கவிதை : நான் தான் கடவுள் பேசுகிறேன்.


பிரிய பக்தனே,

வா.
வந்தமர்.

ஏன் இத்தனை
அவசரம் ?
வாசலில் நீ போட்ட
செருப்பு
அங்கேயே தான் கிடக்கும்.

உட்காரேன்.
கொஞ்ச நேரம்.

இங்கே
வருவோரெல்லாம்
கூடை நிறைய
கோரிக்கைகளோடும்,
வண்டி நிறைய
வேண்டுதல்களோடும் வரும்
வாடிக்கையாளர் தான்.

ஓர்
வேண்டுதலுக்கு முன்புதான்
என்றோ பெற்றவற்றுக்கு
நன்றி சொல்ல
நினைக்கிறார்கள்.

வேடிக்கை பார்ப்பதற்கும்
சுய புராணம்
வரைவதற்கும்
வருபவர்கள் தான் ஏராளம்.

நூல் கையிலிருந்தாலும்
ஏங்கோ பறக்கும்
பட்டம் போல,
எண்ணங்களை எங்கோ
எறிபவர்கள் தான் ஏராளம்.

வேண்டுதல் பயத்தின்
வெளிப்பாடுகளாய்,
நேர்த்திக் கடனின்
வேண்டா வெறுப்புடன்
வந்து நிற்பவர் தான் ஏராளம்.

எனக்கு
லஞ்சம் தருவதாய் சொல்லி
நச்சரிக்கும்
பக்தர்கள் தான் ஏராளம்.

தப்பிப் பிழைக்கும்
மற்ற மக்கள் எல்லாம்,
என் கர்ப்பக் கிரகத்தைச் சுற்றி
கண்ணீர் துளி விதைத்து
ஈரமாக்கி நகர்கிறார்கள்.

கடிகார ஒப்பந்தத்தோடு
தான்
முடிந்து போகிறது
அத்தனை பேரின்
ஆலய சம்பந்தமும்.

யாரேனும்,
வருவார்களா ?

சும்மா..
உன்னை பார்க்க வந்தேன்
எனும் ஸ்நேகத்தோடு…

Advertisements

10 comments on “கவிதை : நான் தான் கடவுள் பேசுகிறேன்.

 1. //யாரேனும்,
  வருவார்களா ?

  சும்மா..
  உன்னை பார்க்க வந்தேன்
  எனும் ஸ்நேகத்தோடு…//

  நான் போவதுண்டு அடிக்கடி
  சாமியைப் பார்க்க ஸ்னேகத்தோடு….
  அது எனக்குப் பிடித்த ஒன்று….
  அன்புடன் அருணா

  Like

 2. நலவழிப்படுத்த மதங்கள்..தெய்வங்கள்.பெரியவர்கள் வழிகாட்டலில் கோவில் போகிறோம்.எந்தத் தெய்வமாவது அணைத்து ஒரு ஆறுதல் வார்த்தை.இல்லவே இல்லையே.பிறகு எப்படி சினேகம் தேடித் தெய்வத்திடம்!!!

  Like

 3. //எனக்கு
  லஞ்சம் தருவதாய் சொல்லி
  நச்சரிக்கும்
  பக்தர்கள் தான் ஏராளம்.
  //

  ஹி….ஹி…
  அடியேனும் அப்பப்ப இந்த வேண்டாத வேலை செய்வதுண்டு.
  கூடவே இதையெல்லாம் கண்டுக்ககூடாது என்று கண்டிப்பாகசொல்லியும் விடுவேன்.
  நன்பர்களுக்குள் இதெல்லாம் சகஜம்தானே.

  அருமையான கவிதை.

  Like

 4. //எந்தத் தெய்வமாவது அணைத்து ஒரு ஆறுதல் வார்த்தை.இல்லவே இல்லையே//

  என்ன இப்படி சொல்லிட்டீங்க ?

  Like

 5. //தப்பிப் பிழைக்கும்
  மற்ற மக்கள் எல்லாம்,
  என் கர்ப்பக் கிரகத்தைச் சுற்றி
  கண்ணீர் துளி விதைத்து
  ஈரமாக்கி நகர்கிறார்கள்.//

  அருமையான வார்த்தைகள்..

  Like

 6. அன்புள்ள சேவியருக்கு,

  //ஏன் இத்தனை
  அவசரம் ?
  வாசலில் நீ போட்ட
  செருப்பு
  அங்கேயே தான் கிடக்கும்.

  உட்காரேன்.
  கொஞ்ச நேரம். //

  மனம் விட்டு இடம் பொருள் மறந்து சிரித்தேன் , சேவியர் !!!!!!!!!

  இந்தக் கவிதை நடை முழுக்க நம்முடைய நல்ல நண்பன் ஒருவனிடத்து மிக முக்கியமான விஷயத்தை ஜாலியாக கடற்கரை பக்கம் நடந்து கொண்டே பேசிக் கொண்டு செல்லுவது போன்று உள்ளது.ஒரு பந்தைக் கூட வீணாக்காத பேட்ஸ்மேன் மாதிரி , ஒரு வார்த்தை கூட எடுத்துக் கொண்ட கருப்பொருள் விட்டு எப்பொழுதும், உங்களுடைய எந்தக் கவிதையிலும் வெளியே செல்வதில்லை , சேவியர் !!!!!!!!!!!!!!!

  நட்புடன்
  குகன்

  Like

 7. //மனம் விட்டு இடம் பொருள் மறந்து சிரித்தேன் , சேவியர் !!!!!!!!!

  //

  மிக்க நன்றி குகன் 🙂

  //இந்தக் கவிதை நடை முழுக்க நம்முடைய நல்ல நண்பன் ஒருவனிடத்து மிக முக்கியமான விஷயத்தை ஜாலியாக கடற்கரை பக்கம் நடந்து கொண்டே பேசிக் கொண்டு செல்லுவது போன்று உள்ளது.//

  மிகப் பெரிய இதமான பாராட்டு. மனமார்ந்த நன்றிகள்.

  //ஒரு பந்தைக் கூட வீணாக்காத பேட்ஸ்மேன் மாதிரி , ஒரு வார்த்தை கூட எடுத்துக் கொண்ட கருப்பொருள் விட்டு எப்பொழுதும், உங்களுடைய எந்தக் கவிதையிலும் வெளியே செல்வதில்லை , சேவியர் !!!!!!!!!!!!!!!
  //

  கவிதையை விட அதிக அழகான உவமையை எழுதி வியக்க வைக்கிறீர்கள். நன்றி. உரமூட்டும் உங்கள் பின்னூட்டங்களுக்கு.
  🙂

  Like

 8. ///தப்பிப் பிழைக்கும்
  மற்ற மக்கள் எல்லாம்,
  என் கர்ப்பக் கிரகத்தைச் சுற்றி
  கண்ணீர் துளி விதைத்து
  ஈரமாக்கி நகர்கிறார்கள்.//

  அருமையான வார்த்தைகள்..

  //

  நன்றி முகுந்தன், உங்கள் தொடர்வாசிப்புக்கும், கருத்துக்கும் 🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s