கவிதை : அவளது கண்ணீரில் காதல்


 

பிரியமே,
எப்படிச் சாகடிப்பது
உன் நினைவுகளின்
இராவணத் தலைகளை ?

0

மழை பெய்து முடித்த
ஓர் ஈர இரவில்,
அக்ரகாரத்து ஓரத்தில்
அணையாமல் அலையும்
அகல்விளக்காய்,
சுருள் முடிகள் அலைய,
வெளிச்சம் விட்டு
வெளியேறுகின்றன
என் சிந்தனைகள்.

ரோஜாப் பூவின் கழுத்தை
மெல்லமாய் கிள்ளுவதை
காணும் போதெல்லாம்,
சைவக் கிளி
ஏன் பூவைக் கொல்கிறது
என்பாய்,

மருதாணித் தளிர்களை
உதடுகளில் இட்டாயா
என
உத்தரவு தருமுன்
உதடு வருடுவாய்.

இப்போதெல்லாம்
நான்
துளசிச் செடிமீது,
கூந்தல் ஈரத்தை
சொட்டும் போது
அதுவும் என்னோடு அழுவதாய்
அசாதாரணப் பிரமை எனக்கு.

என்
பூஜையறைக் கண்ணீரில்
சமீபகாலமாய்
பக்தியின் நதி பாயாமல்
காதலின்
கடலே கொந்தளிக்கிறது.

உதடுகள் இழுக்கும்
மந்திரங்களின் தேர்கள்
ஓர்
இயந்திரத் தனமாகவே
இயங்குகின்றன.

உன் பத்ரகாளியும்,
என் அக்ரகாரமும்
உனக்கும் எனக்கும் இடையே
பாலம் கட்ட
தடை போட்டபின்,

நிச்சயமற்ற பச்சையமாய்
சில
நிறக்கலவைகள் நம் வாழ்வில்,

வீற்றிருக்கும் காலங்கள்
என்
காயங்களை
ஆற்றியிருக்கக் கூடும்.

ஏன் தான்
போட்டுத் தொலைத்தாய் ?
உன் மழலைக்கு
என் பெயரை ?

65 comments on “கவிதை : அவளது கண்ணீரில் காதல்

  1. how to type in tamil
    please inform thru mai
    mail id :rsmjani@yahoo.com

    //

    கூகிள் டிரான்ஸ்லேட்டர், ஆவாரங்கள், அழகி, என்.ஹைச்.எம் .. இன்னும் பல !

    Like

  2. //உன்னைப் பார்த்துப் பிறந்ததுதானே என் காதலும்?
    ஒருவேளை உன்னைப் போல அதுவும் பொன்னிறமோ?

    உன்னிடம் என் காதலைச் சொல்லும் வரை
    அது எந்த நிறமென எனக்கும் சந்தேகம்தான்…

    ஆனால் உன்னிடம் சொல்லியபின்தான்
    நீ மறுத்துவிட்ட துக்கத்தை சுமந்து
    எப்போதும் கருப்பாய்த் திரிகிறதடி என் காதல்!
    என்னைப் போல…
    //

    வாவ்… அருமை…

    Like

  3. //காதலனுக்கு மயிலிறகு வருடலின் சுகத்தைக் கொடுக்கும்.கூடவே ஒரு கேள்வி கொடுக்கும். அந்தக் கேள்வி தான் மேலே குறிப்பிட்ட உங்கள் வரிகள் !!!!!அருமை !!!!!!/

    நன்றி அருள்.

    Like

  4. Ennavalukku samarpanam, en kavithai, onmai kural en kuruthe el erunthu… On pasathukkaga orugum aanayum melugu varthi…

    Like

  5. Ennavalukku samarpanam, en kavithai, onmai kural en kuruthe el erunthu.. On pasathukkaga orugum aanayum melugu varthi..

    Like

  6. Na onnai nenaikkatha nodi intha ulagathi ellai, ne enn rathathil kalanthaval, ne en suvasam, onnai nan edaiveli ellamal suvasikkiren, aanal ippoluthu on pirivu nal oruvanathu thaan pacific perung kadal endru oonalgirn, aanal intha ninaivugal endrum ennai thunburuthi onnai en manathil vittu neelaamal pathukkolum.. ippadikku endrum ne manathil valum oru eeniya ____,Kadavulukku therintha onnami…….

    Like

  7. காதலனுக்கு மயிலிறகு வருடலின் சுகத்தைக் கொடுக்கும்.கூடவே ஒரு கேள்வி கொடுக்கும். அந்தக் கேள்வி தான் மேலே குறிப்பிட்ட உங்கள் வரிகள் !!!!!அருமை !!!!!!

    Like

  8. உன்னைப் பார்த்துப் பிறந்ததுதானே என் காதலும்?
    ஒருவேளை உன்னைப் போல அதுவும் பொன்னிறமோ?

