வாங்க, எங்க ஊரைச் சுத்திக் காட்டறேன்.

(வீட்டின் பின் பகுதி)

வீட்டைச் சுற்றி மரங்கள் என்று சொல்வதை விட மரங்களுக்கு நடுவே ஒரு வீடு என்று சொல்லலாம் எங்கள் வீட்டை. அதே அக்மார்க் கிராமத்து வீடு. ஒரு கோடை வாசஸ்தலம் போல இருக்கிறது கிராமம். இன்னும் அடையாளங்களையும், சுவாரஸ்யங்களையும், மனிதநேயத்தையும் முழுமையாய் அவிழ்த்து விடாமல்.

வீட்டுக்குப் பின்னால் இருக்கும் புளியமரத்தடி ஓண காலத்தில் எங்களுக்கு ஊஞ்சல். மாலை நேரத்திலும் வார இறுதி நாட்களிலும் எங்களுக்குப் பல்லாங்குழி ஆடும் மைதானம். சுற்றி அமர்ந்து கதை பேசினால் சிரிப்புச் சத்தம் புளியங்காய்கள் கொட்டுவதைப் போல தொடரும்.

எப்போது போனாலும் பழைய சிரிப்பொலிகளை மீண்டெடுக்க முடிகிறது.

 

(தம்பி தேங்காய் தொலிப்பதில் கில்லாடி )

இன்னும் வஞ்சகமில்லாமல் காய்த்துக் கொண்டிருக்கின்றன மரங்கள். ரிலயன்ஸ் பிரஃஷ்கள் எட்டிப்பார்க்காத தோப்புகளில் கிடைக்கின்றன கலப்படமில்லாத காய்கறிகள்.

எங்கள் ஊரின் பெயர் பரக்குன்று. பரந்த குன்றுகள் நிறைந்த ஊர் என்பதால் அந்தப் பெயர் வந்ததாய் சொல்கிறார்கள். இன்னும் ஊரில் பெரிய குன்றுகள் நிறையவே இருக்கின்றன. ஒரு பெரிய மலையடி வாரத்தில் தான் எங்கள் வீடு இருக்கிறது.

 

ஊருக்குப் போகும்போதெல்லாம் மலையில் செல்வேன்.

 

“அங்கெயெல்லாம் எதுக்கு பிள்ளே போறே… கண்ணாடிச் சில்லு கெடக்கும் என பாசமாய் தடுக்கும் வயதான குரல்கள்.

 

கூவத்தின் கரையில் கூடுகட்டி வாழ்பவனுக்குத் தான் தெரியும் மலையின் மகத்துவம்.

 

மலையிலிருந்து நாலாபுறமும் விரிந்து கிடக்கும் பச்சை நகருக்கு இடம் பெயரும் வரை வியப்பை ஏற்படுத்தியிருந்ததே இல்லை. தூரதேசம் சென்றபின் தான் புரியும் தாயின் பாசமும், தந்தையின் நேசமும். அதேபோலவே இயற்கையில் உன்னதமும்.

 

புறுத்திச்சக்கை என எங்கள் ஊரில் பெயரிட்டு அழைக்கப்படும் அன்னாசிப்பழம், பைனாப்பிள், வேலிகளில் பயிரிடப்பட்டு வேண்டுவோர் பறித்துச் செல்லலாம் எனும் நிலமையில் தான் இருக்கின்றன இன்னும்.  பழுத்து அணில் கடித்துத் தின்ற மிச்சமே மனிதர்களுக்கு வாய்க்கிறது !

 

 

வீட்டுத் திண்ணையில் அமர்ந்து எடுத்த புகைப்படம் இது. வறட்சி என்றால் என்ன என்பதை அறியும் வாய்ப்பு இந்த கிராமத்துச் செடிகளுக்கு இல்லை. சிரித்துக் தலைகுலுக்கி வரவேற்கும் வாய்ப்பு மட்டுமே வாய்த்திருக்கின்றன இவற்றுக்கு.

