நான் பார்த்ததிலே : ஒரு குறும்பட விமர்சனம்

 


என்று மடியும் எனும் குறும்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு வாய்த்தது. முத்துக்குமார் என்பவர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் தமிழியலன் எனும் மின் துறைப் பொறியாளர் ஒருவர் நடித்துள்ளார்.

அடக்குமுறையினால் கிராமத்தில் நிலத்தை இழந்த ஒரு தந்தை தனது மகனைக் காண சென்னை வருகிறார். சென்னையில் கால் செண்டர் ஒன்றில் பணிபுரியும் மகன் தந்தையிடம் பேசக் கூட நேரம் இல்லாமல் இருக்கும் நிலையைக் கண்டு நொந்து மனம் வருந்தி கிராமத்துக்கே திரும்புகிறார் என்பதே இந்த பத்து – பதினைந்து நிமிடக் குறும்படத்தின் கதை.

நகரத்துக்கு வரும் தந்தை மகனின் அலங்கோலமான அறையைச் சுத்தம் செய்வதும், மகன் மாலையில் வந்ததும் தந்தையிடன் பேசாமல் சோர்வுடன் தூங்குவதும், காலையில் விடிந்ததும் தந்தையிடம் பேச நேரமின்றி அலுவலகம் விரைவதும் என காட்சிகள் மனதை உருக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளன.

இந்தப் படத்தில் நடித்திருந்த தமிழியலன் அவர்கள் கால் ஊனமுற்றவர். அந்த கதாபாத்திரத்தின் ஏக்கத்தையும், வலியையும் முகத்திலும் கண்களிலும் தேக்கி அவர் நடித்திருந்த விதம் அருமையாய் இருந்தது.

அவரைத் தொடர்பு கொண்டு பாராட்டினேன். மிகவும் அடக்கமாக எனக்கு நடிப்பில் ஆசை ஏதும் இல்லை என்றார். அப்படியானால் தொடர்ந்து நடியுங்கள் என்றேன். சிரித்தார்.

படத்தின் இயக்கம், இசை, நடிப்பு என அனைத்துமே சிறப்பாக இருந்தாலும் ஒரே ஒரு குறை படத்தில் நெருடலாகவே இழையோடுகிறது.

சென்னை இளைஞனின் பரபரப்பான வாழ்க்கையையும், மேலை நாட்டு ஆதிக்கத்தையும், பின்னுக்குத் தள்ளப்படும் உறவுகளையும் பதிவு செய்வதற்காக படத்தின் கதை மிகைப்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது.

கிராமத்திலிருந்து நகரத்தில் தன்னைக் காண வரும் தந்தையிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் மகன் தூங்குவான் என்பதும், காலையில் ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்று விடுவான் என்பதும், தாய் பாசத்துடன் தந்தனுப்பிய பண்டத்தை கையில் வாங்கிக் கூட பார்க்க மாட்டான் என்பதும் துளியும் நம்பும்படியாக இல்லை. அதுவும் கிராமப் பின்னணியிலிருந்து தந்தையின் அன்பை அனுபவித்து மகிழ்ந்த ஒரு இளைஞன் இப்படி நடந்து கொள்ள வாய்ப்பே இல்லை.

எனினும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில் வாழ்க்கையின் நிர்ப்பந்தங்களும், நவீனங்களும் நமது வாழ்வில் ஏற்படுத்திய இழப்புகளை வலியுடனும், வலிமையுடனும் பறைசாற்றுகிறது இந்தக் குறும்படம்.

