கவிதை : டி-ஷர்ட் வாசகங்கள்

ஆபாசங்களின் வரைபடமாய்
வாசகங்கள்
சட்டைகளின் முதுகிலும், நெஞ்சிலும்.

மோகத்தின் அத்தனை
அறைகளையும் திறந்து வைக்கும்
வாசகங்கள்,

கலாச்சாரத்தின் கழுத்தையும்
சமுதாய சமாதானத்தின் சங்கையும்
ஒருசேர நசுக்கும்
வாசகங்கள்,

வன்முறையாய் கண் இழுத்து
வாலிபத்தை வதைக்கும் வாசகங்கள்.

மஞ்சள் வாசனையில்
பச்சை வாசகங்கள்.

பதின் வயதுப் பூக்களெல்லாம்
இப்போது
அமிலங்களுக்கு மட்டுமே
அழைப்பு அனுப்புகின்றன.

பாவத்தின் மாநாட்டுக்கான
சாத்தானின்
விளம்பரச் சுவர்களாகி விட்டன
வாலிப ஆடைகள்.

நவீன கலாச்சார நகரின்
அத்தனை கடைகளிலும்
நல்ல வாசக சட்டைகளைத் தேடித் தேடி
கண்களும் கைகளும் அழுக்காகி விட்டன.

அகத்தின் அழகு
இனிமேல்
சட்டையில் தெரியுமோ ?

30 comments on “கவிதை : டி-ஷர்ட் வாசகங்கள்

  1. மிகச் சரியாக வந்திருக்கிறது,சேவியர்.டி ஷர்ட் இளைஞர்களின் கோபத்துக்கு இனி ஆளாக மாட்டீர்கள் !!!!!!!!!! 🙂

    Like

  2. //பாவத்தின் மாநாட்டுக்கான
    சாத்தானின்
    விளம்பரச் சுவர்களாகி விட்டன
    வாலிப ஆடைகள்//

    மிக்க நன்றி சேவியர் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! 🙂

    அன்புடன்
    குகன்

    Like

  3. //அங்கு ஒரு ஐந்து அல்லது ஆறாம் வகுப்பு படிக்கும் பெண்ணும், அம்மாவும் வந்திருந்தார்கள். அளவு எடுக்கும் போது அந்த பெண் “அம்மா இவ்வளவு லோ கட் வேண்டாம்” என்று கூறுகிறாள்.
    அந்த அம்மா “லோ கட் தாண்டி நன்றாகயிருக்கும் ” என்று அரட்டுகிறாள்//

    என்ன கொடுமை சரவணன் இது !!!

    Like

  4. /கவிதையின் வரிகள் அமைப்பு அருமை வாழ்த்துக்கள்.

    //

    வருகைக்கு நன்றி விஜய். உங்கள் தளம் அருமையாக இருக்கிறது !

    Like

  5. //அந்த பதிமூன்று முதல் இருவது வரையிருக்கும் அசட்டுத்தனமானத் துடிப்பின் வெளிப்பாடு; பின் 20திலுருந்து 30வரை வாரத்தைகளை அறிந்தே அணியும் கொள்கைப் பலகைகளாக திகழ்கிறது//

    பளிச் !!!

    Like

  6. இதற்கு காரணம் பெரும்பாலும் பெற்றோர்கள தான் என்பது என்னுடைய கருத்து.
    சின்ன வயதிலேயே, கண்ராவியான ட்ரெஸ் கோடுக்கு பழக்கியவர்கள் அவர்கள் தான்.
    ஒரு நாள் தையல் கடைக்கு போயிருந்தேன். அங்கு ஒரு ஐந்து அல்லது ஆறாம் வகுப்பு படிக்கும் பெண்ணும், அம்மாவும் வந்திருந்தார்கள். அளவு எடுக்கும் போது அந்த பெண் “அம்மா இவ்வளவு லோ கட் வேண்டாம்” என்று கூறுகிறாள்.
    அந்த அம்மா “லோ கட் தாண்டி நன்றாகயிருக்கும் ” என்று அரட்டுகிறாள்.

    என்னத்த சொல்ல

    Like

  7. நாகரிக உலகில் எல்லாம் ஹைடெக் ஆயிடுச்சு

    நாளும் புதுப்புது கண்டுபிடிப்பு என்பது பேச்சு

    நான் செய்வதே சரியென வாதிடும் கட்ச்சி

    நான்கு திசைஎங்கும் ஆடையிலே புரட்ச்சி

    என்று திருந்தும் இப்போக்கு !

