கவிதை : புரட்டாத பக்கங்களிலிருந்து

மெல்லிய ஒரு காலைப் பொழுதில்
மெல்லிசையாய்  சொன்னாய்.
நீ என் உலகம்
திசைகளில் எரியும் தீபம்.

திக்குத் தெரியாத திகைப்பில்
திளைக்க வைத்த வார்த்தைகள் அவை.

நீ
இல்லையேல் எனக்குள் நான்
இளைப்பாற இயலாது,
உனக்குள் நீ உட்கார முடியாது என்றாய்
மழை நின்ற ஈரத்தில்
ஓர் மத்தியான நேரத்தில்.

மனசு
நிரப்பப்பட்ட நிமிடங்கள் அவை.

சாயங்கல வேளையில்
சந்தித்த போது,
இழப்பேன்,
உனக்காய் நான் எதையும் இழப்பேன்
தோளுரசிச் சொன்னாய்.

இதயங்கள் முடிச்சிட்டு
மாலைகள் பல மறைந்தபின்
ஓர் கடிதம் எழுதிக் கேட்கிறாய்,
நம் காதலைத் தொடரத்தான் வேண்டுமா ?

ஆம் என்பதே என் பதில் என்பது
உனக்கேத் தெரியும்.
ஆனாலும்
‘இல்லை’ என்றே பதில் எழுதுகிறேன்
அதே காதலுடன்.

13 comments on “கவிதை : புரட்டாத பக்கங்களிலிருந்து

  1. //உங்கள் வாசிப்பு அனுபவம் விரிவானது,//
    என்னை அடிக்கொரு முறை மிகப் பெரிய மனிதன் ஆக்கி விடுகிறீர்கள் நீங்கள் !!! 🙂
    //ஒரு தளத்தை ஆரம்பித்து உங்கள் பார்வைகளை மற்றவர்களுக்கும் பகிரலாமே //
    அதை உங்கள் படைப்புகளுக்கு மறுமொழி இடுவதன் மூலம் இப்போதே செய்து வருகிறேன் !!!!!!!!! 😉

    Like

  2. உங்கள் வாசிப்பு அனுபவம் விரிவானது, ஒரு தளத்தை ஆரம்பித்து உங்கள் பார்வைகளை மற்றவர்களுக்கும் பகிரலாமே 🙂

    //ஆனால் உங்கள் வலைத்தளத்தின் படைப்புகளை தவறாமல் வாசித்து முடிந்த மட்டும் பின்னூட்டம் இடும் வழக்கம் மட்டும் இருக்கிறது

    //

    பெருமைப்படுத்தியமைக்கு நன்றிகள் 🙂

    Like

  3. எனக்கென வலைத்தளம் ஏதும் இல்லை ,சேவியர் !!!!!!!!!!!!!
    ஆனால் உங்கள் வலைத்தளத்தின் படைப்புகளை தவறாமல் வாசித்து முடிந்த மட்டும் பின்னூட்டம் இடும் வழக்கம் மட்டும் இருக்கிறது. 🙂

    Like

  4. கவிதையை ஆழமாய் ரசித்தமைக்கு நன்றி குகன்.
    மனமார்ந்த நன்றிகள் 🙂

    நீங்கள் வலைத்தளம் வைத்திருக்கீறீர்களா ?

    Like

  5. கவிஞர் சேவியருக்கு,

    காதலி மீது காதலன் வைத்திருந்த நம்பிக்கைக்கு குண்டு வைக்கிறாள் . வெடித்து சிதறுகிறது துகள்களாய் அவன் இதயக் கண்ணாடி. அந்த துகள்கள் கூட அவளைக் காயப்படுத்தாது அவள் விரும்பிய சிறகுகளை பரிசளித்து விடுகிறான் . இது தான் காதலின் உன்னத நிலையோ ?

    வியக்க வைக்கிறீர்கள் , சேவியர் !!!!!!!

    அன்புடன்
    குகன்

    Like

  6. //பெரும்பாலான காதல்களில் “இல்லை” என்பது தான் பதிலாக இருந்திருக்கும்//

    ஒரு புறம் இல்லை என்றும், மறுபுறம் ஆம் என்பதும் தான் பெரும்பாலான பதிலாய் இருக்கும். ஏதோ ஒரு பக்கத்து முடிவு மாறித் தான் ஆகவேண்டும். இல்லாத இடத்தில் முட்டி மோதுவதை விட இருக்கும் இடத்தில் இல்லை என்று கற்பித்துக் கொள்வது சாலச் சிறந்ததில்லையா ?

    Like

  7. //என்ன ஆனது திடீரென்று…. சபலம் …சஞ்சலம்…
    மனம் குரங்காய்த் தாவுகிறதோ…
    இல்லை குழம்புகிறதோ!!!!

    //

    சலனம் சஞ்சலம் சபலம்… காதலுடன் கலந்தே வாழும் போல…
    எப்போதேனும் நேரம் கிடைத்தால் இதைப் படியுங்கள் https://xavi.wordpress.com/2008/02/14/salanam/

    Like

  8. ///நம் காதலைத் தொடரத்தான் வேண்டுமா ?///

    இந்தக் கேள்வி வராத காதலே இருக்க முடியாது என்று தான் நினைக்கிறேன். பெரும்பாலான காதல்களில் “இல்லை” என்பது தான் பதிலாக இருந்திருக்கும். ஆனால் ஆமென்று சொல்லும் போது இருக்கக் கூடிய காதல் இல்லை என்று சொல்லும்போதும் இருக்குமா என்பது தான் சந்தேகம். இருக்குமேயானால் அந்தக் காதல் …

    Like

  9. என்ன ஆனது திடீரென்று…. சபலம் …சஞ்சலம்…
    மனம் குரங்காய்த் தாவுகிறதோ…
    இல்லை குழம்புகிறதோ!!!!

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.