மலைகள் மட்டுமல்ல, நீரோடைக்குச் செல்லவேண்டுமெனிலும் ரொம்ப தூரமெல்லாம் இல்லை. கொஞ்சம் தான்…

டோராவையும், புஜ்ஜியையும், டாம் அண்ட் ஜெர்ரி வகையறாக்களையும் தொலைக்காட்சியில் பார்த்து பொழுதைப் போக்கும் எனது மகளுக்கு ஊருக்குச் சென்றால் ஒரே கொண்டாட்டம் தான். அவளது தோழமை ஆடு, கோழி, முயல், அணில் இவற்றோடு தான்.

 

கிராமத்தின் தலையில் நகரத்தின் கலாச்சாரம் கூடுகட்டியதன் அடையாளமாய் எங்கள் கிராமத்தின் ஓலைக்கூரைகளும் தாங்கி நிற்கின்றன டிஷ்களை !

ஒரு கிராம முகம். எதைக்குறித்தும் கவலையற்ற, பதட்டமற்ற, அட்டவணைகளைப் பற்றியெல்லாம் யோசிக்காத, அறிவுஜீவித் தனமான பதில்களுக்காக நூல்களைப் புரட்டாத ஒரு எளிய மனிதர். கிராமத்து பிதாமகன் போல இருந்ததால் கிளிக்கினேன்.

“ஊர்ல இருக்கிற எல்லாரையும் போட்டோ எடுப்பே.. என்னை எடுக்கமாட்டியோ என வின்செண்ட் பூவராகன் ஸ்டைலில் கேட்ட தம்பியில் புகைப்படம்  

68 comments on “வாங்க, எங்க ஊரைச் சுத்திக் காட்டறேன்.

  1. தம்பி. கிராம நினைவுகளை அழித்தெறிவது இயலாத காரியம் 🙂 நினைவுகளேனும் இருக்கிறதே எனும் ஆனந்தம் சுகமானது !

    Like

  2. உங்கள் நினைவுகள் இன்னும் உங்கள் கிராமத்தை தழுவிக் கொண்டேதான் இருக்கின்றது. அன்பு நண்பரே தங்கள் குழந்தைகளையும் தங்கள் குடும்பத்தாரின் வளர்ப்பில் தங்கள் கிராமத்திலேயே வளர்த்தால் அவர்களுக்கும் ஒரு நல்ல குழந்தைப் பருவம் மற்றும் இளம் பருவ வாழ்க்கை கிடைக்கும் அல்லவா?
    நாம்தான் வனவாசம் போல நகரம் வந்து விட்டோம். இனிமேல் நாம் நமது ஊரிலேயே தங்கி வாழ்வது எப்போது நண்பரே?
    உங்கள் கிராமம் பாரதிராஜா பாணி கிராமம். என் கிராமம் பருத்திவீரன் பாணி கிராமம். உங்கள் கிராமம் குளிர்ச்சி. எங்கள் கிராமம் வறட்சி. ஆனால் கொளுத்தும் வெயிலிலும் கூட குதுகூலமாகத்தான் இருந்தேன் எங்கள் கிராமத்தில்.
    ஏதேதோ சொல்ல தோன்றுகிறது. நீர் மட்டும் இப்போது என் எதிரே சிக்கினால்………………? அட போங்கப்பா……..!

    Like

  3. //வணக்கம்
    எனக்கும் குமரி தான் – வடசேரி
    இயற்கை எழில் கொஞ்சும் ஏரிகளும் மலைகளும் மெதுவாக அழிகிறதோ என் அச்சம். நான் சைக்கிளில் சுற்றிய எடம் எல்லாம் இப்பபொழுது வீடாக மாறி விட்டது. என்ன செய்ய? ஆனால் நமது நினைவை யாராலும் அளிக்க முடியாது.

    //

    உண்மை. ஆனால் நமது நினைவுகளை அடுத்த தலைமுறைக்கு எப்படி பகர்த்துவது ? 😦

    Like

  4. நன்றி நண்பரே…. நீங்க எப்போ விரும்பினாலும் சொல்லுங்க… உங்களைக் கூட்டிட்டுப் போறதை விட எனக்கென்ன வேலை 🙂

    Like

  5. சினிமா லொக்கேஷன் எல்லாம் கெட்டுது போங்க…..

    அழகான ஊரு, நவீனத்தால் சூரையாடப்படாத இயற்கை, யதார்த்தம் தொலைக்காத உங்களின் வர்ணனை….இப்படி எல்லாமே பிரமாதம்ங்க….

