கவிதை : ஒரு நண்பனுக்கு…

உனக்கு நான் அனுப்பிய
கண்ணீர்த் துளிகளை
உப்புத் தயாரிக்க
நீ
உபயோகித்துக் கொண்டாய்.

இருட்டில்
நடந்துகொண்டே
உன்
நிழல் களவாடப்பட்டதாய்
புலம்புகிறாய்

பாறைகளில்
பாதம் பதித்துவிட்டு
சுவடு தேடி
சுற்றிவருகிறாய்.

நீ
பறக்கவிடும் பட்டத்தின்
நூலறுந்ததை மறந்துவிட்டு
வாலறுந்ததற்காய்
வருந்துகிறாய்.

முதுமக்கள் தாழிக்குள்
மூச்சடக்கி முடங்கிவிட்டு
சுதந்திரக்காற்று
சிறைவைக்கப் பட்டதாய்
அறிக்கைவிடுகிறாய்.

உன்
இறகுகளை உடைத்துவிட்டு
சிறைகள் திறக்கவில்லையென்று
வாக்குவாதம் செய்கிறாய்.

விரல்களை வெட்டிவிட்டு
தூரிகை
தொலைந்ததென்று
துயரப்படுகிறாய்.

சில்லறைகளை சேகரிப்பதில்
மூழ்கிவிட்டு
மதிப்பீடுகளுக்குக்
கல்லறை கட்டுகிறாய்.

நிறுத்திவிடு நண்பனே.
நிறுத்திவிடு

சுவாசப்பையை
சுத்தீகரிப்பதாய் நினைத்து
நாசிகளுக்குள் இனியும்
நீர் இறைக்கவேண்டாம்.

19 comments on “கவிதை : ஒரு நண்பனுக்கு…

 1. எல்லா இளைய சமுதாயத்தினருக்கும் பொருந்துகின்ற ஒரு கவிதை…அழகு….
  அன்புடன் அருணா

  Like

 2. //இருட்டில்
  நடந்துகொண்டே
  உன்
  நிழல் களவாடப்பட்டதாய்
  புலம்புகிறாய்//

  வரிகள் அருமை!

  அன்புடன்,
  ஜோதிபாரதி.

  Like

 3. //எல்லா இளைய சமுதாயத்தினருக்கும் பொருந்துகின்ற ஒரு கவிதை…அழகு….
  அன்புடன் அருணா//

  நன்றி அருணா… நன்றி

  Like

 4. ////இருட்டில்
  நடந்துகொண்டே
  உன்
  நிழல் களவாடப்பட்டதாய்
  புலம்புகிறாய்//

  வரிகள் அருமை!
  //

  நன்றி ஜோதிபாரதி.

  Like

 5. அன்புள்ள சேவியருக்கு,

  பூட்டாத கதவுக்குக் கூட சாவி தேடி அலைந்து கொண்டிருக்கும் முட்டாள் தனத்தை நிறுத்தி விட்டு , சில நிமிடங்கள் செலவிட்டு ஒரு முழுமையான சுய அலசல் செய்ய வேண்டும் . அப்படிச் செய்தால் தான் எந்த பள்ளத்தாக்கில் நின்று கொண்டு இருக்கிறோம் , அங்கிருந்து வாழ்வின் பசுமைச் சமவெளி செல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிகாட்டி கைக்கு கிடைக்கும் என்பதை அழகாக எழுதி உள்ளீர்கள் !!!

  உங்கள் உப்புத் துளிகளைக் கூட கண்ணீர் ஆக்கிய இரக்கமற்ற நண்பனுக்கு , கரிசனத்தோடு கூடிய கண்டிப்பான முறையில் கருத்து வழங்கி இருப்பது மிகச் சிறப்பு .

  நட்புடன்
  குகன்

  Like

 6. //பூட்டாத கதவுக்குக் கூட சாவி தேடி அலைந்து கொண்டிருக்கும் முட்டாள் தனத்தை நிறுத்தி விட்டு , சில நிமிடங்கள் செலவிட்டு ஒரு முழுமையான சுய அலசல் செய்ய வேண்டும் . அப்படிச் செய்தால் தான் எந்த பள்ளத்தாக்கில் நின்று கொண்டு இருக்கிறோம் , அங்கிருந்து வாழ்வின் பசுமைச் சமவெளி செல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிகாட்டி கைக்கு கிடைக்கும் என்பதை அழகாக எழுதி உள்ளீர்கள் !!!

  //

  வாவ்… வாவ்.. வழக்கம் போல அருமை !

  //

  உங்கள் உப்புத் துளிகளைக் கூட கண்ணீர் ஆக்கிய இரக்கமற்ற நண்பனுக்கு , கரிசனத்தோடு கூடிய கண்டிப்பான முறையில் கருத்து வழங்கி இருப்பது மிகச் சிறப்பு .

  //

  நன்றி குகன். கருத்துக்கும், வருகைக்கும், நட்புக்கும்.

  Like

 7. ///பாறைகளில்
  பாதம் பதித்துவிட்டு
  சுவடு தேடி
  சுற்றிவருகிறாய்.

  நீ
  பறக்கவிடும் பட்டத்தின்
  நூலறுந்ததை மறந்துவிட்டு
  வாலறுந்ததற்காய்
  வருந்துகிறாய்.///

  சில்லறைகளை சேகரிப்பதில்
  மூழ்கிவிட்டு
  மதிப்பீடுகளுக்குக்
  கல்லறை கட்டுகிறாய்//

  SIMPLY SUPER…….. =D>

  Like

 8. உங்கள் உப்புத் துளிகளைக் கூட கண்ணீர் ஆக்கிய இரக்கமற்ற நண்பனுக்கு , கரிசனத்தோடு கூடிய கண்டிப்பான முறையில் கருத்து வழங்கி இருப்பது மிகச் சிறப்பு .

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s