கவிதை : முதுமை வலிகள்

இமைகளை இழுத்துப் பிடித்து
தறி அறைந்திருப்பதுபோலவும்,
இமையின் மயிற்கால்கள் எல்லாம்
பூமி பிளந்து பாய்ந்திருக்கும் நங்கூரம் போலவும்
பாரமாய்த் தோன்றுகிறது
ஒவ்வோர் காலைப் பொழுதுகளிலும்.

இந்த பாழாய்ப்போன மூட்டுவலி
கால்களைக் கட்டிக்கொண்டு நகர மறுக்கிறது.
பல்தேய்க்கும் முன்பே கால்களில்
தைலம் தேய்க்கும் காலம் எனக்கு.

முதுகெலும்பின் அடுக்குகளெங்கும்
அடுக்கடுக்காய் வலி நரம்புகள்
வரிந்து சுற்றப்பட்டிருக்கின்றன.

மெதுவாய்த்தான் நகர முடிகிறது
பாதங்களில் மேல்நோக்கி
அறையப்பட்டிருக்கின்றன ஆணிகள்.

உட்கார்ந்தால் எழும்புவதற்கும்
எழுந்தால் உட்கார்வதற்கும்
இடுப்போடு நான்
இன்னொரு உடன்படிக்கை
இடவேண்டி இருக்கிறது.

வேப்பமரத் தைலமும்,
முருங்கைக்கீரை சாறும் தான்,
இன்னும்
இழுத்துப் பிடித்திருக்கின்றன என் உயிரை.

எல்லா வேதனைகளும்
ஒன்றுடன் ஒன்று
சண்டையிட்டுக்கொண்டிருக்கும் போது,
தொலைபேசி ஒலிக்கும்.

நலமா எனும் தொலைதூர மகனின்
விசாரிப்புக் குரலுக்கு
பரம சுகம் என
பட்டென்று என் வாய் பதில் சொல்லும்.

அவனுடைய சின்னச் சின்ன
வருத்தங்களுக்காய்
மனதின் மத்தியில்
புதிது புதிதாய் வலிகள் முளைக்கும்.

Advertisements

14 comments on “கவிதை : முதுமை வலிகள்

 1. எங்கள் ஊர் வயது போனவர்கள்,எங்கள் அப்பா அம்மா ஒரளவு கொடுத்து வைத்தவர்கள் அண்ணா.பாதை போட்டு எங்களை அனுப்புவிட்டு பாதையோரம் காத்திருக்கும் அன்புச் செல்வங்கள் எங்கள் பெற்றோர்.இங்கு வயாதனவர்களைப் பார்க்க எனக்கு சரியான பாவமாயிருக்கும்.

  Like

 2. //பாதை போட்டு எங்களை அனுப்புவிட்டு பாதையோரம் காத்திருக்கும் அன்புச் செல்வங்கள் எங்கள் பெற்றோர்//

  உங்கள் பெற்றோர் பாசம் வரிகளில் தெரிகிறது.

  Like

 3. //நலமா எனும் தொலைதூர மகனின்
  விசாரிப்புக் குரலுக்கு
  பரம சுகம் என
  பட்டென்று என் வாய் பதில் சொல்லும்.
  //
  எங்க வீட்டிலும் இதே பதில் தான்.
  ஆனாலும் பிள்ளைக்கு தெரியாதா பெற்றோரின் மனது?

  Like

 4. //நலமா எனும் தொலைதூர மகனின்
  விசாரிப்புக் குரலுக்கு
  பரம சுகம் என
  பட்டென்று என் வாய் பதில் சொல்லும்.

  அவனுடைய சின்னச் சின்ன
  வருத்தங்களுக்காய்
  மனதின் மத்தியில்
  புதிது புதிதாய் வலிகள் முளைக்கும்.
  //

  அற்புதமான வரிகள் சேவியர்,

  பெற்றோருக்கும் ,அவர்களை விட்டு
  வெளி நாட்டில்/வெளி ஊரில்
  அவர்கள் நினைவில் வாழும் என்னை போன்ற
  அனைவருக்கும் இந்த வலி ரொம்ப கொடுமை.

  Like

 5. /அற்புதமான வரிகள் சேவியர்,

  பெற்றோருக்கும் ,அவர்களை விட்டு
  வெளி நாட்டில்/வெளி ஊரில்
  அவர்கள் நினைவில் வாழும் என்னை போன்ற
  அனைவருக்கும் இந்த வலி ரொம்ப கொடுமை.

  //

  நன்றி முகுந்தன். கவிதைக்கு மெய் அழகு !! 🙂

  Like

 6. முதுமையின் வலிகளை அற்புதமாக எழுதியுள்ளீர்கள்…அதிலும் பிள்ளைகள் தொலை தூரத்தில் வசிப்பது பெரிய வலி என்பதை கடைசி வரிகள் மூலம் நச்சென்று சொல்லியுள்ளீர்கள்.

  பாராட்டுக்கள்…

  நித்தில்

  Like

 7. //நலமா எனும் தொலைதூர மகனின்
  விசாரிப்புக் குரலுக்கு
  பரம சுகம் என
  பட்டென்று என் வாய் பதில் சொல்லும்//

  அனாதை பெற்றோர்கள்……….. பாவம் வேறென்ன சொல்ல முடியும்?
  (கொஞ்சம் வலியுடனே இந்த வார்த்தைப் பிரயோகம்…)

  Like

 8. அன்புள்ள சேவியருக்கு,

  கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ஒரு முறை மிகப் பிரம்மண்டாமான கூட்டம் நிறைந்த வெளிநாட்டு வாழ் தமிழர்களைச் சந்தித்து பேசுகையில் சொன்ன வரி ஒன்று நினைவுக்கு வந்தது. ” பணம் தேடும் வேட்டைக் காட்டில் உங்கள் இருதயம் இறுகிப் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ” அந்த வரிகளை மறுமுறை அடிக்கோடிட்டு காட்டியது மனது இந்த கவிதையைப் படிக்கையில்.

  நட்புடன்
  குகன்

  Like

 9. வருகைக்கும், பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள் குகன்.

  கவிப்பேரரசு வரிகள் அசத்தல்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s