    ஆமா, என்னை உங்க ஊருக்கு கூட்டிப்போவீங்களா 😉

    ஏன் கேக்குறேன்னா, இந்த மாதிரியான சூழலை இனி சினிமாவிலே மட்டும்தான் பார்க்கமுடியும் போலிருக்கு. படங்கள் எல்லாமே அழகுங்க. அதிலும் முயல்குட்டியோட இருக்குற உங்க பொண்ணு ரொம்ப அழகா இருக்காங்க.

    பதிவைப் படிச்சதுக்கப்புறம், மனசுல ஒரு பசுமை குடியேறுவதையும், ஏக்கம் ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை. நன்றி

    Like

  6. வணக்கம்
    எனக்கும் குமரி தான் – வடசேரி
    இயற்கை எழில் கொஞ்சும் ஏரிகளும் மலைகளும் மெதுவாக அழிகிறதோ என் அச்சம். நான் சைக்கிளில் சுற்றிய எடம் எல்லாம் இப்பபொழுது வீடாக மாறி விட்டது. என்ன செய்ய? ஆனால் நமது நினைவை யாராலும் அளிக்க முடியாது.

    Like

  7. Pingback: கல்கியில் உங்க “ஊர்ப்பாசத்தை” எழுதுங்க…. « அலசல்

  8. நண்பா நான் கல்கி இதழின் உதவி ஆசிரியர்.உங்கள் தளம் கவர்ந்தது.உங்கள் எழுத்தை பயன் படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.உங்கள் நட்பையும் தான்.தொடர்புக்கு…
    9677099669

    Like

  9. /“வீட்டைச் சுற்றி மரங்கள் என்று சொல்வதை விட மரங்களுக்கு நடுவே ஒரு வீடு என்று சொல்லலாம்”

    என்ப‌துதான் எவ்வ‌ள‌வு பெரிய‌ உண்மை.

    நான் ப‌ட்ட‌ண‌த்தில் வ‌சித்தாலும் அடிக்க‌டி ஊர் சென்று வ‌ருவ‌தை வ‌ழ‌க்க‌மாக‌க்கொண்டுள்ளேன்.

    //

    நன்றி நண்பரே 🙂

    Like

  10. நண்பர் சேவியர்,

    அருமையான ஒரு கட்டுரை.

    நானும் ஒரு அழகிய கிராமத்தைச்சேர்ந்தவன்.

    ஒவ்வோர் வரியும் உயிரோட்டமாய் இருந்தது.

    “வீட்டைச் சுற்றி மரங்கள் என்று சொல்வதை விட மரங்களுக்கு நடுவே ஒரு வீடு என்று சொல்லலாம்”

    என்ப‌துதான் எவ்வ‌ள‌வு பெரிய‌ உண்மை.

    நான் ப‌ட்ட‌ண‌த்தில் வ‌சித்தாலும் அடிக்க‌டி ஊர் சென்று வ‌ருவ‌தை வ‌ழ‌க்க‌மாக‌க்கொண்டுள்ளேன்.

    ந‌க‌ர‌ம் ந‌ர‌க‌ம்….

    Like

  11. /nanbre, sugamana sugathramana katru.rammiyamana rasanayana sulaal.naan saudil iruppathal ungal oorai parthu perumuthi vidukiren//

    பெருமூச்சு விட சவுதி போகவேண்டுமென்றில்லை. சைதாப்பேட்டையின் குறுகலான சந்தில் வாகனப் புகையையும், கொசுவையும் சொந்தம் கொண்டு வாழும் முன்னூறு சதுர அடி வாடகை அறை வாழ்க்கை போதும் 😦