    கவிதையின் வரிகள் அமைப்பு அருமை வாழ்த்துக்கள்.

    ( ,கலாச்சார சீரழிவை எதிர்த்து ஒரு தர்ம யுத்தம்)

    தி.விஜய்
    http://pugaippezhai.blogspot.com

    please visit my blog.

    கடுப்படிக்கும் கச்சா எண்ணெய்! மர்ம-முடிச்சு அவிழ்கிறது… 47 மறுமொழிகள் | விஜய் | கச்சா எண்ணெய்

    வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 31 மறுமொழிகள் | விஜய்

    அண்ணே! நீங்க மனசு வைச்சா இந்த பெட்ரோல் விலையை குறைச்சுடலாம்.அண்ணே 60 மறுமொழிகள் | விஜய்

    “என்னை வளர்த்த மனிதா, உன்னை அளிப்பேன் எளிதாய்” 34 மறுமொழிகள் | விஜய்

    Like

  8. அந்த பதிமூன்று முதல் இருவது வரையிருக்கும் அசட்டுத்தனமானத் துடிப்பின் வெளிப்பாடு; பின் 20திலுருந்து 30வரை வாரத்தைகளை அறிந்தே அணியும் கொள்கைப் பலகைகளாக திகழ்கிறது டி-ஷர்ட்டுகள். அதுக்கு மேலே எனக்கு அனுபவமில்லை. என்னை சமீபத்தில் திரும்பி பார்க்க வைத்த ஒரு சின்ன டி-ஷர்ட் வாசகம்: “Dolphins are gay whales’ :O

    Like

  9. //அன்புள்ள சேவியருக்கு,

    “பாவத்தின் மாநாட்டுக்கான
    சாத்தானின்
    விளம்பரச் சுவர்களாகி விட்டன
    வாலிபர்களின் ஆடைகள்.”

    என்ன சேவியர் , இளசுகளின் ஆடைகள் என்று சொல்லாமல் ஏவுகணை தாக்குதலை ஆண்கள் பக்கம் நடத்தி விட்டீர்கள் ? //

    அட ஆமா ! யாரையும் தனிப்பட்ட விதத்தில் சொல்வது தவறு தான் 🙂 ஒரு சிறு மாற்றம் செய்துள்ளேன். மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு 🙂

    //
    தாங்கள் இணைய இதழ் ஒன்றுக்கு எழுதி இருந்த கழிப்பறை பற்றிய கவிதையில்,” ஆடையற்ற மனதின் நிர்வாண கிறுக்கல்கள் அரங்கேறும்” என்று எழுதி இருப்பதாக லேசான நினைவு . //

    உங்க நினைவாற்றலுக்கு ஒரு நன்றி. உண்மையில் எனக்கு வரிகள் மறந்து விட்டன 🙂

    //
    அகத்தின் அழகு
    இனிமேல்
    சட்டையில் தெரியுமோ ?

    மிகச் சிறப்பு !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    //

    நன்றி… நன்றி 🙂

    Like

  10. /பாத்துங்கண்ணோ, நீங்க டி-ஷர்ட் தேடுறத யாராவது தப்பா புரிஞ்சுக்கிட்டு மூஞ்சி மொகரை எல்லாம் அழுக்காக்கிறப் போறாங்கண்ணோவ்…. இனிமே ஒரு கூலிங் கிலாஸ மாட்டிக்கிட்டு தேடுங்க…

    //

    அணியப்படாத ஆடையைத் தேடும் பழக்கம் மட்டுமே எனக்கு தம்பி.. அதுக்கு கண்ணாடி தேவையில்லை 🙂 கண்ணே போதும். 😀

    Like

  11. //உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கு சேவியர் அண்ணா.
    சொன்னா எங்களையே உதைக்க வருதுங்க கழுதைங்க கூட்டம்.எங்களுக்கு நாகரீகம் தெரியாதாம்.நீங்களும் கில்லாடிதான் டி-ஷர்ட் போட்டவங்களை நல்லாவே ரசிச்சு இருக்கிங்க.(சும்மா கிண்டலுக்கு)எப்பவும் போல கவிதை சூப்பர்ர்ர்ர்.

    //

    நன்றி ஹேமா 🙂

    Like

  12. அன்புள்ள சேவியருக்கு,

    “பாவத்தின் மாநாட்டுக்கான
    சாத்தானின்
    விளம்பரச் சுவர்களாகி விட்டன
    வாலிபர்களின் ஆடைகள்.”

