கவிதை : எனக்குப் பின்னால் வாருங்கள்…

விடாமல் ஒடும்
கடிகாரங்களே
உங்கள்
ஓட்டத்தை
முடித்துக் கொள்ளுங்கள்.

புல்லாங்குழல்களே
உங்கள்
துளைகளை
பொத்திக் கொள்ளுங்கள்.

குயில்களே
பருக்கைகளுக்காக மட்டுமே
இனி
அலகு திறவுங்கள்.

இசைக் கருவிகள்
மௌனம் மட்டும்
வெளித்தள்ளட்டும்.
பல்லவி தவறாத பாடல்கள்
இனி வேண்டாம்.

பூக்களே
பேசாமல்
மொட்டுக்குள் சென்று
பூட்டிட்டுக் கொள்ளுங்கள்.

நகர வேண்டாம் நதிகளே
நின்ற நிலையிலேயே
உறைந்து விடுங்கள்.
இல்லையேல்
ஆவியாகிக் கரைந்து விடுங்கள்.

கொஞ்ச காலம்
என்னைத் தொடாதே
தென்றலே,
வருடாதே வெயிலே.

எழுப்பாதீர்கள்
அதிகாலைச் சேவல்களே,
சிரிக்காதீர்கள்
அடிவான மின்னல்களே.

ஓட்டத்தை நிறுத்த மறுக்கும்
உங்கள்
ஒவ்வோர் அசைவும்
ஓடிப் போன
அவள் நினைவுகளை
அள்ளி அள்ளிக் கொட்டுகிறது.

கொஞ்சம்
கருணை காட்டுங்கள்.
புதைத்ததையே  நான்
மறக்கும் வரை
பொறுத்திருங்கள்.

தோண்டி எடுக்கச் சொல்லி
தொந்தரவு செய்யாதீர்கள்.

Advertisements

19 comments on “கவிதை : எனக்குப் பின்னால் வாருங்கள்…

 1. ஐயோ….. என்ன இப்படி சோகமாக்கி விட்டீர்கள்??
  எதிர்மறைக் கவிதையாக இருந்தாலும் அருமையான ஜகவிதை.
  அன்புடன் அருணா

  Like

 2. அருமை!!

  ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை, ஏன் பெண்களையே எல்லோரும் சாடுகிறீர்கள் என்று!

  இதை ரசிக்க என் மனம் எத்தனிக்கும் அதே வேளையில் என் இனத்தையே இந்த ஆண் வர்கக் கவிஞர்கள் சாடுவதை என்னால் சிறிதளவும் ஒப்புக்கொள்ள இயலவில்லை. பெண் மட்டுமே ஆணை விட்டு விலகி செல்வாள் என்று எதை வைத்து முடிவு செய்து கொண்டீர்கள்? ஆண்களில் சிலரும் இவ்வண்ணம் செய்கிறார்கள் என்பதை நீங்கள் மறைக்கவா? இல்லை மறுக்கவா?

  கைவிடப்பட்ட என் வர்கத்தவர் கவிதை எழுத ஆரம்பித்து இருந்திருந்தால், ஒரு வேளை, நிலவை பெண்ணுக்கு உவமையாக ஏற்றுக் கொண்டதை போல, மீதம் இருக்கும் கோள்களில் ஒன்றை ஆணுக்கு உவமையாக இவ்வையகம் ஏற்றுக் கொண்டு இருக்குமோ?

  வாழிய உமது கற்பனை!

  அதே வேளையில் கொஞ்சம் பரிவு காட்டுங்கள்… மெல்லிய வர்கத்தின் மீது…

  அவர்களும் சில சமயம் உங்களைப் போல் பாரம் சுமக்கிரவர்களே…

  ஒரு ஆணின் எண்ணக் குமுறல்களை அற்புதமாக மொழி பெயர்த்து உள்ளீர்கள்…

  மஹாலக்ஷ்மி.

