கவிதை : அம்மா

அம்மா.
உன்னை உச்சரிக்கும் போதெல்லாம்
எனக்குள்
நேசநதி
அருவியாய் அவதாரமெடுக்கிறது.

மழலைப் பருவத்தின்
விளையாட்டுக் காயங்களுக்காய்
விழிகளில் விளக்கெரித்து
என்
படுக்கைக்குக் காவலிருந்தாய்.

பசி என்னும் வார்த்தை கூட
நான் கேட்டதில்லை
நீ
பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் .

என் புத்தகச் சுமை
முதுகை அழுத்தி அழுதபோது
செருப்பில்லாத பாதங்களேடு
இடுப்பில் என்னை
இரண்டரை மைல் சுமந்திருக்கிறாய்.

அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில்
அன்பின் அகராதியை எனக்கு
அறிமுகப் படுத்தியது
என் தலை கோதிய உன் விரல்களல்லவா ?

எனது சிறு சிறு வெற்றிகளுக்கு
கோப்பைகள் கொடுத்தது
உனது
இதயத் தழுவலும்
பெருமைப் புன்னகையுமல்லவா ?

வேலை தேடும் வேட்டையில்
நகர நெரிசல்களில் கீறல் பட்ட போது
ஆறுதல் கரமானது
உனது ஆறுவரிக் கடிதமல்லவா ?

எனக்கு வேலை கிடைத்தபோது
நான் வெறுமனே மகிழ்ந்தேன்
நீதானே அம்மா
புதிதாய்ப் பிறந்தாய் ?

உனக்கு முதல் சம்பளத்தில்
வாங்கித்தந்த ஒரு புடவையை
விழிகளின் ஈரம் மறைக்க
கண்களில் ஒற்றிக் கொண்டாயே
நினைவிருக்கிறதா ?

இப்போதெல்லாம்
என் கடிதம் காத்து
தொலை பேசியின் ஒலிகாத்து
வாரமிருமுறை
போதிமரப் புத்தனாகிறாய்
வீட்டுத் திண்ணையில்.

எனக்கும்
உன் அருகாமை இல்லாதபோது
காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள்
நுழைந்த வெறுமை.

போலியில்லா உன்முகம் பார்த்து
உன் மடியில் தலைசாய்த்து
என் தலை கோதும் விரல்களோடு
வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்

இந்த
வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தான்
வலுக்கட்டாயமாய்
என் சிறகுகளைப் பிடுங்கி
வெள்ளையடிக்கின்றன.

(சேவியர் – கவிதைகள், காவியங்கள் நூலிலிருந்து)

104 comments on “கவிதை : அம்மா

 1. இந்த வாழ்க்கை நிர்ப்பந்தங்களும், விதியும் என் விஷயத்தில் ரெம்பவே கொடூரமாயிருக்கின்றது. என் அம்மாவின் வாசம் தான் என் கண்ணீரை மட்டுபடுத்தும்.
  காலையிலே அழவச்சிட்டீங்க அண்ணா.

 2. Vanakam Xevier sir

  “போலியில்லா உன்முகம் பார்த்து
  உன் மடியில் தலைசாய்த்து
  என் தலை கோதும் விரல்களோடு
  வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்”
  me too

  puduvai siva..

 3. //இந்த வாழ்க்கை நிர்ப்பந்தங்களும், விதியும் என் விஷயத்தில் ரெம்பவே கொடூரமாயிருக்கின்றது. என் அம்மாவின் வாசம் தான் என் கண்ணீரை மட்டுபடுத்தும்.
  காலையிலே அழவச்சிட்டீங்க அண்ணா.//

  இயந்திரத்தனமான வாழ்க்கையில் இன்னும் மிச்சமிருக்கும் தாய்ப்பாசம் மனித இயல்பை பெருமைப்படுத்துகிறது.

 4. //Vanakam Xevier sir

  “போலியில்லா உன்முகம் பார்த்து
  உன் மடியில் தலைசாய்த்து
  என் தலை கோதும் விரல்களோடு
  வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்”
  me too

  puduvai siva..

  //

  வணக்கம் ! நன்றி சிவா🙂

 5. //கவிதைகள், காவியங்கள் நூலிலிருந்து//

  புத்தகத்தை கண்ணில் காட்ட மாட்டிங்க போல…

 6. ஆயிரம் புத்தகங்களில் இருந்து கிடைக்காத அனுபவப் புத்தகங்கள்.வாழ்வின் வழிகாட்டிகள்.பாசத்தின் பசப்பில்லா உண்மை மனிதர்கள்.நரம்புகள் இறக்கும் வரை இயற்கைத் தெய்வங்கள்.இயல்பு உலகின் இமயங்கள்…..இன்னும் இன்னும்.

