கவிதை : ஒரே ஒரு மின்னஞ்சல்…

 

ஆவலின் ஆயுள்கைதியாய்
இன்னும்
ஜன்னல்கள் திறக்காத
பாதாளச் சிறைக்குள்
நான்.

உன்
கணிப் பொறிக் கடிதம்
கை நீட்டுமென்று
நான்
தோண்டி எடுத்து வைத்திருந்த
நம்பிக்கைகளின் நகங்களும்
பாசி பிடித்துத் தான்
போய்விட்டன.

ஆனாலும் என்
கணிப்பொறிக் கதவுகளை
தினசரிக் கடமையாய்
திறந்து பார்க்கத்
தவறுவதே இல்லை.

உன் விரல்கள் வந்து
சத்தமிடாமல் தட்டினாலும்
திறக்க வேண்டுமென்றே
கண்களில்
கதவுகளை நட்டிருக்கிறேன்.

புள்ளிமானே,
என் முகவரியில் ஏதேனும்
புள்ளிகளைத் தொலைத்தாயோ ?

பட்டத்தில் வால் பார்த்து
உள்ளங்கை உதறி
நூல் தொலைத்தாயோ ?

இல்லை
என் முகத்துக்கான
முகவரியையே
தொலைத்து விட்டாயோ ?

ஆற்றுக்குள் விழுந்து விட்ட
அயிரை மீனின்
பெயர் மறந்து போய்விட்டதோ ?

கேள்விச் சாவிகளோடு தான்
கதவுகள் இல்லா
மதில் சுவர் திறக்க
துவாரம் தேடித் திரிகிறேன்.

யாராரோ வந்து
ஏதேதோ எறிந்து விட்டுப்
போகும் என்
இணையக் கடிதக் கூடையில்
இன்னும் உன்
சாமந்திப் பூ மட்டும் வந்து
சேரக் காணோம்.

அந்த வாசம் இல்லாததாலோ
என்னவோ,
பெரு மலையாய் கிடக்கும்
கடிதக் கட்டுகளிலெல்லாம்
வெறும் சுடுகாட்டு வாசனை.

22 comments on “கவிதை : ஒரே ஒரு மின்னஞ்சல்…

  1. நன்றி நண்பரே. 🙂 உங்களுக்கு நல்ல நினைவாற்றல் !! நான் சுத்தம். என் கவிதையை நானே மறந்து விடுவேன். 😉

    Like

  2. நண்பர் சேவியருக்கு ,

    என்னை விசாரித்த கவிஞர் புகாரியின் அன்பிற்கு மிகப் பெரிய நன்றியை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.

    “தாலி வாங்கினால்
    பொண்டாட்டி இலவசம் ”

    “இங்கே ஒரு தமிழனைக் கண்டு தமிழில் பேசும் போது தான் பேரானந்தம் அடைகிறேன்”

    மிகச் சிறப்பான அந்த வரிகளை அவருடைய புத்தக விமர்சனத்தில் நீங்கள் சுட்டிக் காட்டி எழுதி இருந்தது இன்றளவும் பசுமையாக நினைவில் உள்ளது. என்ன பின்னூட்டம் தான் இடவில்லை ! 😉

    நட்புடன்
    குகன்

    Like

  3. //இங்காவது என்னைப் பாராட்டினீர்களே! நன்றி அண்ணா.
    //

    உண்மையிலேயே உங்கள் கவிதைகளை மிகவும் ரசிக்கிறேன். ஆனால் பின்னூட்டம் போட முடியாத அளவுக்கு தளம் ஸ்லோவாக இருக்கிறது. அலுவலகம் வீடியோ, ஆடியோ, பிளாஷ் எல்லாம் இருந்தால் திறக்காது. அதனால் கூட இருக்கலாம் !

    Like

  4. சத்தியமாக கிண்டலோ கேலியோ இல்லை உண்மையாக.
    இங்காவது என்னைப் பாராட்டினீர்களே! நன்றி அண்ணா.

    Like

  5. //கவிதைக்கேற்ற புகைப்படம்
    மிகவும் ரஸித்தேன்//

    பாராட்டுகள் படம் எடுத்தவரையும், படத்தில் இருப்பவரையும் சென்று சேரக் கடவது 🙂

    Like

  6. //அடர்ந்த மரம் நிறைந்த காட்டின் பாதையில் நடக்கையிலே , வழி மறந்து போகும் யாத்ரிகனைப் போல கவிதையின் கற்பனைச் செழுமையில் என்னை மறந்தேன்//

    ஆஹா.. வழக்கம் போலவே அருமையான கவிதைப் பின்னூட்டம்.

    //
    எந்த புத்தகம் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறது “ஆவலின் ஆயுள்கைதியாய்” ” நம்பிக்கைகளின் நகங்களும்” போன்ற வார்த்தை பிரயோகங்களை ?//

    பாராட்டுக்கு நன்றி 🙂

    //

    புள்ளிமானே,
    என் முகவரியில் ஏதேனும்
    புள்ளிகளைத் தொலைத்தாயோ ?

