கவிதை : பழைய இலைகள்

 

ஏதேனும் வேண்டும் என்றால்
என் கரம் கோர்த்து
புருவங்களைப் பிதுக்கி கண்களால் கேட்பாய்.
உன் உதட்டில்
பிரமிப்பின் புன்னகையைப் பிடித்து வைக்க
எனக்குப் பிடிக்காததையும் வாங்கித்தருவேன்.

யாருமே இல்லாத மாலைப்பொழுதுகளில்
சீண்டாதீர்கள் என்று சிணுங்குவாய்.
முரணாய்ப் பேசி முரண்டு பிடிப்பாய்,
புரிந்துகொண்டு
முத்தமிட்டு மூச்சுப்பெறுவேன்.

கால்வலிக்கிறது என்பாய்.
கண்ணில் தூசி என்பாய்.
புதிதாய் வாங்கிய மாலையைப் பார் என்பாய்.
நமக்கிடையே இருக்கும்
இடைவெளியைக் குறைக்க
நீ இடும் அறிக்கைகள் இவையென்றறிந்து,
காற்று காயம் படும் இறுக்கத்தில்
கட்டிக் கொள்வேன்.

இப்போதும்
மங்கலாய்க் கசியும் நினைவிடுக்குகளில்
உன் குரல் கேட்காமலில்லை.

‘மாறிவிட்டேன்’ என்ற ஒற்றைச்சொல்லில் என்னை
தூக்கிலிடும் முன், என்
கடைசி ஆசையை மட்டும்
நீ கேட்கவேயில்லை.

கேட்டாலும் சொல்வதற்கு என்ன இருக்கிறது
நீ – எனும் சொல்லைத் தவிர.

Advertisements

7 comments on “கவிதை : பழைய இலைகள்

 1. அடடே… என்ன அருமையா இருக்கு…. ஆனா ஒன்னு… கோபிக்க வேண்டா… காதல் கவிதைகள் கடைசியில் சோகமாய் முடிவதை கொஞ்சம் தடுக்கலாம் 🙂

  Like

 2. கவிஞர் சேவியருக்கு ,

  “முத்தமிட்டு மூச்சுப்பெறுவேன். ”
  படிக்கும் போதே மூச்சு வாங்குகிறது 🙂

  “காற்று காயம் படும் இறுக்கத்தில்
  கட்டிக் கொள்வேன்.”

  என்ன ஒரு கற்பனை !!!!!!!!!!!!! அருமை !!!!!

  மேற்சொன்ன நண்பர் கூறியபடி, இயக்குனர் பாலா பட முடிவுக்கு பதிலாய் ஒரு கவிதைக்கேனும் மனம் மாறாத காதலி உண்டு என்று எனச் சொல்லி காதலிக்கும் மக்களை தெம்பூட்டலாமே !!!!!!!!!!!!
  🙂

  நட்புடன்
  குகன்

  Like

 3. நன்றி குகன்.

  உண்மையில் நான் எழுதிய காதல் கவிதைகளில் சில மட்டுமே சோகத்தில் முடிகின்றன 😉

  Like

 4. hi,
  just now i got a chance to go through ur website..i excited..wht a poems..wht a lines????…..i like ur lines very very much……..really all r very very good….keep it up…

  Like

 5. பிரபு. மனமார்ந்த நன்றிகள். இத்தனை ஆத்மார்த்தமான வெளிப்படையான பாராட்டு கிடைப்பது ஒரு வரம் 🙂 நன்றி வருகைக்கும், பாராட்டுக்கும்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s