    Like

  12. //ரசிகர் சேவியருக்கு,

    ஒரு நல்ல ரசிகன் தான் ஒரு மாபெரும் படைப்பாளியாக உருவெடுக்க முடியும் என்று எல்லோரையும் சொட்ட சொட்ட ரசிக்க வைக்கும் உங்கள் ஊரை நீங்கள் ரசித்து இருப்பதில் இருந்து தெரிகிறது.உங்கள் படைப்புகள் கற்பனைகளின் இமயங்களை உண்மையின் வெப்பத்தோடு தாங்கிக் கொண்டு நிற்பதற்கும்,யானையின் தும்பிக்கை பலம் கொண்டு எழுத்துக்கள் விளங்குவதற்கும் உங்கள் ஊரும், வாழ்க்கை முறையும் எந்த அளவிற்கு பேருதவி ஆற்றி இருக்கக் கூடும் என்று என்னால் யூகிக்க முடிகிறது.
    காய்ந்த பூமியாய் இருக்கும் சொந்த பூமியை திரும்பி போய் பார்க்கையிலேயே கண்ணீர் வரும். இப்படியொரு இயற்கையின் தொப்புள்கொடி இன்று அளவிலும் அற்று விழாத பூமியை ஒவ்வொரு முறை திரும்பி போய் பார்க்கையிலும் உங்கள் மனம் எவ்வளவு கனப்படும் என்று நினைத்துப் பார்க்கிறேன்.

    //

    அன்பின் குகன், எல்லோரையும் போலவே இயற்கை மீது எனக்கும் காதல் உண்டு. கிராமத்தில் எனில் வீட்டைச் சுற்றிலும் எத்தனை செடி வேண்டுமானாலும் நட்டு அழகுபார்க்கலாம், சென்னையில் … இருக்கும் அரைச் சதுர அடியில் ஒரு தொட்டிச் செடியை வைத்து அழகுபார்க்கும் சூழல் 🙂

    நன்றி..

    Like

  13. //இடுகையும் படங்களும் நன்றாக உள்ளன.
    //

    நன்றி பாலராஜன் கீதா… எப்படி இருக்கீங்க ? 🙂

    Like

  14. nanbre, sugamana sugathramana katru.rammiyamana rasanayana sulaal.naan saudil iruppathal ungal oorai parthu perumuthi vidukiren.

    Like

  15. ரசிகர் சேவியருக்கு,

    ஒரு நல்ல ரசிகன் தான் ஒரு மாபெரும் படைப்பாளியாக உருவெடுக்க முடியும் என்று எல்லோரையும் சொட்ட சொட்ட ரசிக்க வைக்கும் உங்கள் ஊரை நீங்கள் ரசித்து இருப்பதில் இருந்து தெரிகிறது.உங்கள் படைப்புகள் கற்பனைகளின் இமயங்களை உண்மையின் வெப்பத்தோடு தாங்கிக் கொண்டு நிற்பதற்கும்,யானையின் தும்பிக்கை பலம் கொண்டு எழுத்துக்கள் விளங்குவதற்கும் உங்கள் ஊரும், வாழ்க்கை முறையும் எந்த அளவிற்கு பேருதவி ஆற்றி இருக்கக் கூடும் என்று என்னால் யூகிக்க முடிகிறது.
    காய்ந்த பூமியாய் இருக்கும் சொந்த பூமியை திரும்பி போய் பார்க்கையிலேயே கண்ணீர் வரும். இப்படியொரு இயற்கையின் தொப்புள்கொடி இன்று அளவிலும் அற்று விழாத பூமியை ஒவ்வொரு முறை திரும்பி போய் பார்க்கையிலும் உங்கள் மனம் எவ்வளவு கனப்படும் என்று நினைத்துப் பார்க்கிறேன்.

    நட்புடன்
    குகன்

    Like

  16. இடுகையும் படங்களும் நன்றாக உள்ளன.

    Like

  17. //பின்ன சும்மாவா உங்கள அண்ணேன்னு கூப்பிட்டேன். (பக்கத்து ஊரு பாசந்தான்)

    //

    சந்தோசம் தங்கச்சி. 🙂

    Like

  18. //அடடா… மண்டேமார்க்கெட் என தூய தமிழில் அழைக்கும் திங்கள் சந்தையா ? நம்ம பக்கத்து ஊராச்சே

    //

    பின்ன சும்மாவா உங்கள அண்ணேன்னு கூப்பிட்டேன். (பக்கத்து ஊரு பாசந்தான்)

    Like

  19. குளச்சல் தூரமெல்லாம் போக வேண்டாம் . கன்னியாகுமரியிலிருந்து 4-வது கடற்கரை கிராமம், பள்ளம்.

    Like

  20. //சொந்த ஊர் நாகர்கோவில் பக்கத்தில் என்றாலும், என் சிறு வயதில் திங்கள்சந்தை பக்கத்தில் உள்ள ஊரில் தான் இருந்தோம்.

