கவிதை : சக்கரம் இல்லாத் தேர்கள்…

என்
வீட்டுச் சேவல் இன்னும்
விழித்தெழவில்லை,
கடிகாரம் இல்லா என் வீட்டில்                            
விழிப்பு மணியோசையை
வயிற்றில் தான் வைத்திருக்கிறேன்.

இன்றைக்கு
என்ன வேலை எனக்கு ?
வரப்புகளின் சகதியோடா ?
எரியும் கரிசல் சரிவுகளிலா ?
விறகு பிளக்கும்
வெயில் வெளிகளிலா ?

எந்த ஆயுதம்
இன்று எனக்காய் காத்திருக்கும் ?
மண்வெட்டியா ?
கோடரியா ?
இல்லை
பட்டினிக்கான பத்திரமா ?

சிந்தனைகள்
முடிச்சிட்டு முன்னேற,
உள்ளறையில்
குழந்தைகளின் விசும்பல்.

கடின வேலைகண்டு
கண் கலங்கியதில்லை,
இருப்பதெல்லாம்
வேலை இல்லா
காலை வருமோ
எனும் கவலை மட்டும் தான்.

மாலை வரை வேலை,
விலைவாசிகளில்
கிழிந்து போகும் கூலி,
வங்கி பார்த்திராத வாழ்க்கை !

பொருளாதார முன்னேற்றங்கள்
வெட்டி வைக்கும்
சின்னச் சின்னப் பள்ளங்களிலும்
முகம் குப்புற விழுந்து
முட்டி உடைக்கும் நிலை.

பசி க்கும் பட்டினிக்குமான
துல்லிய விளக்கங்கள்
திணிக்கப்பட்டிருக்கும்
கோணிக் கதவுகள்.

ஆறாண்டுத் திட்டம் என்றால்
ஆடு வாங்குவது,
ஐமபதாண்டுத் திட்டம் ஒன்றில்
ஐந்து செண்ட் நிலம்.
கல் தேயும் நம்பிக்கையில் தான்
ஊர்கிறது என் எறும்பு ஜீவிதம்.

சொந்த விருப்பங்களை
உதறி நடக்கும் மனசு,
யாராரோ கேட்கும்
‘பிள்ளை படிக்கலயா ‘
எனும் கேள்விகளில் மட்டும்
பதறி நிற்கிறது.

Advertisements

20 comments on “கவிதை : சக்கரம் இல்லாத் தேர்கள்…

 1. // விழிப்பு மணியோசையை
  வயிற்றில் தான் வைத்திருக்கிறேன்.
  …………..
  பசி க்கும் பட்டினிக்குமான
  துல்லிய விளக்கங்கள்
  திணிக்கப்பட்டிருக்கும்
  கோணிக் கதவுகள்.
  ……………
  //

  நல்லாயிருக்குது….

  Like

 2. //சொந்த விருப்பங்களை
  உதறி நடக்கும் மனசு,
  யாராரோ கேட்கும்
  ‘பிள்ளை படிக்கலயா ‘
  எனும் கேள்விகளில் மட்டும்
  பதறி நிற்கிறது.//

  இந்த வரிகளைப் படிக்கும் போது
  மனசு பதறுகிறது
  அன்புடன் அருணா

  Like

 3. //‘பிள்ளை படிக்கலயா ‘
  எனும் கேள்விகளில் மட்டும்
  பதறி நிற்கிறது.//

  வார்த்தைகள் இல்லை … சோகத்தை சொல்ல ..

  Like

 4. ஓ…வறுமையை இப்படியும் சொல்ல முடியுமா!!!
  சொல்லமுடியும் அழகாக.

  Like

 5. ////சொந்த விருப்பங்களை
  உதறி நடக்கும் மனசு,
  யாராரோ கேட்கும்
  ‘பிள்ளை படிக்கலயா ‘
  எனும் கேள்விகளில் மட்டும்
  பதறி நிற்கிறது.//

  இந்த வரிகளைப் படிக்கும் போது
  மனசு பதறுகிறது
  அன்புடன் அருணா

  //

  நன்றி அருணா. பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியாத பெற்றோரின் ஏக்கங்களை நேரில் உணர்ந்தவன் நான்.

  Like

 6. ////‘பிள்ளை படிக்கலயா ‘
  எனும் கேள்விகளில் மட்டும்
  பதறி நிற்கிறது.//

  வார்த்தைகள் இல்லை … சோகத்தை சொல்ல
  //

  நன்றி முகுந்தன், கவிதையை ரசித்தமைக்கு.

  Like

 7. //ஓ…வறுமையை இப்படியும் சொல்ல முடியுமா!!!
  சொல்லமுடியும் அழகாக//

  நன்றி தோழி. 🙂

  Like

 8. நண்பர் சேவியருக்கு ,

  உண்மையின் நிழல்கள் கருப்பாய் இருப்பதனால் பொய்யின் வெளிச்சத்தில் நம்மை வாழப் பழக்கி விட்ட அரசியல் தலைவர்கள் வறுமைக்கு தீர்வு காணாததால் இன்றளவிலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் கொடுமையை , சரியாக படம்பிடித்து உள்ளீர்கள்!!!!!!!!!
  தும்மும் போது இதயம் உட்பட எல்லா உறுப்புகளும் செயல்பாடு இழக்கும் என்ற செய்தி படித்ததுண்டு . அந்த செயல்பாட்டு இழப்பை உண்டு பண்ணி விட்டது கடைசி பத்தி மூன்றும் !!!!!!!!!!!!!

  அன்புடன்
  குகன்

  Like

 9. //
  கடின வேலைகண்டு
  கண் கலங்கியதில்லை,
  இருப்பதெல்லாம்
  வேலை இல்லா
  காலை வருமோ
  எனும் கவலை மட்டும் தான்.
  //
  இப்போது கிராமங்களை ஆட்டிபடைக்கும் கவலை இது.

  //‘பிள்ளை படிக்கலயா ‘
  எனும் கேள்விகளில் மட்டும்
  பதறி நிற்கிறது.
  //

  நன்றாக எழுதியிருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.

  Like

 10. //தும்மும் போது இதயம் உட்பட எல்லா உறுப்புகளும் செயல்பாடு இழக்கும் என்ற செய்தி படித்ததுண்டு . அந்த செயல்பாட்டு இழப்பை உண்டு பண்ணி விட்டது கடைசி பத்தி மூன்றும் !!!!!!!!!!!!!
  //

  பதிலிலேயே படைப்பை ஒளித்து வைக்கும் திறமை உங்களுக்கு உண்டு !! நன்றி, உங்கள் பதிலுக்கு !

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s