    பிழையான மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விட்டாளோ , காதலி ? .. அருமை !!!!!!!!!!!

    பெரு மலையாய் கிடக்கும்
    கடிதக் கட்டுகளிலெல்லாம்
    வெறும் சுடுகாட்டு வாசனை.”

    “நான்
    தோண்டி எடுத்து வைத்திருந்த
    நம்பிக்கைகளின் நகங்களும்
    பாசி பிடித்துத் தான்
    போய்விட்டன ”

    “இணையக் கடிதக் கூடையில்
    இன்னும் உன்
    சாமந்திப் பூ மட்டும் வந்து
    சேரக் காணோம்.”

    எண்ணிக்கை தொலைத்து மீண்டும் மீண்டும் படிக்க கட்டளை இட்டவை மேல் எழுதிய வரிகள் !!!!!!

    // நன்றி நன்றி குகன். கவிதையை ஆழமாய் ரசிக்கும் நண்பர்கள் இருக்கும் போது எழுதுவது ஒரு சுகம். நேற்று நண்பர் புகாரியுடன் பேசிக்கொண்டிருந்தேன். உங்களைப் பற்றி மிகவும் பெருமையாய் குறிப்பிட்டார். 🙂

    வாழ்த்துக்கள் சேவியர்!!!!!!!!!!!!!!!!!!!!!!

    //

    Like

  7. //எனக்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை.ஒரு ஈமெயிலில் வரும் கடிதத்திற்கு இப்படி ஒரு கவிதை.அதற்காக இத்தனை கற்பனை வரிகள்.நினைக்கவே அதிசயமா இருக்கு. பொறாமையாவும் இருக்கு.//

    நன்றி ஹேமா… மடைதிறந்து வழியும் நீர் என மனம் திறந்து வழியும் உங்கள் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    //எனக்கு வர மாட்டேன் என்கிறதே!!!!எப்படி அண்ணா !!!தமிழை உரித்தெடுத்து வருகிண்ற வர்ணணை வரிகள்.//

    இந்த கிண்டல் தானே வேணாங்கிறது. தங்கச்சி… எவ்ளோ அழகா எழுதறீங்க நீங்க…

    Like

  8. கவிதைக்கேற்ற புகைப்படம்
    மிகவும் ரஸித்தேன்

    Like

  9. படைப்பாளி சேவியருக்கு ,

    அடர்ந்த மரம் நிறைந்த காட்டின் பாதையில் நடக்கையிலே , வழி மறந்து போகும் யாத்ரிகனைப் போல கவிதையின் கற்பனைச் செழுமையில் என்னை மறந்தேன் .
    எந்த புத்தகம் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறது “ஆவலின் ஆயுள்கைதியாய்” ” நம்பிக்கைகளின் நகங்களும்” போன்ற வார்த்தை பிரயோகங்களை ?

    புள்ளிமானே,
    என் முகவரியில் ஏதேனும்
    புள்ளிகளைத் தொலைத்தாயோ ?

    பிழையான மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விட்டாளோ , காதலி ? .. அருமை !!!!!!!!!!!

    பெரு மலையாய் கிடக்கும்
    கடிதக் கட்டுகளிலெல்லாம்
    வெறும் சுடுகாட்டு வாசனை.”

    “நான்
    தோண்டி எடுத்து வைத்திருந்த
    நம்பிக்கைகளின் நகங்களும்
    பாசி பிடித்துத் தான்
    போய்விட்டன ”

    “இணையக் கடிதக் கூடையில்
    இன்னும் உன்
    சாமந்திப் பூ மட்டும் வந்து
    சேரக் காணோம்.”

    எண்ணிக்கை தொலைத்து மீண்டும் மீண்டும் படிக்க கட்டளை இட்டவை மேல் எழுதிய வரிகள் !!!!!!

    வாழ்த்துக்கள் சேவியர்!!!!!!!!!!!!!!!!!!!!!!

    நட்புடன்
    குகன்

    Like

  10. எனக்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை.ஒரு ஈமெயிலில் வரும் கடிதத்திற்கு இப்படி ஒரு கவிதை.அதற்காக இத்தனை கற்பனை வரிகள்.நினைக்கவே அதிசயமா இருக்கு. பொறாமையாவும் இருக்கு.எனக்கு வர மாட்டேன் என்கிறதே!!!!எப்படி அண்ணா !!!தமிழை உரித்தெடுத்து வருகிண்ற
    வர்ணணை வரிகள்.

    Like

  11. //சேவியர்,

    அருமையான கவிதை. எல்லா வரிகளும் பிரமாதம்.

    அனுஜன்யா
    //

    நன்றி அனுஜன்யா

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.