 7. //போலியில்லா உன்முகம் பார்த்து
  உன் மடியில் தலைசாய்த்து
  என் தலை கோதும் விரல்களோடு
  வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்

  இந்த
  வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தான்
  வலுக்கட்டாயமாய்
  என் சிறகுகளைப் பிடுங்கி
  வெள்ளையடிக்கின்றன.
  //

  சேவியர்,
  இனி உங்கள் கவிதைகளை படிக்க கூடாதென்று முடிவு செய்துவிட்டேன்.
  என்னால் அழ முடியவில்லை.

  அம்மாவை பற்றி இன்னொரு நெகிழ்ச்சியான பதிவு.
  படித்து பாருங்கள்

  http://geeths.info/archives/140

 8. கவிஞர் சேவியருக்கு,

  “உலக அதிசயங்கள்” பட்டியல் சர்வதேச அமைப்புகள் மூலமாக ஆண்டுக்கு ஆண்டு மாறலாம் . ஆனால் மாறாத உலக உன்னதம் யாதெனச் சொல்லிக் கேட்டால் , அது தாயைத் தவிர யாராய் இருக்க முடியும்?. பாசத்தை வேறு வழியற்ற தவணை முறையில் செலுத்தி , அதற்கும் பல எதிர்பார்ப்பு வட்டிகளை எண்ணிப் பழகும் எண்ணற்ற உறவுகள் மத்தியில் நம்மையே உயிராய் நினைக்கும் ஒரே உறவு அம்மா.

  போலியில்லா உன்முகம் பார்த்து
  உன் மடியில் தலைசாய்த்து
  என் தலை கோதும் விரல்களோடு
  வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்

  இந்த
  வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தான்
  வலுக்கட்டாயமாய்
  என் சிறகுகளைப் பிடுங்கி
  வெள்ளையடிக்கின்றன.

  நிதர்சன பிம்ப நிழல் உடையாமல் விழுகிறது வாசிக்கும் நெஞ்சம் அருகில் !!!!!

  நட்புடன்
  குகன்

 9. ///கவிதைகள், காவியங்கள் நூலிலிருந்து//

  புத்தகத்தை கண்ணில் காட்ட மாட்டிங்க போல…
  //

  ஹி..ஹி.. இந்தியா வரும்போ ஒரு மூட்டை தரேன்🙂

 10. //ஆயிரம் புத்தகங்களில் இருந்து கிடைக்காத அனுபவப் புத்தகங்கள்.வாழ்வின் வழிகாட்டிகள்.பாசத்தின் பசப்பில்லா உண்மை மனிதர்கள்.நரம்புகள் இறக்கும் வரை இயற்கைத் தெய்வங்கள்.இயல்பு உலகின் இமயங்கள்…..இன்னும் இன்னும்//

  அசத்தறீங்க தங்கச்சி..

 11. //சேவியர்,
  இனி உங்கள் கவிதைகளை படிக்க கூடாதென்று முடிவு செய்துவிட்டேன்.
  என்னால் அழ முடியவில்லை.

  அம்மாவை பற்றி இன்னொரு நெகிழ்ச்சியான பதிவு.
  படித்து பாருங்கள்

  //

  இதை மிகப்பெரிய பாராட்டாய் எடுத்துக் கொள்கிறேன். நன்றி வருகைக்கும், கருத்துக்கும் நண்பரே.

 12. //ஆனால் மாறாத உலக உன்னதம் யாதெனச் சொல்லிக் கேட்டால் , அது தாயைத் தவிர யாராய் இருக்க முடியும்?. பாசத்தை வேறு வழியற்ற தவணை முறையில் செலுத்தி , அதற்கும் பல எதிர்பார்ப்பு வட்டிகளை எண்ணிப் பழகும் எண்ணற்ற உறவுகள் மத்தியில் நம்மையே உயிராய் நினைக்கும் ஒரே உறவு அம்மா.
  //

  மனதைத் தொட்டு விட்டீர்கள் குகன். அருமை.. அருமை.

  //நிதர்சன பிம்ப நிழல் உடையாமல் விழுகிறது வாசிக்கும் நெஞ்சம் அருகில் !!!!!

