பாடல் : நறியவும் உளவோ நீயறியும் பூவே

( சினிமா பாடல் போல… )

நக்கீரா… நக்கீரா…
சங்குதனை அறுத்தாலும் சத்தியம் இதென்றாய்.
மங்கை தன் கூந்தலுக்கு மணமில்லையென்றாய்.

நக்கீரா … நக்கீரா
பொங்குமெழில் எந்தன் மங்கை கண்டதுண்டா நீ – அவள்
கங்கைக்குழல் நுனிவாசம் கொண்டதுண்டா நீ.

1

என் மங்கையவள் மலர் சூடிக் கொண்டதில்லை பார் – அவள்
கூந்தல் சூடிக் கொண்ட நடமாடும் மலர் காண்.
மெல்ல எந்தன் நாசி மீதில் உரசிச் செல்கையில் – ஓர்
சொர்க்க வாசம் உள்ளுக்குள்ளே கரையுடைக்கும் காண்.

சொக்கும் மணத்தின் சொந்தக்காரி –  எனில்
விக்கல் வார்க்கும் வித்தைக்காரி.
கோடிக் கரத்தால் என்னை வாரி – உயிர்
மூடிக் காக்கும் பந்தக்காரி.
2

சாலையோரம் எந்தன் சோலை நடந்து செல்கையில் – அட
பட்டாம் பூச்சிக் கூட்டம் மொய்க்கும் கூந்தல் நிலை காண்
தோட்டம் வந்து மாலை நேரம் படுத்துக் கொள்கையில் – மக
ரந்தம் தேடி வண்டுக் கூட்டம் வட்டமிடும் காண்.

ஏஞ்சல் கூட்டச் சொந்தக்காரி – எனில்
ஊஞ்சல் ஆடும் தென்றல்காரி
நெஞ்சில் ஊறும் வெள்ளை ஏரி – மனம்
கொஞ்சச் சொல்லும் கொள்ளைக்காரி.

0

Advertisements

9 comments on “பாடல் : நறியவும் உளவோ நீயறியும் பூவே

 1. கொங்குதோர் வாழ்க்கை யஞ்சரைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழியுமோ… இப்படிதானே ஆரம்பிக்கும் இந்த செய்யுள்.

  Like

 2. ///
  கொங்குதோர் வாழ்க்கை யஞ்சரைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழியுமோ… இப்படிதானே ஆரம்பிக்கும் இந்த செய்யுள
  ///

  ஆமாம் மகனே, இது அந்த செய்யுளின் கடைசி வரி.

  சேவியர் சார்,

  சிவாஜி எ.பி. நாகராஜனை… மன்னிக்கவும்

  சிவபெருமான் நக்கீரனை எரிச்ச சீன் எங்கே?

  Like

 3. //படத்துல இருக்க பொண்ணு யாரு… அழகா இருக்கா??//

  ஆந்திரா பார்ட்டி… விஜய்க்கு தெரிஞ்சிருக்கும் 😉

  Like

 4. //இப்பலாம் ரொம்ப போர் டோப்பா முடி தான் போட்டிகிறாங்கலாம்…

  //

  முடிவெடுக்கச் சொன்னா
  முடி எடுக்கலாம் இல்லையா.. அதுக்குத் தான் 🙂

  Like

 5. //சிவபெருமான் நக்கீரனை எரிச்ச சீன் எங்கே?

  //
  தேவையில்லாததை எல்லாம் ஏன் கிளர்றீங்க… !

  Like

 6. ///
  ஆந்திரா பார்ட்டி… விஜய்க்கு தெரிஞ்சிருக்கும்
  ///

  என்னப்பா இது, என்னை ஏதோ பிலிம் நியூஸ் ஆனந்தன் ரேஞ்சுக்கு கற்பனை பண்ணிக்கிட்டீங்க போல இருக்கு. ஆந்திரால எதோ நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன். என்னைப் போயி…

  பின் குறிப்பு: பொண்ணு பேரு இலியானா

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s