தூக்கத்திலும்
ஆங்கிலம் உளறும் குழந்தைகளால்
நிரம்பி வழிகின்றன
பிளே ஸ்கூல்கள்.
கான்வெண்ட் கதவருகே
காரிலிருந்து
இறங்குகின்றன
சீருடைத் தேவதைகள்
காத்திருக்கின்றனர்
கார் டிரைவர்கள்
வீட்டு மதில்களுக்குள்
குழந்தைகளை
திரும்பக் கொண்டு சேர்க்க.
ஜாமங்கள் கடந்தபின்
வந்து சேரும் பெற்றோரை
வார இறுதி
ஐஸ்கிரீம் பார்களில் தான்
நிதானமாய்ப் பார்க்கின்றன குழந்தைகள்.
ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களில்
கிரெடிட் கார்ட் தேய்த்து
பிட்சா தின்று
வீடு திரும்புகையில்,
சீட்பெல்ட் மாட்டி அமர்ந்திருக்கும்
குழந்தைகளின் கண்களில்
ஏக்கத்தை வரவழைக்கின்றனர்
சேரிக்கரையில் விளையாடும்
சுதந்திரச் சிறுவர்கள்.
படிப்பில் உயர்ந்து விட்டோம்.பணத்தால் உயர்ந்துவிட்டோம்.
நாகரீகத்தாலும் உயர்ந்துவிட்டோம்.பாசம்தான் இவற்றுக்குள் மறைந்துவிட்டது.பாசதிற்காக ஏங்கும் குழந்தைகள் மட்டும் அல்ல அண்ணா.நாங்களும்தான் பாவம்.
LikeLike
😦 உங்கள் கவிதை படித்து கதிகலங்கி விட்டேன் சகோதரி 😦
LikeLike
அற்புதம் சேவியர், இன்று குழந்தைகளுக்கு குழந்தை
பருவம் என்பதே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறதோ என்று எனக்குள் எப்பொழுதும் ஒரு கேள்வி இருக்கிறது 😦
LikeLike
இன்று சீருடை அணிவதே
நாளைய ஓட்டத்துக்கே…
இன்று ஐஸ்க்ரீம், பிட்சாவாவது
அம்மா அப்பாவுடன்
கிடைக்கிறது…
நாளை அதுவும் சந்தேகமே…..
பாசம் விதைக்க
எந்தச் சீருடை அணிந்து
எந்தப் பள்ளிக்கூடம் அனுப்ப???
அன்புடன் அருணா
LikeLike
சேவியர் அண்ணா… கவிதை மிக அபாரம்…எனக்கு வருங்காலத்தைப் பற்றிய கனவு(கவலை) துணையாக வருபவளை விடவும், என் குழந்தைகளைப் பற்றியே இருக்கிறது. என் மனதில் இருப்பதைப் படம் பிடித்தது போல் உங்கள் கவிதை..
இன்னும் பல …
தாய்மொழி,விளையாட்டு,கலை, இதையெல்லாம் விட எனக்குப் பெரிய கவலை சம்பாதிக்கும் இயந்திரமாக வளர்ப்பதா இல்லை நேர்மை,தூய்மை உள்ளவளாக வளர்ப்பதா என .. ஏனென்றால் இரண்டும் இரு வேறு துருவங்கள்…
LikeLike
கவிதைப் படக் குழந்தை கொள்ளை அழகு…
LikeLike
//அற்புதம் சேவியர், இன்று குழந்தைகளுக்கு குழந்தை
பருவம் என்பதே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறதோ என்று எனக்குள் எப்பொழுதும் ஒரு கேள்வி இருக்கிறது //
சென்னையில் பரவாயில்லை. குறைந்த பட்சம் பூங்காக்களாவது உயிரூட்டப்படுகின்றன 🙂
LikeLike
//பாசம் விதைக்க
எந்தச் சீருடை அணிந்து
எந்தப் பள்ளிக்கூடம் அனுப்ப???