20 comments on “நான் பார்த்ததிலே : ஒரு குறும்பட விமர்சனம்

  1. //சினிமா மட்டுமே பார்க்கும் என்னைப் போன்ற ஆசாமிகளுக்கு குறும்படங்களின் விமர்சனம் படிக்கும் வாய்ப்பையாவது நல்கி ” பாவ விமோசனம்” வழங்கி உள்ளீர்கள்//

    எனக்கும் எப்போதாவது தான் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது குகன் 🙂

    Like

  2. நண்பர் சேவியருக்கு,

    குறும்படத்தில் கமர்சியல் பாணியான மிகைபடுத்தப்பட்ட விஷயங்கள் இருக்கக் கூடாது என்று மிக நேர்பட எடுத்துரைத்து உள்ளீர்கள் !!! சினிமா மட்டுமே பார்க்கும் என்னைப் போன்ற ஆசாமிகளுக்கு குறும்படங்களின் விமர்சனம் படிக்கும் வாய்ப்பையாவது நல்கி ” பாவ விமோசனம்” வழங்கி உள்ளீர்கள்! 🙂

    வாழ்த்துக்கள் சேவியர் !!!!!!!!

    அன்புடன்
    குகன்

    Like

  3. //ஆஹா, அந்த ஊர்க்காரனா நீயி… (என்னோட எனக்கு மட்டும் ஏன் இப்படி – II படிச்சிருப்பாரு போல இருக்கே//

    😀

    Like

  4. கொஞ்ச நாளாவே படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கல… கடைசியா குசேலன் பார்த்து நொந்துட்டேன்…

    Like

  5. ///
    சாய்கணேஷ்…. காரைக்குடி….
    ///

    ஆஹா, அந்த ஊர்க்காரனா நீயி… (என்னோட எனக்கு மட்டும் ஏன் இப்படி – II படிச்சிருப்பாரு போல இருக்கே…)

    Like

  6. //நல்ல பதிவு இப்படி மொக்கை போடும் இடமாக மாறியதில் எனக்கு வருத்தமாக இருக்கிறது…

    //

    நகைச்சுவையும், நட்பும் பரிமாறுவதை விட நல்ல பதிவு வேறேது ?

    Like

  7. //கஜகரணம் போட்டாலும் என்னால செட்டி ஆகா முடியாது. செட்டியாருங்க செருப்பாலேயே அடிக்க வருவாங்க…. //

    😀

    Like

  8. நல்ல பதிவு இப்படி மொக்கை போடும் இடமாக மாறியதில் எனக்கு வருத்தமாக இருக்கிறது…

    Like

  9. ///
    இவரை முதலில் தமிழ் நாட்டுக்கு வந்து செட்டி ஆக சொல்லுங்க……
    ///

    கஜகரணம் போட்டாலும் என்னால செட்டி ஆகா முடியாது. செட்டியாருங்க செருப்பாலேயே அடிக்க வருவாங்க…. 🙂

    Like

  10. //பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் “குளோபல் வார்மிங்” பற்றிய

    விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-200 இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

    விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

    //

    ம்ம்… எங்க வீட்டு சுவத்துல ஹாயா வந்து போஸ்டர் ஒட்டிட்டு போறீங்க… ம்ம்.. நடக்கட்டும், நடக்கட்டும். ஏதோ நல்லது நடந்தா சரி 😉

    Like

  11. //சேவியர் சார்… இவரை முதலில் தமிழ் நாட்டுக்கு வந்து செட்டி ஆக சொல்லுங்க……

    பி. கு – எங்க ஊரில் அவரை தேடி கொண்டிருக்காய்ங்க…… எதற்கு என்று நாளை சொல்கிறேன்….

    //

    அவருக்கு காலைல எழுந்ததும் “பாகஉன்னாரா பாபு” ன்னு கேக்கலேன்னா ரொம்ப போரடிக்குதாம். அதனால இப்போதைக்கு முடியாதுங்கறாரு.

