கவிதை : தொலை நகரம்

இன்னும் கொஞ்ச தூரம் தான்
கால்களைக் கொஞ்சம்
வலுவாக்கு.

அடுத்தவன் கனவுகளுக்குள்
படுத்துக் கிடக்கும்
உன் பார்வைகளின்
சோர்வகற்று.

அறுவடைக் காலத்தில்
நண்டு பிடிப்பதை விட
கதிர் அறுப்பதல்லவா
அவசியம்,

வா,
இன்னும் கொஞ்ச தூரம் தான்.

அதோ தெரிகிறதே
ஓர் வெளிச்ச பூமி
அங்கு தான் செல்லவேண்டும்.

பரிச்சயமான
பிரதேசமாய் தோன்றுகிறதா ?
அது வேறெங்கும் இல்லை
உன்னுள் தான் இருக்கிறது.

நீதான்
வெகுதூரம் சென்று விட்டாய்.

14 comments on “கவிதை : தொலை நகரம்

 1. எங்களுக்குள் இருக்கும் திறமைகளையும் ஆற்றல்களையும் கவனிக்காமல் அடுத்தவர்களைப் பற்றிப் பேசுவதும் பொறாமைப் படுவதுமாகவே மனிதனின் வாழ்க்கை.இதைத்தானே இந்தக் கவிதை சொல்கிறது?

  Like

 2. //எங்களுக்குள் இருக்கும் திறமைகளையும் ஆற்றல்களையும் கவனிக்காமல் அடுத்தவர்களைப் பற்றிப் பேசுவதும் பொறாமைப் படுவதுமாகவே மனிதனின் வாழ்க்கை.இதைத்தானே இந்தக் கவிதை சொல்கிறது?

  //

  அதையே தான் சகோதரி

  Like

 3. //அறுவடைக் காலத்தில்
  நண்டு பிடிப்பதை விட
  கதிர் அறுப்பதல்லவா
  அவசியம்,//
  ஏதோ எனக்கு நேரடியாக சொன்ன போதனை போல் உணர்ந்தேன்…….செய்யவேண்டிய வேலைகள் எவ்வளவோ இருக்க அனாவசிய வேலைகளையே ஒரு வார காலமாக செய்துகொண்டிருக்கிறேன். Excellent line.

  Like

 4. //ஏதோ எனக்கு நேரடியாக சொன்ன போதனை போல் உணர்ந்தேன் //

  கவிதை இனிமேல் நிம்மதியாய் துயில் கொள்ளும் 🙂

  நன்றிகள் பல

  Like

 5. “adutthavan kanavukkul paduthu kidakkum.”.. varigal
  aayirum sinthanaigalai nenjil thoondughirathu.
  valzthukkal.

  Like

 6. சேவியர் ,

  கொஞ்ச தூரம் கொஞ்ச தூரம் என்று சொல்லி நிறைய தூரம் கூட்டிச் செல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்.சொன்னபடியே, கொஞ்ச தூரத்திலேயே முடித்து விட்டீர்கள் 😉

  அறுவடைக் காலத்தில்
  நண்டு பிடிப்பதை விட
  கதிர் அறுப்பதல்லவா
  அவசியம்,

  எப்பொழுது எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை மிக சாதாரணமாய் சொல்லி விட்டீர்கள் !

  Like

 7. /“adutthavan kanavukkul paduthu kidakkum.”.. varigal
  aayirum sinthanaigalai nenjil thoondughirathu.
  valzthukkal//

  நன்றி பிரான்சிஸ். வருகைக்கும், ரசித்தமைக்கும். 🙂

  Like

 8. //கொஞ்ச தூரம் கொஞ்ச தூரம் என்று சொல்லி நிறைய தூரம் கூட்டிச் செல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்//

  🙂

  //எப்பொழுது எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை மிக சாதாரணமாய் சொல்லி விட்டீர்கள் //

  நன்றிகள் பல குகன். 🙂

  Like

 9. உன்
  கவிதை புரிந்தவன்-அக
  தூரம் உணர்ந்திடுவான்
  புற தூரம் அளப்பவன்
  உன் சாரம் அறிந்திடன்

  Like

 10. //உன்
  கவிதை புரிந்தவன்-அக
  தூரம் உணர்ந்திடுவான்
  புற தூரம் அளப்பவன்
  உன் சாரம் அறிந்திடன்//

  நன்றி தஞ்சையன்…

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s