கழுத்தை
ஏனடி திருகிக் கொன்றாய் ?

உன் முத்தப் பறவைக்கு
சிறகுகள் இருந்தபோது
என்
கன்னக் குதிரைக்கு
கால்கள் இருந்தது !

இப்போது நீ
சிறகுகளை உதிர்த்து விட்டு
சுய சிதையில்
சிதைந்ததேனடி ?

ஒரு முறை சிரித்தாலே
சரிந்து விடும் இதயமடி
எனது,
ஏன்
சத்தமின்றி எரிந்து விட்டாய் ?

யாரடி சொன்னது உனக்கு ?
மேகத்தை எரித்தால்
மழைபொழியும் என்றும்,
புல்லாங்குழலை எரித்தால்
இசை வழியும் என்றும்,
யாரடி சொன்னது உனக்கு ?

ஏனடி
தப்புத் தப்பாய் பாடம் பயின்று
என்னைச்
சரியாக்கி விட்டு
நீ தவறாய்  போனாய் ?

நேற்று
நீ விலகிச் சென்ற வினாடியில்
வெளியேறி விட்டது
என் பிடிவாதம்.

இன்று
என் மன்னிப்பின் மனுக்கள்
உன்
கல்லறைச் சிலுவையில்
ஆகளின்றி தொங்குகின்றன.

இமைகளை தள்ளித் திறக்கும்
பாரமான கண்ணீர்
நானே தொலைத்துவிட்ட
என்னைத் தேடுகிறது.

முகவரியற்ற வீதிகளெங்கும்
கானல் கால்களோடு.

Advertisements

8 comments on “கவிதை : எனைக் காணவில்லையே நேற்றோடு

 1. நெருப்புக்கு இரையான உன்
  கருப்பிக்கு தெரியவில்லை
  உன் விருப்பங்கள்…..

  கனியாய் இனித்தது உன் க‌விதை…!

  Like

 2. கற்பனையாய் இருந்தாலும் மனம் பாரமாகிறது.கண்ணீரைத் தள்ளித் திறக்க வைக்கிறது வரிகள்.

  Like

 3. //ஒரு முறை சிரித்தாலே
  சரிந்து விடும் இதயமடி
  எனது//
  நூறு சதவீதம் உண்மையான வரிகள்.

  ஈகோவை உதறி அன்பையும், சிரிப்பையும் அயுதமாக்கினால் கண்டிப்பாக உறவுகளை வெல்லலாம்.

  Like

 4. idhayathil nee suvasippathakkahathaane arai kattinen aanal nee en idhayatthi mattumalla en uyiraium allava senneeril karaithu kondaay

  Like

 5. //
  நெருப்புக்கு இரையான உன்
  கருப்பிக்கு தெரியவில்லை
  உன் விருப்பங்கள்…..

  கனியாய் இனித்தது உன் க‌விதை…!

  //

  நன்றி 🙂

  Like

 6. //கற்பனையாய் இருந்தாலும் மனம் பாரமாகிறது.கண்ணீரைத் தள்ளித் திறக்க வைக்கிறது வரிகள்.//

  நன்றி ஹேமா.. ரசித்தமைக்கு.

  Like

 7. //நூறு சதவீதம் உண்மையான வரிகள்.

  ஈகோவை உதறி அன்பையும், சிரிப்பையும் அயுதமாக்கினால் கண்டிப்பாக உறவுகளை வெல்லலாம்.

  //

  நன்றி குந்தவை. வரி வரியாய் ரசிக்கிறீர்கள் 🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s