கவிதை : வாழ்வின் மகத்துவம்

அடுத்தவர் வாழ்க்கை
அமைதியாய் கழிவதாகக்
கருதிக் கொள்கிறது
ஒவ்வொருவர் வாழ்க்கையும்.

ஒப்பீடுகளின்
உரசல்களால்
எரிந்து கொண்டிருக்கின்றன
உறவுகளின் காப்பீடுகள்.

அழுகையையும்
இயலாமையையும் புதைக்க
எல்லோரும்
தேடுகின்றனர்
சதுர அடிகளில் சில அறைகள்.

திரைச் சீலைகளும்
தாழிட்ட சன்னல்களும்
மம்மிகளை
உள்ளுக்குள் நிறைத்து
பூங்காக்களை
வாசல் வழியே அனுப்பிக் கொண்டிருக்கின்றன

எப்போதேனும்
ஆறுதல் தேடி
அடுத்த வீட்டுக் கிணற்றடியில்
அமரும் பெண்களும்,

எதேச்சையாய்
பார்களில் சந்தித்துக் கொள்ளும்
ஆண்களும்
கண்டு கொள்கின்றனர்
தனது குடும்ப வாழ்வின் மகத்துவத்தை

10 comments on “கவிதை : வாழ்வின் மகத்துவம்

  1. வாழ்வில் பூக்களின் சிரிப்பை மட்டுமே ரசிக்கும் நாங்கள்,வேர் அழுவதைக் கவனிக்கத் தவறி விடுகிறோமே.எப்பவும் போல அழகான கவிதை.

    Like

  2. //அன்புள்ள சேவியருக்கு ,

    “திரைச் சீலைகளும்
    தாழிட்ட சன்னல்களும்
    மம்மிகளை
    உள்ளுக்குள் நிறைத்து
    பூங்காக்களை
    வாசல் வழியே அனுப்பிக் கொண்டிருக்கின்றன”

    மீண்டும் மீண்டும் ரசித்தேன் !!!!!!!!!!!!!!!
    //

    மிக்க நன்றி குகன் 🙂

    //

    நான் குடும்பஸ்தன் இல்லை
    ஆனாலும் கேட்கிறேன்.
    குடும்ப வாழ்வின் மகத்துவத்தை அறிய , பார்களில் சந்தித்து கொள்ளும் ஆண்களால் மட்டும் தான் முடியுமா ?
    //

    அடுத்தவர்களின் புலம்பல் கேட்கும் எந்த இடமானாலும் ஓ.கே தான் 😀

    Like

  3. ///அழுகையையும்
    இயலாமையையும் புதைக்க
    எல்லோரும்
    தேடுகின்றனர்
    சதுர அடிகளில் சில அறைகள்//

    ரொம்ப யதார்த்தமான உண்மை
    அன்புடன் அருணா

    //

    நன்றி அருணா

    Like

  4. அன்புள்ள சேவியருக்கு ,

    “திரைச் சீலைகளும்
    தாழிட்ட சன்னல்களும்
    மம்மிகளை
    உள்ளுக்குள் நிறைத்து
    பூங்காக்களை
    வாசல் வழியே அனுப்பிக் கொண்டிருக்கின்றன”

    மீண்டும் மீண்டும் ரசித்தேன் !!!!!!!!!!!!!!!

    நான் குடும்பஸ்தன் இல்லை 🙂
    ஆனாலும் கேட்கிறேன்.
    குடும்ப வாழ்வின் மகத்துவத்தை அறிய , பார்களில் சந்தித்து கொள்ளும் ஆண்களால் மட்டும் தான் முடியுமா ? 😉

    நட்புடன்
    குகன்

    Like

  5. //அழுகையையும்
    இயலாமையையும் புதைக்க
    எல்லோரும்
    தேடுகின்றனர்
    சதுர அடிகளில் சில அறைகள்//

    ரொம்ப யதார்த்தமான உண்மை
    அன்புடன் அருணா

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.