    //

    அடடா… மண்டேமார்க்கெட் என தூய தமிழில் அழைக்கும் திங்கள் சந்தையா ? நம்ம பக்கத்து ஊராச்சே 🙂

    Like

  21. //எனக்கு நாகர்கோவிலிருந்து 9 கி.மீ யிலுள்ள ஒரு கடற்கரை கிராமம்.//

    குளச்சல் பக்கமா ? …. ம்ம்… குளச்சல் இன்னும் தூரம்…. !

    Like

  22. //romba bayanthappala enna vambizukkiringa.ungalai bayappatakkuta vaikka mutiyuma enna?/

    கொஞ்சம் கஷ்டம் தான்… ஆனா நீங்க நினைச்சா நடக்கும் 😀

    Like

  23. //நான் கேக்க்ற கேள்விக்கு டேக் டேக் டேக்னு பதில் சொல்லனும்…
    //

    டேக் டேக் டேக்…

    //

    அடுத்த முறை ஊருக்குப் போகும்போது என்னையும் கூப்பிடுவீங்களா? //

    கண்டிப்பா… இதென்ன கேள்வி.

    //

    (பொங்கல் சமயமென்றால் வசதிப்படுமா ஆப்பிசர்?)
    //

    நிச்சயம், ஆனா 2009 பொங்கலா, 2010 பொங்கலா ??

    Like

  24. //கேரளா கணிபிஞ்சதி சரே, கேரளா அம்மாய்லு கணிபிஞ்சி லேதா… (இதனுடைய தமிழாக்கத்தைத் தந்தால் குந்தவை, கல்யாணகமலா போன்றோரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்)//

    எனிக்கு ஒந்நும் மனஸிலாகுந்நில்லா

    Like

  25. //சுற்று சூழலில் மட்டும் அல்ல.. மனதளவிலும் பல மாற்றங்களை ஏற்று கொண்டு வாழத்தான் வேண்டி இருக்கிறது….//

    முழுக்க முழுக்க உண்மை !

    Like

  26. //ஆமா ஜோ.. களியக்காவிளையிலிருந்து ஒரு 3 கிலோ மீட்டர் தூரம் இருக்கும். நீங்க ???//
    எனக்கு நாகர்கோவிலிருந்து 9 கி.மீ யிலுள்ள ஒரு கடற்கரை கிராமம்.

    Like

  27. //கொடுத்து வைத்தவர் நீங்கள். நான் சென்றவாரம் மாட்ரிடில் இருந்து சென்னை வந்ததுமே எனக்கு சொர்க்கத்தை அடைந்த திருப்தி. //

    ஓ.. இப்போ சென்னையில் தான் இருக்கிறீர்களா ? சென்னையில எங்கே இருக்கீங்க.

    Like

  28. சொந்த ஊர் நாகர்கோவில் பக்கத்தில் என்றாலும், என் சிறு வயதில் திங்கள்சந்தை பக்கத்தில் உள்ள ஊரில் தான் இருந்தோம்.

    //(இதனுடைய தமிழாக்கத்தைத் தந்தால் குந்தவை, கல்யாணகமலா போன்றோரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்)
    //

    நான் ஏண்டா தம்பி ஓங்கூட சண்டைக்கு வரப்போகிறேன் .
    என்னவோ வேற்று கிரகத்து மொழியில எழுதறதா நினைப்பாக்கும்.

    Like

  29. நான் கேக்க்ற கேள்விக்கு டேக் டேக் டேக்னு பதில் சொல்லனும்…

    அடுத்த முறை ஊருக்குப் போகும்போது என்னையும் கூப்பிடுவீங்களா? (பொங்கல் சமயமென்றால் வசதிப்படுமா ஆப்பிசர்?)