  Like

 3. //ஒரு ஆணின் எண்ணக் குமுறல்களை அற்புதமாக மொழி பெயர்த்து உள்ளீர்கள்…//

  தோழி, நான் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் ஒருவேளை பெண்ணின் பார்வையில் எழுதியிருப்பேன். 😦

  பெண் மட்டுமே ஆணை விலகிச் செல்வாள் என நான் நினைக்கவே இல்லை. அப்படி விலகிச் சென்ற ஆணைப் பற்றி திட்டிக் கொண்டே கவிதை எழுதி ஆண்களைப் போல பெண்கள் பரபரப்புக் கிளப்புவதில்லை என நினைக்கிறேன் 😉

  Like

 4. பெண்களின் சார்பில் ஒரு பொதுவான கருத்து தான் அது…

  ***
  தோழி, நான் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் ஒருவேளை பெண்ணின் பார்வையில் எழுதியிருப்பேன்.
  ***

  ஒரு வேளை ஏதும் தவறாக சொல்லி விட்டேனோ… உங்கள் முகம் வாடி இருக்கிறதே… (வாக்கியத்தின் முடிவில் உள்ள emoticon காப்பி பேஸ்ட் ஆகவில்லை)

  ***
  அப்படி விலகிச் சென்ற ஆணைப் பற்றி திட்டிக் கொண்டே கவிதை எழுதி ஆண்களைப் போல பெண்கள் பரபரப்புக் கிளப்புவதில்லை என நினைக்கிறேன்
  ***

  பல சமயங்களில் உண்மை…

  மஹாலக்ஷ்மி.

  Like

 5. அன்புள்ள சேவியருக்கு,

  பழைய காதலியின் நினைவுகளை இயற்கையின் தழுவல்கள் மீட்டு எடுக்கையில், கருந்தேளின் கொடுக்குகள் நெஞ்சில் கொட்டினால் உண்டாகும் வலி ஏற்படுத்தும் . அந்த வலியின் சாரத்தை கொஞ்சமும் கீழ் சிந்தாமல் வரிகளில் வடிகட்டி உள்ளீர்கள்.நெடுநேரம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருப்பவன் , தூரத்தில் வரக் கூடிய பேருந்து தன் வழித்தடம் செல்லுவதாக இருக்கும் என்ற நம்பிக்கை தாங்கி கொண்டிருப்பான். அதே நம்பிக்கை நீங்கள் சொல்லும் காதலன் கண்களில் தெரிவது உங்கள் கடைசி இரண்டு பத்தியின் வரிகளின் மூலமாய் புலப்படுகிறது.

  கொஞ்சம்
  கருணை காட்டுங்கள்.
  புதைத்ததையே நான்
  மறக்கும் வரை
  பொறுத்திருங்கள்.

  தோண்டி எடுக்கச் சொல்லி
  தொந்தரவு செய்யாதீர்கள்.

  நட்புடன்
  குகன்

  Like

 6. /ஒரு வேளை ஏதும் தவறாக சொல்லி விட்டேனோ… உங்கள் முகம் வாடி இருக்கிறதே//

  இல்லை இல்லை… விமர்சனங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், இருக்க வேண்டும்.

  உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றிகள் பல.

  Like

 7. //நெடுநேரம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருப்பவன் , தூரத்தில் வரக் கூடிய பேருந்து தன் வழித்தடம் செல்லுவதாக இருக்கும் என்ற நம்பிக்கை தாங்கி கொண்டிருப்பான். //

  குகன்… பிரமிக்க வைக்கிறீர்கள். உண்மையிலே பல வேளைகளில் உங்கள் பின்னூட்டங்கள் படைப்பை விட அதிகமாய் வசீகரிக்கின்றன. நன்றிகள் பல.

  Like

 8. நான் கவிதையை இரசிப்பதை பிடிக்காமல் அந்தப் படம் என் கவனத்தைச் சிதர வைக்கிறது 😦

  Like

 9. இந்த நக்கல் தானே வேணாங்கறது … இந்தக் கவிதையை ரசிக்க விடாமல் எழுத்துக்கள் பிரச்சனை பண்ணுகிறதுன்னு வேணும்ன்னா சொல்லு… 😉

  Like

 10. good vikkneshwaran u will,,,, can,,,,, become a kaviger may be u allready u wrote tamil type pana varathu english romba kastam

  Like

 11. அருமையான கவிதை. அழகான வார்த்தையாடல்.
  மிக நல்லா எழுதியிருக்கீங்க சேவியர் அண்ணா.

  Like

 12. //அருமையான கவிதை. அழகான வார்த்தையாடல்.
  மிக நல்லா எழுதியிருக்கீங்க சேவியர் அண்ணா.

  //
  நன்றி தம்பி. வருகைக்கும், கருத்துக்கும் அன்புக்கும். 🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s