    என்ன சேவியர் , இளசுகளின் ஆடைகள் என்று சொல்லாமல் ஏவுகணை தாக்குதலை ஆண்கள் பக்கம் நடத்தி விட்டீர்கள் ?
    தாங்கள் இணைய இதழ் ஒன்றுக்கு எழுதி இருந்த கழிப்பறை பற்றிய கவிதையில்,” ஆடையற்ற மனதின் நிர்வாண கிறுக்கல்கள் அரங்கேறும்” என்று எழுதி இருப்பதாக லேசான நினைவு . அது வேண்டுமானால் ஒத்துக் கொள்ளலாம். ஆண்கள் டி ஷிர்டிலும் எழுத்துக்கள் இருக்கலாம் . அவை நகைச் சுவையாக இருக்குமே ஒழிய, பெண்கள் டி ஷர்ட் அளவுக்கு மோசமானவையாக இருக்காது. எனினும் அட்டைப் படம் பெண்ணுடயதாய் போட்டு இருப்பதனால் ” ஆண்கள் இந்த குழிக்குள் விழவில்லை ” என்று நீங்கள் சொன்னதாக எடுத்துக் கொள்கிறேன். 🙂

    அகத்தின் அழகு
    இனிமேல்
    சட்டையில் தெரியுமோ ?

    மிகச் சிறப்பு !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    நட்புடன்
    குகன்

    Like

  13. பாத்துங்கண்ணோ, நீங்க டி-ஷர்ட் தேடுறத யாராவது தப்பா புரிஞ்சுக்கிட்டு மூஞ்சி மொகரை எல்லாம் அழுக்காக்கிறப் போறாங்கண்ணோவ்…. இனிமே ஒரு கூலிங் கிலாஸ மாட்டிக்கிட்டு தேடுங்க…

    Like

  14. வாழ்த்துகள் . . .
    “Beauty Is in the Eye of the Beer Holder

    “Growing Old Is Mandatory – Growing Up Is Optional”

    இவை 2002 ல் T.Shirt வாசகங்கள் !

    Like

  15. உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கு சேவியர் அண்ணா.
    சொன்னா எங்களையே உதைக்க வருதுங்க கழுதைங்க கூட்டம்.எங்களுக்கு நாகரீகம் தெரியாதாம்.நீங்களும் கில்லாடிதான் டி-ஷர்ட் போட்டவங்களை நல்லாவே ரசிச்சு இருக்கிங்க.(சும்மா கிண்டலுக்கு)எப்பவும் போல கவிதை சூப்பர்ர்ர்ர்.

    Like

  16. ////அகத்தின் அழகு
    இனிமேல்
    சட்டையில் தெரியுமோ ?//

    இதை உணர்ந்துவிட்டால் நல்ல வாசகங்கள் உள்ள சட்டையைத் தேடுவார்கள்….
    அன்புடன் அருணா
    //

    வருகைக்கும் , பின்னூட்டத்துக்கும் நன்றிகள் .:)

    Like

  17. /சேவியர், அருமையான வார்த்தைப் பிரயோகங்கள். வாழ்த்துக்கள்.

    அனுஜன்யா

    //

    நன்றி அனுஜன்யா 🙂

    Like

  18. //அகத்தின் அழகு
    இனிமேல்
    சட்டையில் தெரியுமோ ?//

    இதை உணர்ந்துவிட்டால் நல்ல வாசகங்கள் உள்ள சட்டையைத் தேடுவார்கள்….
    அன்புடன் அருணா

    Like

  19. ////நவீன கலாச்சார நகரின்
    அத்தனை கடைகளிலும்
    நல்ல வாசக சட்டைகளைத் தேடித் தேடி
    கண்களும் கைகளும் அழுக்காகி விட்டன.//

    என்ன மாதிரிலாம் குஜால்ஸ் சட்டை இடுக்குனு கடைக் கடையா தேடிட்டு… கை அழுக்காயிடுச்சாம்… நான் நம்புகிறேன்…
    //

    ம்ம்… உட்டா… நல்ல வாசகம் இருக்கிற சட்டையைத் தொட்டதாலதான் அழுக்காச்சுன்னும் சொல்லுவீங்களே 😉

    Like

  20. //நவீன கலாச்சார நகரின்
    அத்தனை கடைகளிலும்
    நல்ல வாசக சட்டைகளைத் தேடித் தேடி
    கண்களும் கைகளும் அழுக்காகி விட்டன.//

    என்ன மாதிரிலாம் குஜால்ஸ் சட்டை இடுக்குனு கடைக் கடையா தேடிட்டு… கை அழுக்காயிடுச்சாம்… நான் நம்புகிறேன்…

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.