கவிதை : பிரிவின் பிரியம்


உறவுச் சுவரில்
உயிர் ஒட்டிய நாளிலிருந்தே
பிரிவுப் பிசாசின்
கோரப்பற்களில்
ஈரம் மாறா இரத்தத் துளிகள்.

இரு உடல்
ஓருயிராய் பிணைந்து,
ஓருடல்
ஈருயிராய் தாய்மை அணிந்து,
பின்னொரு பொழுதில்
தொப்புள் கொடியின்
நெருக்கம் விட்டபோது
துவங்கிய பிரிவு.

பள்ளிக்கூட
ஆரம்ப நட்பு.
ஆற்றங்கரையில் ஒதுங்கிய
சிறு வயதுச் சங்கதிகள்,
பதின் பருவத்தில்
பயிரான
முகப்பருப் கனவுகள்.

அத்தனை
கானகக் குவியலிலும்
பிரிவைச் சந்திக்காத
பச்சைக் கிளை
ஒன்றையேனும்
பார்க்க இயலவில்லை.

பிரிவுகளில் பின்னால்
ஓடி ஓடி
கால் வலித்த காதல்கள்,

கடல்களைக் கடந்து
கட்டி வைக்கும்
மணல் கோபுரக் கரன்சிகள்,

தாய் நாட்டில்
ஓர் ஓட்டு வீட்டுக்குள்
ஒதுங்கிக் கிடக்கும்
தாய்ப்பாசக் கவலைகள்.

சட்டென்று முடிவடையும்
ஒற்றையடிப்பாதையின்
குறுக்குச் சுவர்
மரணங்கள் !

தற்கால ஓய்வுகளாகவும்,
நிரந்தரச் சாய்வுகளாகவும்,
பிரிவுக்கு முன்னாலும்
பின்னாலும்
பிரியாமல் தொடர்பவை
பிரிவுகளே.

பிரிவுகளைப்
பிரியவேண்டுமென்று
மனங்கள் பிரியப்படும்.

ஆனால்,
நிஜத்தின் பாதங்களோ,
அந்த பிரியத்தின்
சந்திப்பிலும்
ஒரு பிரிவைச் சந்திக்கும்.

25 comments on “கவிதை : பிரிவின் பிரியம்

 1. பிரிவென்பது …இவ்வளவு பிரியத்துடன் எழுத முடியுமா அதைப் பற்றி????
  அன்புடன் அருணா

  Like

 2. //பிரிவுகளைப்
  பிரியவேண்டுமென்று
  மனங்கள் பிரியப்படும்.//

  ரொம்ப நல்லா இருக்கு சேவியர்,
  எனக்கு எப்பவுமே இப்படி தோன்றுவதுண்டு.

  Like

 3. பிரிவின் துயரம்…அநுபவத்தின் ரணங்கள்.நிஜங்களைக் கடக்கத்தான் நினைக்கிறோம்.நிதர்சனங்களாகவே சில.

  Like

 4. //ஆனால்,
  நிஜத்தின் பாதங்களோ,
  அந்த பிரியத்தின்
  சந்திப்பிலும்
  ஒரு பிரிவைச் சந்திக்கும்.//

  கடைசி வரிகளில் கண்ணீர் வழிவதை தவிற்க முடியவில்லை
  சேவி அண்ணா.

  Like

 5. கவிஞர் சேவியருக்கு,
  அறுத்தெறிய முடியாத தொடர்ச்சியான பிரிவுச் சங்கிலிகள் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து இருப்பதை நயமாக எழுதி உள்ளீர்கள் !!!!!!!!!!!!!!!!!!!!!

  “இரு உடல்
  ஓருயிராய் பிணைந்து,
  ஓருடல்
  ஈருயிராய் தாய்மை அணிந்து,
  பின்னொரு பொழுதில்
  தொப்புள் கொடியின்
  நெருக்கம் விட்டபோது
  துவங்கிய பிரிவு.

  அற்புதம் .மிகவும் ரசித்தேன்.

  அன்புடன்
  குகன்

  Like

 6. //தற்கால ஓய்வுகளாகவும்,
  நிரந்தரச் சாய்வுகளாகவும்,
  பிரிவுக்கு முன்னாலும்
  பின்னாலும்
  பிரியாமல் தொடர்பவை
  பிரிவுகளே.

  //

  உண்மைதான்.
  அதிலிம் சிலவற்றை பிரியும் போதுதான் அதன் அருமையே தெரியும்.
  அழகான கவிதை.

  Like

 7. ///
  கடைசி வரிகளில் கண்ணீர் வழிவதை தவிற்க முடியவில்லை
  சேவி அண்ணா.
  ///

  அந்தோணி அனுபவித்து சொல்லியிருக்கிறார். அவர் பிரிவின் வலியை வெகு சமீபத்தில் உணர்ந்தவரும் கூட.

  Like

 8. //ரொம்ப நல்லா இருக்கு சேவியர்,
  எனக்கு எப்பவுமே இப்படி தோன்றுவதுண்டு.

  //

  நன்றி முகுந்தன்.

  Like

 9. //பிரிவின் துயரம்…அநுபவத்தின் ரணங்கள்.நிஜங்களைக் கடக்கத்தான் நினைக்கிறோம்.நிதர்சனங்களாகவே சில//

  கவிதையாகவே சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

  Like

 10. //கடைசி வரிகளில் கண்ணீர் வழிவதை தவிற்க முடியவில்லை
  சேவி அண்ணா.

  //

  உணர்வுகளுக்கு நன்றி தம்பி.

  Like

 11. //உண்மைதான்.
  அதிலிம் சிலவற்றை பிரியும் போதுதான் அதன் அருமையே தெரியும்.
  அழகான கவிதை//

  உண்மை, உண்மை, உண்மை… அதுவும் சட்டென பிரியும் உறவுகள் தரும் வலி விவரிக்க முடியாதது

  Like

 12. //அந்தோணி அனுபவித்து சொல்லியிருக்கிறார். அவர் பிரிவின் வலியை வெகு சமீபத்தில் உணர்ந்தவரும் கூட//

  ஓ.. அது தெரியாது விஜய் 😦

  Like

 13. நடந்துமுடிந்த..பிரிவுகளை….தேடி..தேம்புகிறது….கவிதையை..படித்ததும்…நினைவுகள்…

  Like

 14. பிரிவின் துயரம் கூட அழகாய் தெரிகிறது இந்த கவிதைகளில்

  Like

 15. ****தாய் நாட்டில்
  ஓர் ஓட்டு வீட்டுக்குள்
  ஒதுங்கிக் கிடக்கும்
  தாய்ப்பாசக் கவலைகள்.

  சட்டென்று முடிவடையும்
  ஒற்றையடிப்பாதையின்
  குறுக்குச் சுவர்
  மரணங்கள் !****

  VERY NICE SIR , I’AM ONE OF YOUR FANE. KEEP IT UP. ALL THE BEST.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.