    Like

  30. ///எட்டிப் பார்த்தால் கேரளா தெரியும்///

    கேரளா கணிபிஞ்சதி சரே, கேரளா அம்மாய்லு கணிபிஞ்சி லேதா… (இதனுடைய தமிழாக்கத்தைத் தந்தால் குந்தவை, கல்யாணகமலா போன்றோரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்)

    Like

  31. *** வாழ்க்கை நமக்கு ஒவ்வோர் காலகட்டத்தில் ஒவ்வோர் விதமான வாழ்க்கை முறையைத் தருகிறது. அதை ஏற்றுக் கொண்டு வாழ்வதைத் தவிர நமக்கு வேறு வழி இல்லை ***

    உண்மை.. சுற்று சூழலில் மட்டும் அல்ல.. மனதளவிலும் பல மாற்றங்களை ஏற்று கொண்டு வாழத்தான் வேண்டி இருக்கிறது….

    Like

  32. கொடுத்து வைத்தவர் நீங்கள். நான் சென்றவாரம் மாட்ரிடில் இருந்து சென்னை வந்ததுமே எனக்கு சொர்கத்தை அடைந்த திருப்தி. இந்த படங்களை பார்க்கும்போது எனக்கும் ஒரு முறை இது போன்ற இடங்களுக்கு போக வேண்டும் என்றிருக்கிறது.

    Like

  33. அன்பின் மஹாலக்ஷ்மி. உங்கள் கடிதத்தில் காணக் கிடைக்கிறது தாய் மண்ணைவிட்டு தள்ளியே இருக்க நேர்ந்ததன் வலி. வாழ்க்கை நமக்கு ஒவ்வோர் காலகட்டத்தில் ஒவ்வோர் விதமான வாழ்க்கை முறையைத் தருகிறது. அதை ஏற்றுக் கொண்டு வாழ்வதைத் தவிர நமக்கு வேறு வழி இல்லை 😦

    Like

  34. வணக்கம் சேவியர்!

    உங்களது இந்த படைப்பு என் போன்று நகர் புறங்களில் சருகாகி கிடக்கும் நெஞ்சங்களுக்கு நேற்று பெய்த மழையை போல் இதமாய் இருந்தது!

    எத்துனை பேருக்கு வாய்க்கும் இந்த அதிர்ஷ்டம்? இது போன்ற ஒரு சூழலில் வசிப்பதே ஆனந்தம்.. அதுவும் தம்பி, மகள் மற்றும் உறவினர்களுடன் இருப்பது பஞ்சாமிர்தத்தின் மேல் தேனை விட்டு உண்ணக் கொடுத்தது போல இருந்திருக்க வேண்டும்….

    நானும் சொல்லி கொண்டு தான் இருக்கிறேன்.. என் சொந்த மண் திருநெல்வேலிக்கு அருகில் உள்ளது என்று.. ஆனால் அங்கு பெற்றோருடன் சென்று வருடக் கணக்காகி விட்டது. இந்த கட்டுரை என்னை அங்கு அழைத்து சென்ற ஒரு மன நிறைவை தந்தது…

    கண்ணிற்கு குளிர்ச்சியான மரம் செடி கொடிகள், இனிமையான அந்த மழலையின் முகம், அந்த கிராமத்து பிதாமகன், மலையின் முகத்திற்கு மேலே தவழ்ந்து கொண்டு இருக்கும் மேகம், நீரோடை.. எதை சொல்ல? எதை விட?

    டிஷ் பொருத்தி விட்டார்கள் என்று வருத்தம் கொள்ளாதீர்கள்…. அதன் மூலமாக கிராமத்து நெஞ்சங்கள் புரிந்து கொள்ளட்டும்.. நகரத்து வாசிகளாகிய நாம் எதை எதை இழந்து இருக்கிறோம் என்று…

    நன்றி நண்பரே….

    Like

  35. //அடடா!
    பார்க்கவும் படிக்கவும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது!
    நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்//

    நன்றி நண்பரே 🙂

    Like

  36. அடடா!
    பார்க்கவும் படிக்கவும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது!
    நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்!

    Like

  37. பார்த்தவுடனே பளிச்சென தெரிந்தது நம்மூர் என ..களியக்காவிளை பக்கமா?

    Like

  38. அருமையான அமைதியான எழில் கொஞ்கும் பூமி. நீங்கள் என்னுடைய நெருக்கமான நண்பராக இருந்திருக்க கூடாதா? அப்படியானால் இந்த சுகந்த சூழலை அனுபவித்து இருக்கலாமே என்னும் ஆதங்கம் நெஞ்சை அழுத்துகிறது.
    “சாரே ஜகான்சி அச்சா………” உண்மையே என்று புலபடுத்தியதற்கு நன்றி
    நெய்னா முஹம்மது

    Like

  39. //நானும் அடுத்த மாசம் ஊருக்கு போகிறேன் .(குமரி தான் எனக்கும்)//

    ஓ.. குமரியில் எங்கே ?

