பாடல் : வெட்கம் வழியும் இரவில்

பீலிபெய் சாகாடும்
                 மெல்லமே மெல்லமே 
தேனும் திகட்டிவிடும்
                  செல்லமே செல்லமே

உன்னழகு மட்டுமேனோ திகட்ட மறுக்குதடி
தின்னத் தின்னத் தீராம பசியைப் பெருக்குதடி.

உறுமீனைக் காத்திருந்த
                       ஒத்தக்காலு கொக்குநான்
கண்டபின்னே சுத்திச் சுத்தி
                      சொக்குகிற செக்குநான்.

1

ஆண்:

ஆறு மீட்டர் அருவி இழுத்து
போர்த்திக் கிட்டுப் படுப்பமா ?

பெண்

நூறு மீட்டர் காற்றை இறுக்கி
தலையணையாக் கொடுப்பமா ?

ஆண்

மின்மினிகள் கூட்டி வந்து
ஓரமாய் நிறுத்தவா
மின்னுமந்த சின்ன ஒளி
பாரமாய் இருக்குமா ?

பெண்

நான்கு கண்கள் சிந்தும் ஒளி
காமனுக்குப் போதுமே
மின்மினிகள் கூட்டி வந்தால்
வெட்க ஒளி கூடுமே.

2

 

ஆண்

நட்ட நடு ராத்திரியில்
அச்சப் புயல் அடிக்குமே,

பெண்

விட்டு விட நினைக்குமுன்னே
மோக மழை நனைக்குமே.

ஆண்

எட்டிப் பார்க்கும் வட்ட நிலா
வெட்கம் கொண்டு சிரிக்குமே
ஓடுகின்ற முகிலுக்குள்ளே
வட்ட முகம் மறைக்குமே.

பெண்

வானநிலா நாணம் கண்டு
மாடிநிலா நாணுமே
மூட ஆடை இல்லையென
ஆளை மூடிக் கொள்ளுமே.

0

20 comments on “பாடல் : வெட்கம் வழியும் இரவில்

  1. அட… யார் இது ?? காதல் இளவரசன் நவீனா !!! வாங்க நண்பரே.. நன்றி, உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் 🙂

    Like

  2. //வானநிலா நாணம் கண்டு
    மாடிநிலா நாணுமே
    மூட ஆடை இல்லையென
    ஆளை மூடிக் கொள்ளுமே //

    சேவியர்..
    woww….கலக்குறீங்க…
    மிகவும் அருமை…. :))

    Like

  3. //நண்பர் சேவியருக்கு,

    கோடம்பாக்கம் காற்று வீசியதா?. கட்டில் பாட்டு மெட்டு இல்லாமல் கூட தாளம் போட வைக்கிறது.கடைசியில் இருக்கும் க்ளைமாக்ஸ் வரிகள் சூப்பர் !
    “மூட ஆடை இல்லையென
    ஆளை மூடிக் கொள்ளுமே.”
    //

    ரொம்ப ரொம்ப நன்றி குகன் 🙂

    Like

  4. நண்பர் சேவியருக்கு,

    கோடம்பாக்கம் காற்று வீசியதா?. கட்டில் பாட்டு மெட்டு இல்லாமல் கூட தாளம் போட வைக்கிறது.கடைசியில் இருக்கும் க்ளைமாக்ஸ் வரிகள் சூப்பர் ! 🙂
    “மூட ஆடை இல்லையென
    ஆளை மூடிக் கொள்ளுமே.”

    அன்புடன்
    குகன்

    Like

  5. //இது ஏதாவது ஏற்கெனெவே இருக்கிற பாடலின் மெட்டுக்குள் அடங்குமாறு எழுதி இருக்கிறீர்களா என்ன?//

    இல்லை..

    //
    அப்படி எதுவும் எழுதிப் பார்த்து இருக்கிறீர்களா?
    //

    இல்லை 🙂

    Like

  6. //சேவியர் அண்ணா சுகம்தானே!உங்கள் கிராமத்துப் பதிவுக்குப் பிறகு அடுத்த பதிவுகள் இன்னும் அதை மிஞ்சாமல் இருக்கிறது.
    பின்னூட்டத்திற்கு பின் நிற்கிறேன்.
    //

    எட்டிப்பார்த்தமைக்கு நன்றி தங்கையே 🙂

    Like

  7. இது ஏதாவது ஏற்கெனெவே இருக்கிற பாடலின் மெட்டுக்குள் அடங்குமாறு எழுதி இருக்கிறீர்களா என்ன?
    அப்படி எதுவும் எழுதிப் பார்த்து இருக்கிறீர்களா?

    Like

  8. சேவியர் அண்ணா சுகம்தானே!உங்கள் கிராமத்துப் பதிவுக்குப் பிறகு அடுத்த பதிவுகள் இன்னும் அதை மிஞ்சாமல் இருக்கிறது.
    பின்னூட்டத்திற்கு பின் நிற்கிறேன்.

    Like

  9. சேவியர்,

    ஒரு நல்ல திரை இசைப் பாடல் போல் உள்ளது. வாழ்த்துக்கள்.

    அனுஜன்யா

    Like

  10. சேவியர் அண்ணே பாட்டு சூப்பரா இருக்கு…

    //ஆறு மீட்டர் அருவி இழுத்து
    போர்த்திக் கிட்டுப் படுப்பமா ?

    பெண்

    நூறு மீட்டர் காற்றை இறுக்கி
    தலையணையாக் கொடுப்பமா ?//

    தொட்டுடிங்க…

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.