அதிகாலை அமைதியில்
வரும்
உன் கனவு.
உயிருக்குள் நீரூற்றி
மனசுக்குள் தீமூட்டும்
உன் இளமை !
விழிகளில் நிறமூற்றி
இதயத்துள் ஓசையிறக்கும்
உன் அழகு !
நரம்புகளில்
இரயில் வண்டி ஓட்டும்
உன் சீண்டல் .
நெஞ்சுக்குள்
சிலிர்ப்பு நதி சரிக்கும்
உன் சிணுங்கல் !
..
…..
நீயும்
நீ சார்ந்தவைகளும் தான்
என் தேசத்தின்
எல்லைக் கோடுகள் !!!
//நரம்புகளில்
இரயில் வண்டி ஓட்டும்
உன் சீண்டல் .//
எனக்கு புல்லரிக்குது :-))
LikeLike
நீயும்
நீ சார்ந்தவைகளும் தான்
என் தேசத்தின்
எல்லைக் கோடுகள் /
மனதில் பதியமிடும் இந்த வரிகளின் சொந்தக்காரரான உங்களுக்கு நன்றிகள். பிரவாகமாக ஊற்றெடுக்கும் இந்த கவிச்சோலைக்கு நான் காற்று வாங்க அவ்வப்போது வந்து செல்கிறறேன். சிந்தையில் இளம் ரத்தத்தை கொண்டு செல்லும் இதயமாய் செயல்படும் சேவியரின் வரிகளை பாராட்ட வார்த்தைகள் வற்றி போய் விட்டன. செல்லரித்துப்போன கவித்துவ உலகில் புல்லரிக்கும் விதமாய் வார்த்தைகளில் விளையாடுகிறீர்கள். உங்கள் விரல்கள் ஒவ்வொரு முறை சொடுக்கும் போதும் என்போன்றோருக்கு காலைநேர பூபாளம் கேட்பது போன்றுள்ளது. தொடரட்டும் உங்கள் எழுத்து பணி. வாழ்த்துக்கள். நன்றி.
என்றும் அன்புடன்…
நெல்லை தமிழன்.
LikeLike
////நரம்புகளில்
இரயில் வண்டி ஓட்டும்
உன் சீண்டல் .//
எனக்கு புல்லரிக்குது :-))
//
நன்றி முகுந்தன் 🙂
LikeLike
//மனதில் பதியமிடும் இந்த வரிகளின் சொந்தக்காரரான உங்களுக்கு நன்றிகள். பிரவாகமாக ஊற்றெடுக்கும் இந்த கவிச்சோலைக்கு நான் காற்று வாங்க அவ்வப்போது வந்து செல்கிறறேன். சிந்தையில் இளம் ரத்தத்தை கொண்டு செல்லும் இதயமாய் செயல்படும் சேவியரின் வரிகளை பாராட்ட வார்த்தைகள் வற்றி போய் விட்டன. செல்லரித்துப்போன கவித்துவ உலகில் புல்லரிக்கும் விதமாய் வார்த்தைகளில் விளையாடுகிறீர்கள். உங்கள் விரல்கள் ஒவ்வொரு முறை சொடுக்கும் போதும் என்போன்றோருக்கு காலைநேர பூபாளம் கேட்பது போன்றுள்ளது. தொடரட்டும் உங்கள் எழுத்து பணி. வாழ்த்துக்கள். நன்றி.//
அன்பின் நெல்லைத் தமிழன். நெல்லைக்கே உரிய பிள்ளை மனதுடன் நட்பையும், பாராட்டையும் வஞ்சகமின்றி அள்ளித் தெளித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
அடிக்கடி வாருங்கள், சந்திப்போம், ரசனையில் இணைவோம், நட்பைத் தொடர்வோம்.
LikeLike
அன்புள்ள சேவியருக்கு ,
சின்ன சின்னதாய் இருந்தாலும் தீக்குச்சிகள் ஒரு காட்டையே எரிக்கும் வலிமை படைத்தவை.அது போன்றது தான் இந்த படைப்பு.
நரம்புகளில்
இரயில் வண்டி ஓட்டும்
உன் சீண்டல்
நீயும்
நீ சார்ந்தவைகளும் தான்
என் தேசத்தின்
எல்லைக் கோடுகள் !!!
ரசித்து ரசித்து படித்த வரிகள் !
வாழ்த்துக்கள் சேவியர் !!!!!!!!!!!!!!!!!
அன்புடன்
குகன்
LikeLike
as usual traditional Xavier’s touch…
Congrates.
LikeLike
நன்றி குகன் 🙂 அடிக்கடி வாருங்கள்…
LikeLike
நன்றி சங்கரன்.
LikeLike
EXPECTING LIKE THIS EMOTIONAL WORDS
LikeLike
மிக்க நன்றி ஸ்ரீதர்.
LikeLike