    உன்னிடம் என் காதலைச் சொல்லும் வரை
    அது எந்த நிறமென எனக்கும் சந்தேகம்தான்…

    ஆனால் உன்னிடம் சொல்லியபின்தான்
    நீ மறுத்துவிட்ட துக்கத்தை சுமந்து
    எப்போதும் கருப்பாய்த் திரிகிறதடி என் காதல்!
    என்னைப் போல…

    Like

  9. உன்னிடம் சொல்லிவிடத் துடித்த போதெல்லாம்
    ஓடி ஒடி ஒளிந்து கொண்டதே!
    அப்படி வெட்கப் பட்டு வெட்கப்பட்டு சிவந்து கிடந்ததோ என் காதல்?

    மகிந்தன் கொக்கட்டிச்சோலை G~MAIL mynthan1993@gmail.com makinthan02@gmail.com

    Like

  10. Anpu SakooThrar KuripPidaThu PoonRu “” Internet Addiction Disorder(IDA) EénRu KuriPidaVai MuiRilum UnMai Ex:- Pala ILam,Nadu Thra Vatathu(Age) U.S.A, Kanada, PoonRa NaaDukalilum, Ajiroppaa(Europ) NaaDukaliLum YaaRooVaalipan(Young) PadathThai PaarthThu KaaThalithThu 70-89 Vayathi NaRudan Maaddi ThavikKiRaarKal AvarKal Uthavi Yudan MiiThi VipaSaaRamuMaaKaNadkkirathu;InTha VidayathTHAI Ala KaaKaa SuddikKaaDiyaMaikKu NanriKal. UnmaiKal Eén Rum PoojipPaThillai,KaaThal KuRuDuKal VipaSaaRan EnRum Eéngum NilaipPaThil Lai. Nanri K.SIVA(Fr)”France.”

    Like

  11. ரோஜாப் பூவின் கழுத்தை
    மெல்லமாய் கிள்ளுவதை
    காணும் போதெல்லாம்,
    சைவக் கிளி
    ஏன் பூவைக் கொல்கிறது
    என்பாய்,

    Like

  12. //sirappakagaullathu ………, சைவக் கிளி
    ஏன் பூவைக் கொல்கிறது
    என்பாய்,
    en manathai eerthathu!!!!!//

    நன்றி சஞ்சித் 🙂

    Like

  13. //பிள்ளைக்குப் பெயர் வைப்பதை விட,
    மயிலிறகை நெஞ்சில் பத்திரமாய் சுமப்பது காதலுக்கு புனிதம் சேர்க்குமே!….//

    ஒரு பொண்ணோட மனசு ஒரு பெண்ணுக்குத் தான் தெரியும்ன்னு யாரோ சொல்லுவாங்க.. அதனால நீங்க சொன்னது சரியா தான் இருக்கும் 🙂

    Like

  14. //சைவக் கிளி
    ஏன் பூவைக் கொல்கிறது//

    ஒரு பெண் பாடும் “ரணக் கவி” ஒவ்வொரு வார்த்தையிலும் இழையோடுகிறது… அற்புதம் சேவியர்!… வாழ்த்துகள்!!!

    அது சரி,
    பிள்ளைக்குப் பெயர் வைப்பதை விட,
    மயிலிறகை நெஞ்சில் பத்திரமாய் சுமப்பது காதலுக்கு புனிதம் சேர்க்குமே!….
    இல்லையா பின்ன???…. அப்படின்னா நான் சொன்னதை சுவடே இல்லாமல் அழிச்சிடுங்க! 🙂 😉

    Like

  15. sirappakagaullathu ………, சைவக் கிளி
    ஏன் பூவைக் கொல்கிறது
    என்பாய்,
    en manathai eerthathu!!!!!

    Like

  16. /it is useful site regarding your wories in the internet browsing it is acceptable , but this article also comes in the internet. thank u .//

    திருநெல்வேலிக்கே அல்வாங்கறது இது தான் 😀

    Like

  17. /Padathula irukka ponnu peru “Mamtha Mohandas”……Enna madhiri elangargal pala peroda sandegadha thirkka sandharpatha kudutha xavier vazhga……..

    Pin Kurippu: Sivapathigaram padathin kadhai naayagi(Tamila sollanumna heroine)….

    //

    அட,,, நிறைய மேட்டர் தெரிஞ்சு வெச்சிருக்கீங்க… ம்ம்ம்ம் 😉

    Like

  18. //“உன் பத்ரகாளியும்,
    என் அக்ரகாரமும்
    உனக்கும் எனக்கும் இடையே
    பாலம் கட்ட
    தடை போட்டபின்,”

    Sadhiyin ratcha naakku kadhalai micham illaamal thingirathai achamillaamal sollkiradhu indha varigal…….
    //

    நன்றி நண்பரே… 🙂

    Like

  19. இணைய பழக்கத்துக்கு அடிமையாதல் ( Internet Addiction Disorder – IAD ) எனும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி இணையத்தில் உலவத் தோன்றும், நள்ளிரவில் எழும்பி மின்னஞ்சல் வந்திருக்கிறதா என பார்க்கத் தோன்றும், இணைய இணைப்பு இல்லாவிட்டால் எதையோ பறிகொடுத்தது போல் தோன்றும், சாப்பிட மறந்து போகும் என விளக்குகிறார் இந்த அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர். இப்படிப் பட்டவர்களை கண்டறிந்து உடனடியாக மருத்துவ உதவிக்கோ, ஆலோசனைக்கோ வழி செய்தல் அவசியம்.