  நட்புடன்
  குகன்

  //

  நன்றி குகன். நன்றி🙂

 13. //ஸேவியர்,
  To disable ’snap’: Presentation –> Extras and uncheck the Snap Preview feature box. Please! BTW, Are you in twitter//

  டுவிட்டரில் இல்லையே🙂

 14. /Presentation –> Extras and uncheck the Snap Preview feature box. Please! BTW, Are you in twitter//

  எங்கே இதைப் பண்ணனும் ??? எதுக்கு ? புரியவில்லை😀 நான் கொஞ்சம் மக்கு😉

 15. THAAJIN UDALUL UUDDAM PETRU, IRATHAM THANIL IYANKA VAITHA, ITHAYATH THEVATHAI INAIKKU IIDAAJI , EMMAIP PETRAVAL IRAUDAN PAARTHAAIL, THAAJE EMAKKUK KADAVUL ENPEN. “TAAJEE KADAVUL” K.SIVA(Fr)

 16. அம்மா என்ற அழகிய சொல்லை
  தொலைபெசி ஊடாக தான் நான் அழைக்கிறேன்
  காத்திருக்கிறேன் ஒரு நாள் வரும்…..
  கண்நேதிரெ கண்டதும் அம்மா என்றழைக்க……….

 17. அம்மா என்ற அழகிய சொல்லை
  தொலைபெசி ஊடாக தான் நான் அழைக்கிறேன்
  காத்திருக்கிறேன் ஒரு நாள் வரும்…..
  கண்நேதிரெ கண்டதும் அம்மா என்றழைக்க……….//
  😦

 18. இப்போதெல்லாம்
  என் கடிதம் காத்து
  தொலை பேசியின் ஒலிகாத்து
  வாரமிருமுறை
  போதிமரப் புத்தனாகிறாய்
  வீட்டுத் திண்ணையில்.-i love you mother

 19. ,”தாயின் காலடியில் சுவனம் இருக்கிறது”

  மூன்று விஷயங்களை கண்களால் காண்பதே பாக்கியம் என்று, அன்று சொன்னார்களே அகிலத்தின் அருட்கொடை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்!அதில் ஒன்று தாயின் முகமல்லவா?

  நல்ல கவிதை தந்த தங்களுக்கு நன்றி .

 20. Anna un kavathai keddu alathathonrukirathu enakku.
  Un unarvathan varikalukkaai endrum en paaraddukkal.
  Srilankavil irunthu thampi Arulnilavan

 21. என்னை பெற்று எடுக்காத ..
  எல்லா பெற்றோர்களையும் …
  ‘அம்மா -அப்பா ‘…..என்று
  கூப்பிட வைத்தது
  இந்த நட்பு மட்டும் தான் “

 22. //என்னை பெற்று எடுக்காத ..
  எல்லா பெற்றோர்களையும் …
  ‘அம்மா -அப்பா ‘…..என்று
  கூப்பிட வைத்தது
  இந்த நட்பு மட்டும் தான் “//

  நன்றி நண்பரே…

 23. //Anna un kavathai keddu alathathonrukirathu enakku.
  Un unarvathan varikalukkaai endrum en paaraddukkal.
  Srilankavil irunthu thampi Arulnilavan//

  நன்றி தம்பி, நெகிழ வைத்த பின்னூட்டத்துக்கு.

 24. எனது சிறு சிறு வெற்றிகளுக்கு
  கோப்பைகள் கொடுத்தது
  உனது
  இதயத் தழுவலும்
  பெருமைப் புன்னகையுமல்லவா
  good
  This line இதயத் தழுவலும்
  பெருமைப் புன்னகையுமல்லவா I Like & True line

 25. INTHA KAVITHAI ROMBA NALLAERUKU SIR. NAAN EPPO CHENNAILA VELA PAKKERAN EPPE ENAKKU EN AMMAVA PAKKANUMPOL ERUKU GOOD KAVITHAI SIR

 26. ulagam ullalavum uyir vaazhum uyirai vida melana en nam annaiyin anbum vaaluum tholare kanatha idhayathodu vizhi neerodu nandri umaku

 27. i really feel happy when i read theselines for inmy life i had experience at mother.be happy andmake others happy.on behalf of mine and my wife i wish u all the best.

  ரொம்ப நன்றிங்க🙂

 28. //INTHA KAVITHAI ROMBA NALLAERUKU SIR. NAAN EPPO CHENNAILA VELA PAKKERAN EPPE ENAKKU EN AMMAVA PAKKANUMPOL ERUKU GOOD KAVITHAI SIR//

  நன்றி பெரியசாமி. உங்கள் அம்மா கொடுத்து வைத்தவர் !

 29. /எனது சிறு சிறு வெற்றிகளுக்கு
  கோப்பைகள் கொடுத்தது
  உனது
  இதயத் தழுவலும்
  பெருமைப் புன்னகையுமல்லவா
  good
  This line இதயத் தழுவலும்
  பெருமைப் புன்னகையுமல்லவா I Like & True line//

  நன்றி மலர்…

 30. “உலக அதிசயங்கள்” பட்டியல் சர்வதேச அமைப்புகள் மூலமாக ஆண்டுக்கு ஆண்டு மாறலாம் . ஆனால் மாறாத உலக உன்னதம் யாதெனச் சொல்லிக் கேட்டால் , அது தாயைத் தவிர யாராய் இருக்க முடியும்?. பாசத்தை வேறு வழியற்ற தவணை முறையில் செலுத்தி , அதற்கும் பல எதிர்பார்ப்பு வட்டிகளை எண்ணிப் பழகும் எண்ணற்ற உறவுகள் மத்தியில் நம்மையே உயிராய் நினைக்கும் ஒரே உறவு அம்மா.