    அவர உங்க ஊருல எதுக்கு தேடிட்டி இருக்காங்கன்னு சொல்லுங்க, ஆள் தேவைப்பட்டா ஆட்டோ அனுப்பலாம் 😉

    Like

  12. //சின்ன வயதில் ஒரு அம்மா சொல்லியது, இறைவனிடம் “பசித்து வந்து பானையை பார்க்காத, குளித்து வந்து கொடியை பார்க்காத வாழ்க்கையை கொடு” என்று கும்பிட சொன்னார்கள்… அதன் அர்த்தம் அன்று விளங்கவில்லை… ஆனால் இன்று புரிகிறது//

    வேதனை கலந்த அழகிய தகவல். பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

    Like

  13. //என் இனிய தமிழ் மக்களே” போட மறந்துட்டேன்.//

    உங்கள் பாசத்துக்குரிய….. பேசுகிறேன் – ன்னு போடணுமா வேண்டாமா ?

    Like

  14. பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் “குளோபல் வார்மிங்” பற்றிய

    விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

    விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

    உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்

    ஒன்றுபடுவோம்
    போராடுவோம்
    தியாகம் செய்வோம்

    இறுதி வெற்றி நமதே

    மனிதம் காப்போம்
    மானுடம் காப்போம்.

    இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.

    கோவை விஜய்
    http://pugaippezhai.blogspot.com/

    Like

  15. பணம் அந்தஸ்தை மட்டும் தரலாம், அடையாளத்தை தராது

    தவறுக்கு மன்னிக்கவும்

    Like

  16. //மகன் மாலையில் வந்ததும் தந்தையிடன் பேசாமல் சோர்வுடன் தூங்குவதும், காலையில் விடிந்ததும் தந்தையிடம் பேச நேரமின்றி அலுவலகம் விரைவதும் என காட்சிகள் மனதை உருக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளன//

    அது படமாக்க படவில்லை……. அது தான் யதார்த்தம்…..
    பணத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு தனது அடையாளத்தை அங்கிகாரத்தையும் தொலைத்து கொண்டிருக்கிறோம்…..

    சின்ன வயதில் ஒரு அம்மா சொல்லியது, இறைவனிடம் “பசித்து வந்து பானையை பார்க்காத, குளித்து வந்து கொடியை பார்க்காத வாழ்க்கையை கொடு” என்று கும்பிட சொன்னார்கள்… அதன் அர்த்தம் அன்று விளங்கவில்லை… ஆனால் இன்று புரிகிறது….

    நாம் சாப்பிடும் உணவும் இடமும் வேண்டுமானால் வேறுபடலாம்.. ஆனால் அனைவருக்கும் தேவை இரண்டு வேளை உணவு தான்…
    பணம் அந்தஸ்தை தரளாம், மட்டும் அடையாளத்தை தராது…

    படம் பார்க்காமலே பார்த்த மாதிரி உள்ளது….நன்றி….

    ///திருந்தித் தொலைங்கடா… உங்களுக்கு உயிரக் குடுத்தது உங்க அப்பனுங்க தான்டா, கலிபோர்னியால இருக்க கிளையண்ட் இல்லை… வயிறேரிஞ்சு சொல்றேன், இப்படியே இருந்தா அழிஞ்சு போயிருவீங்கடா/// சேவியர் சார்… இவரை முதலில் தமிழ் நாட்டுக்கு வந்து செட்டி ஆக சொல்லுங்க……

    பி. கு – எங்க ஊரில் அவரை தேடி கொண்டிருக்காய்ங்க…… எதற்கு என்று நாளை சொல்கிறேன்….

    சாய்கணேஷ்…. காரைக்குடி….

    Like

  17. திருந்தித் தொலைங்கடா… உங்களுக்கு உயிரக் குடுத்தது உங்க அப்பனுங்க தான்டா, கலிபோர்னியால இருக்க கிளையண்ட் இல்லை… வயிறேரிஞ்சு சொல்றேன், இப்படியே இருந்தா அழிஞ்சு போயிருவீங்கடா…

    (ஊப்ஸ், முன்னாடி ”என் இனிய தமிழ் மக்களே” போட மறந்துட்டேன். நான் குறிப்பிடுற வி.ஐ.பி வழக்கமா அப்படித் தான் பேச ஆரம்பிப்பார். இத அவரு ஸ்டைல்லயே படிங்க)

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.