    Like

  20. Padathula irukka ponnu peru “Mamtha Mohandas”……Enna madhiri elangargal pala peroda sandegadha thirkka sandharpatha kudutha xavier vazhga……..

    Pin Kurippu: Sivapathigaram padathin kadhai naayagi(Tamila sollanumna heroine)….

    Like

  21. “உன் பத்ரகாளியும்,
    என் அக்ரகாரமும்
    உனக்கும் எனக்கும் இடையே
    பாலம் கட்ட
    தடை போட்டபின்,”

    Sadhiyin ratcha naakku kadhalai micham illaamal thingirathai achamillaamal sollkiradhu indha varigal…….

    Like

  22. //தொலைநோக்கியால் உற்று நோக்குகையில் மட்டுமே கண்ணுக்கு தெரியும் பெயரிடப்படாத வால் நட்சத்திரம் போல//

    //எப்படி தங்கத்தை செம்பின் கலப்பிற்கு ஏற்ப தரம் பிரித்து வைக்கிறார்களோ//

    கலக்கறீங்க குகன்.. இத்தனை உவமைகளோடு பின்னூட்டமிடும் ஒரே நபர் நீங்கள் நான்னு நினைக்கிறேன். 🙂

    //குழந்தையின் தப்பான மொழி கூட தாய்க்கு கவிதையாக விளங்குவது போல, காதலியின் இயல்பான செயல் கூட காதலனுக்கு மயிலிறகு வருடலின் சுகத்தைக் கொடுக்கும்//

    வெகு அருமை. 🙂

    நன்றிகள் பல.

    Like

  23. அன்புள்ள சேவியருக்கு.

    தொலைநோக்கியால் உற்று நோக்குகையில் மட்டுமே கண்ணுக்கு தெரியும் பெயரிடப்படாத வால் நட்சத்திரம் போல,படைப்பின் தலைப்பை உற்றுப் படித்த பின் ,வரிகளைக் கூர்ந்து படிக்கையில் மட்டுமே இது பெண்ணுடைய காதல் வலி பற்றியது என்று உணர வைக்கிறது. எப்படி தங்கத்தை செம்பின் கலப்பிற்கு ஏற்ப தரம் பிரித்து வைக்கிறார்களோ , அதே போல இந்து மதத்தில் கடவுளைக் கூட வெவ்வேறு சாதிகளின் வகைக்கு ஏற்ப பிரித்து வைத்து வழிபடும் துயரம் நிகழ்கிறது என்பதையும், ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனுக்கும்,உயர் சமூகம் சார்ந்த பெண்ணுக்குமான காதல் என்பதையும் ” உன் பத்ரகாளியும் என் அக்ரகாரமும்” என்ற நான்கு சொற்களில் ‘நறுக்’ என நாசூக்காய் குறிப்பிட்டது மிகவும் சிறப்பம்சம்!

    சைவக் கிளி
    ஏன் பூவைக் கொல்கிறது
    என்பாய்,

    குழந்தையின் தப்பான மொழி கூட தாய்க்கு கவிதையாக விளங்குவது போல, காதலியின் இயல்பான செயல் கூட காதலனுக்கு மயிலிறகு வருடலின் சுகத்தைக் கொடுக்கும்.கூடவே ஒரு கேள்வி கொடுக்கும். அந்தக் கேள்வி தான் மேலே குறிப்பிட்ட உங்கள் வரிகள் !!!!!அருமை !!!!!!

    நட்புடன்
    குகன்

    Like

  24. //நமக்கு இந்த மேட்டர் சரி வராது… எத்தன பிள்ளைங்களுக்கு எத்தன பேர் வைக்கிறது… எனக்கே கணக்கு தெரியலயே//

    எல்லா பெயரில் இருந்தும் ஒவ்வொரு எழுத்தை எடுத்து பெயர் வைக்க வேண்டியாது தானே

    Like

  25. //படத்தில் இருக்கும் ‘பேபி’ யாரு?//

    ஏதோ மமதாவாம்… மோகன் தாஸாம்.. யாருக்குத் தெரியும் 😉

    Like

  26. நமக்கு இந்த மேட்டர் சரி வராது… எத்தன பிள்ளைங்களுக்கு எத்தன பேர் வைக்கிறது… எனக்கே கணக்கு தெரியலயே…

    Like

  27. //குழந்தையின் உருவத்திலாவது அழிக்கப்பட்ட காதல் வாழ்ந்துகொண்டிருக்கிறது//

    காதல் வாழ்ந்து குடும்பம் அழியாமல் இருந்தால் சரி 😀

    Like

  28. அழகாய் காட்டியிருக்கிறீர்கள் காதலுக்குத் தடை சாதி வேற்றுமையென்று.குழந்தையின் உருவத்திலாவது அழிக்கப்பட்ட காதல் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.