    Like

  40. //அச்சோ…திண்ணை இருக்கிற வீடு,அன்னாசிப்பழம் மரத்தில இருக்கு.அம்மாடி…என்ன சொல்ல!பாரதி சொன்னமாதிரி மரங்களுக்கு நடுவில ஒரு அழகான வீடு.அதுதான் கிராமத்துக்கு அடிக்கடி ஓடி ஓடிப்போறிங்க.இப்போ வந்த 3 நாள் விடுமுறை தந்த அழகான பதிவோ இது!இன்னும் நிறையச் சொல்லுங்க அண்ணா.

    //

    அதே !!! கரெக்ட்டா புடிச்சுட்டீங்க 🙂

    Like

  41. //நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் என்பதுபோல உள்ளது உங்களது நகர வாழ்க்கையும்,கிராம அனுபவமும்.

    //

    கலக்கலா சொன்னீங்க…

    Like

  42. //உங்களை மேலும் அறிந்துக் கொள்ள வாய்ப்பாக அமைந்தது. மிக்க நன்றி அண்ணே… அழகான கிராமம் அமைதியான வாழ்க்கையைக் கொடுக்கும்//

    உண்மை. இந்தியா வரும்போ சொல்லு… ஊருக்கு ஒரு விசிட் அடிப்போம்.

    Like

  43. //எங்கன இருக்குன்னு தேடி கண்டுபிடிக்க வேண்டியதாப்போச்சு. குறிச்சொற்களை பாத்து குமரின்னு கண்டுபிடிச்சிட்டேன்//

    ஓ… மன்னியுங்கள். குமரிமாவட்டத்தில் மார்த்தாண்டம் என்னும் ஊரிலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது எங்கள் கிராமம் 🙂 எட்டிப் பார்த்தால் கேரளா தெரியும் 😀

    Like

  44. //அய்யா, அழகான இயற்கைச் சூழல்! ஆனா, இப்படி வெளிய சொன்னீங்க, சனங்க இதையும் விட்டு வைக்க மாட்டாங்க!
    நீங்க அதிர்ஷ்டசாலி இப்படி ஒரு கொடுப்பினை….

    //

    அன்பின் பழமைபேசி, நன்றி. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

    Like

  45. நானும் அடுத்த மாசம் ஊருக்கு போகிறேன் .(குமரி தான் எனக்கும்)

    Like

  46. அச்சோ…திண்ணை இருக்கிற வீடு,அன்னாசிப்பழம் மரத்தில இருக்கு.அம்மாடி…என்ன சொல்ல!பாரதி சொன்னமாதிரி மரங்களுக்கு நடுவில ஒரு அழகான வீடு.அதுதான் கிராமத்துக்கு அடிக்கடி ஓடி ஓடிப்போறிங்க.இப்போ வந்த 3 நாள் விடுமுறை தந்த அழகான பதிவோ இது!இன்னும் நிறையச் சொல்லுங்க அண்ணா.

    Like

  47. நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் என்பதுபோல உள்ளது உங்களது நகர வாழ்க்கையும்,கிராம அனுபவமும்.

    Like

  48. உங்களை மேலும் அறிந்துக் கொள்ள வாய்ப்பாக அமைந்தது. மிக்க நன்றி அண்ணே… அழகான கிராமம் அமைதியான வாழ்க்கையைக் கொடுக்கும்…:)

    Like

  49. எங்கன இருக்குன்னு தேடி கண்டுபிடிக்க வேண்டியதாப்போச்சு. குறிச்சொற்களை பாத்து குமரின்னு கண்டுபிடிச்சிட்டேன்.

    Like

  50. அய்யா, அழகான இயற்கைச் சூழல்! ஆனா, இப்படி வெளிய சொன்னீங்க, சனங்க இதையும் விட்டு வைக்க மாட்டாங்க!
    நீங்க அதிர்ஷ்டசாலி இப்படி ஒரு கொடுப்பினை….

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.