அன்புடன் அருணா//
அருமையாய் சொன்னீங்க அருணா..
LikeLike
//தாய்மொழி,விளையாட்டு,கலை, இதையெல்லாம் விட எனக்குப் பெரிய கவலை சம்பாதிக்கும் இயந்திரமாக வளர்ப்பதா இல்லை நேர்மை,தூய்மை உள்ளவளாக வளர்ப்பதா என //
கவலையே படாமல் நேர்மை, தூய்மை, குடும்ப உறவு, பணிவு என நல்ல மதிப்பீடுகளின் படி வாழப் பழக்குங்கள். கரன்சிகள் குறைந்தாலும் நிம்மதி நிறையும்.
LikeLike
/கவிதைப் படக் குழந்தை கொள்ளை அழகு/
வருகைக்கு நன்றி தமிழ்பறவை. பாராட்டு குழந்தையைச் சென்றடையட்டும் 🙂
LikeLike
எனக்கும் முன்பு இப்படிதான் இருந்திருக்கிறது… அதனால் தான் என்னவோ சுதந்திரம் கிடைத்தவுடன் அளவுக்கு அதிகமாகவே ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறேன்.
LikeLike
இருக்கலாம்… இருக்கலாம் 🙂
LikeLike
அன்புள்ள சேவியருக்கு,
கவிப்பேரரசு வைரமுத்து தன்னுடைய திரைப்பட பாடல் வாழ்க்கை குறித்து பேசும் போது ” இன்று தங்கக் கூண்டில் இருக்கும் கிளி நான் ” என்று சொன்னார்.அந்த நிலை தான் இன்று இருக்கக் கூடிய குழந்தைகளுக்கும் இருக்கிறது என்பதை வேதனையோடு எடுத்துச் சொல்லும் பதிவு 😦
பூவை செடியோடு இருக்க விட்டு ரசித்து பார்க்க எவனால் முடிகிறதோ, அவன் தான் மனசாட்சியுள்ள உண்மையான மிகப் பெரிய ரசிகன். அதே போன்று, வயது வித்தியாசமின்றி எல்லோரையும் ஒருமையாகப் பேசும் தன்மையையும், நாகரிகப் பழக்க வழக்கங்களின் இலக்கணங்களுக்கு அப்பாற்பட்டு முகமூடி இல்லாமல் செய்யும் நையாண்டித்தனத்தையும் ரசிக்க நேரம் ஒதுக்கக் கூடிய பெற்றோரே மிகச் சிறந்த பெற்றோர்கள் . அப்படிப்பட்டவர்களே பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதி அரசு கொண்டு வரலாம் 🙂
நட்புடன்
குகன்
நட்புடன்
குகன்
LikeLike
//பூவை செடியோடு இருக்க விட்டு ரசித்து பார்க்க எவனால் முடிகிறதோ, அவன் தான் மனசாட்சியுள்ள உண்மையான மிகப் பெரிய ரசிகன்//
கலக்கலா சொன்னீங்க…
//அதே போன்று, வயது வித்தியாசமின்றி எல்லோரையும் ஒருமையாகப் பேசும் தன்மையையும், நாகரிகப் பழக்க வழக்கங்களின் இலக்கணங்களுக்கு அப்பாற்பட்டு முகமூடி இல்லாமல் செய்யும் நையாண்டித்தனத்தையும் ரசிக்க நேரம் ஒதுக்கக் கூடிய பெற்றோரே மிகச் சிறந்த பெற்றோர்கள் .
//
உண்மை.. உண்மை.. உண்மை !!!
//
அப்படிப்பட்டவர்களே பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதி அரசு கொண்டு வரலாம்
//
அப்படிக் கொண்டு வந்தால் நகரவாசிகள் முக்கால் வாசி பேர் கதி அதோ கதி தான் 😀
LikeLike