  போலியில்லா உன்முகம் பார்த்து
  உன் மடியில் தலைசாய்த்து
  என் தலை கோதும் விரல்களோடு
  வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்

  இந்த
  வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தான்
  வலுக்கட்டாயமாய்
  என் சிறகுகளைப் பிடுங்கி
  வெள்ளையடிக்கின்றன.

  நிதர்சன பிம்ப நிழல் உடையாமல் விழுகிறது வாசிக்கும் நெஞ்சம் அருகில் !!!!!

  நட்புடன்
  reneto

 31. இந்த இடுகையில் உள்ள படம் அருமையாக உள்ளது. இதனை எங்கள் வலைப்பூவில் பயன் படித்த விரும்புகிறோம்.

 32. Brother its really wounderful in the world anyones love and care is not equal to our mother love. its so nice

 33. போலியில்லா உன்முகம் பார்த்து
  உன் மடியில் தலைசாய்த்து
  என் தலை கோதும் விரல்களோடு
  வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்”
  me too

 34. வணக்கம், அன்னையின் அன்பை எந்த கருவியாலும் அளவிட முடியாது. காலம் பல ஆனாலும், யுகம் பல மாறினாலும், மாறாத பாசம் தாய்ப்பாசம்.

 35. //வணக்கம், அன்னையின் அன்பை எந்த கருவியாலும் அளவிட முடியாது. காலம் பல ஆனாலும், யுகம் பல மாறினாலும், மாறாத பாசம் தாய்ப்பாசம்.

  //

  நன்றி ஜாண். உண்மை !உண்மை !

 36. பசி என்னும் வார்த்தை கூட
  நான் கேட்டதில்லை
  நீ
  பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய்

  Nann anupaviththirukkiren, en ammavin pasi ennum unavai.

 37. /பசி என்னும் வார்த்தை கூட
  நான் கேட்டதில்லை
  நீ
  பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய்

  Nann anupaviththirukkiren, en ammavin pasi ennum unavai.

  //

  மிக்க நன்றி தோழி.

 38. ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்லுவாங்க.. இந்த ஒரு கவிதை போதும் இவரை பற்றி புரிந்து கொள்ள…

 39. //ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்லுவாங்க.. இந்த ஒரு கவிதை போதும் இவரை பற்றி புரிந்து கொள்ள…

  //

  தொட்டுட்டீங்க🙂

 40. amma niye enkuda illa ana unna ninkama yanala oru secoand kuda irukamudiyala amma …………. niye enuku venum amma ,,,,,,,,,, niye enga iruka niye venum amma enuku unna ninkum pothallam enuke kanra thean amma varuthu……. unada photo kuda nan nerala pathuilla amma. .. niye epadi irupa …enuku enada appa thean yellama ………… amma niye appa kuda yapama irummma ……… un napakam vanthchana akkava ninachapa ………. amma,,,,,,,,,

 41. பிறக்குமுன் வயிற்றில் சுமந்தவளெ
  பிறந்தபின் மார்பில் சுமந்தவளெ
  நான்நடக்க ஆதவு தந்நவளெ
  என்மெழிகேட்க ஆவவாய் இருந்நவளெ
  கடன்பட்டேன் என்னைசுமந்த உனக்கு
  இன்னும் ஏலேழுஜென்மம் எடுத்தாலும்
  வரவைண்டும் நீயை தாயாக எனக்கு

 42. Taayaka Yaaka Yaaralum Varamudiyaa Thu , Cila Samyam Makalaaka ORU Piravi Varalaam SaKoo Tha Raa KaRunai IrunThaall Kada Vu Lai Yunk Kaanalaan Ithu Taann Maanidang Kooruvathu.++K.Siva France++

 43. என் புத்தகச் சுமை
  முதுகை அழுத்தி அழுதபோது
  செருப்பில்லாத பாதங்களேடு
  இடுப்பில் என்னை
  இரண்டரை மைல் சுமந்திருக்கிறாய்……mega

 44. இப்போதெல்லாம்
  என் கடிதம் காத்து
  தொலை பேசியின் ஒலிகாத்து
  வாரமிருமுறை
  போதிமரப் புத்தனாகிறாய்
  வீட்டுத் திண்ணையில்.

  —– அருமை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s